இலங்கை அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டம் -ரணில் எச்சரிக்கை

 இலங்கை அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டம்  -ரணில் எச்சரிக்கை

மே மாதம் 9ஆம் தேதி இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்ச விலகி யிருந்தார். ஜூன் 9ஆம் தேதி பஸில் ராஜபக்ச பதவி விலகியிருந்தார். ஜூலை 9ஆம் தேதி கொழும்பில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தப்பியோடி கடந்த 14ஆம் தேதி பதவி விலகி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது ‘ரணில் வீட்டுக்குப் போ’ என்பதே மக்களின் கோரிக்கை. இதற்கு மதிப்பளித்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியிலிருந்து உடனடி யாக விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லையேல் ராஜபக்சக்கள் போல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மக்களால் அவர் வீட்டுக்கு விரட்டியடிக் கப்படுவார் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கொழும்பு காலி முகத்திடலில் அன்றும் போராடியவர்கள் மக்கள்தான். இன்றும் போராடுபவர்கள் அதே மக்கள்தான். இந்நிலையில், அமைதி வழியில் போராடும் மக்களைக் கிளர்ச்சியாளர்கள் என்று பொய் கூறி அவர்கள் மீது ஆயுதப் படை களைக் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மாபெரும் அராஜகம். இது போராடும் மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த கால நிலை

விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக் காவிடினும், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.

2018 அக்டோபர் 26 இல் விக்கிரமசிங்க அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத் திற்குப் புறம்பானது எனக் கூறி பதவி விலக மறுத்தார். இதனை அடுத்து, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 2018 டிசம்பர் 16இல் விக்கிரமசிங்க விற்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

2019ல் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச பெரும் வெற்றி அடைந் ததை அடுத்து, விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20இல் பிரதமர் பதவியைத் துறந்தார்.

இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், இவரது கட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை. இருப்பினும், கட்சிக் குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் இவர் 2021 ஜூன் 23 அன்று நாடாளுமன்றம் சென்றார்.

2022 இல் நாட்டில் இடம்பெற்ற பெரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங் களின் விளவாக மகிந்த ராஜபக்ச 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 2022 மே 12 அன்று ரணில் விக்கிரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்தார்.

2022 ஜூலை 9 அன்று ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப் பட்டது. கோட்டாபய ராஜபக்ச தலைமறைவானார். அன்றிரவு கொள்ளுப்பிட்டி யில் உள்ள விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

2022 ஜூலை 13இல் கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியதை அடுத்து அவர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் அதிபராக நியமித்தார்.

2022 ஜூலை 14 அன்று கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, பிரதமராகப் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க ஜூலை 15இல் பதில் அதிபரானார்.

2022 ஜூலை 20இல், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று 8-வது நிறைவேற்ற திகாரம் கொண்ட அதிபராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டளஸ் அளகப்பெரும 82 வாக்குகள் பெற்றார்.

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி. மட்டுமே. ரணில்தான் அந்த ஒற்றை எம்.பி. ஒரே ஒரு எம்.பி.யை வைத்துக்கொண்டு முதலில் பிரதமரானவர், தற்போது அதிபராகிவிட்டார். இதற்கு கோத்தபய ராஜபக்சேவும், அவரின் கட்சியின் சில எம்.பி.க்களும் ஒரு காரணம் என்றால், ரணிலின் சாமர்த்தியம் மற்றொரு காரணம். கோத்தபயவை வெளியேற்றியதைப் போல, ரணிலை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவது சுலபமல்ல. அவ்வளவு எளிதில் அவர் அதிபர் பதவியைவிட்டு விலகமாட்டார். நிலையான அரசு அமையும் பட்சத்தில் உலக நாடுகளின் உதவி கிடைக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறவும் ரணில் அரசு முயன்றுவருகிறது. அதுவும் கிடைத்துவிட்டால், மக்கள் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், தற்போது தனக்கு எதிராகப் போராடும் மக்களைச் சமாளிக்க ரணிலி டம் என்ன திட்டம் இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் அதிபரான விக்கிரமசிங்கவிடம் இலங்கையின் மூத்த பத்திரிகை யாளர்கள் ஒருவர் கேள்வி கேட்டார்.

“நீங்கள் ராஜபக்சேக்களின் பழைய நண்பர்தானே, அவர்களிடமிருந்து எப்படி வேறுபடப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

“என்னை எப்படி ராஜபக்சேக்களின் பழைய நண்பர் என்று சொல்ல முடியும்? நான் எப்போதும் அவர்களை எதிர்த்துக்கொண்டேதான் இருந்தேன். வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அதற்காக நான் அவர்களின் நண்பராகிவிட முடியாது”.

இதற்கிடையே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி முகத்திடல் போராட்டக் களத்தின் பிரதிநிதிகள், “ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே தமது இரண்டாவது முக்கிய கோரிக்கை” என குறிப்பிட்டனர்.

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ள தால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு முடிவை எடுத் துள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சே ஆட்சியால் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வரப்பட்டுள்ளார். எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கும் எதிராக எமது அமைதியான போராட்டங்கள் தொடரும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் அனுமன் வைத்த தீ இன்னும் கொழுந்துவிட்டு எரிந்துகொண் டிருக்கிறது. இலங்கையில் என்றுதான் அமைதி திரும்புமோ?

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...