தியாகத்தின் வரலாறு தமிழ்நாடு பெயர் சூட்டிய நாள் இன்று

 தியாகத்தின் வரலாறு தமிழ்நாடு பெயர் சூட்டிய நாள் இன்று

பேரறிஞர் அண்ணாவால் 18.7.1967-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் இன்று கொண்டா டப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தமிழ்நாடு நாள் விழா நடந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமாகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் முதலமைச்சர்  இந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்கவில்லை. அதனால் காணொலி மூலம் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

“தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. தமிழ் நாடு என்று பெயர் சூட்டுவதற்கே பல பத்தாண்டு காலம் போராட வேண்டி இருந்தது. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால்தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது. தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது தி.மு.க.வின் சாதனையாகும். கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழ்நாடு நகரமயமாக இருந்தது என்பதற்கு கீழடியே ஆதாரம் ஆகும். தமிழ் இனம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இனம் என பெருமிதம் கொள்கிறேன். தாழ்ந்து கிடந்த தமிழகத்தைத் தலைநிமிரச்செய்த நாள்தான் ஜூலை 18 தமிழ், தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை யல்ல, ரத்தமும் சதையும் கொண்ட உரிமைப் போராட்டம். தமிழன் என்று சொல்வது குறுகிய நோக்கம் அல்ல” என்றார்.

மெட்ராஸ் தமிழ்நாடு ஆன கதை

ராஜ்ஜியங்கள் பல வந்து போயினும் இந்த நிலப்பரப்பில் பரவி வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்பதால் இதற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு அழைத்து வந்துள் ளனர்.

1946களின் தொடக்கத்தில் முதன்முதலில் மதராஸ் மாகாணம் என்றிருந்ததை தமிழ்நாடு என்ற பண்டைய பெயரில் மாற்றக்கூறும் தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியது மா.பொ.சி. தலைமையிலான ‘தமிழரசுக் கழகம்’. அந்தத் தீர்மானத்தின் உந்துதலால் 1956ல் சங்கரலிங்கனார் தனியாக 75 நாள்கள் ‘தமிழ் நாடு’ எனப் பெயரை மாற்றும்படி உண்ணா நோம்பிருந்து உயிர் துறந்தார். சங்கர லிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோ தாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 ஜனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு பெயர் சூட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னாளில் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு 1967, ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக, 1968 ஜூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நவம்பர் 23, 1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதையடுத்து டிசம்பர் 1, 1968இல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழா வாகக் கொண்டாடப்பட்டபோது சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு பெயர் சூட்டக் காரணமானவர் சங்கரலிங்கனார்

விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு ஊரைச் சேர்ந்தவர் சங்கரலிங்கனார்.  அரசியலில் ஈடுபடாவிட்டாலும்  காந்தியடிகளின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டு, அவருடன் தண்டி யாத்திரையில் பங்கேற்றார்.

1956ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மொழிவாரியாக மாகாணம் வேண்டும்; மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற் றம் செய்ய வேண்டும்; பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்; ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாகப் பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். இவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் விருதுநகரில் தனது வீட்டின் முன்பு ஜூலை 27ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி, அறிஞர் அண்ணா, காமராஜர், ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் கோரிக்கை நிறை வேறும் வரை உண்ணாவிரத்தைக் கைவிடப்போவதில்லை என்று திட்டவட்ட மாகக் கூறிய சங்கரலிங்கனார், தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் 1956ஆம் ஆண்டின் அக்டோபர் 13ஆம் தேதி தனது இன்னுயிரை நீத்தார் சங்கரலிங்கனார். சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...