தனியார் பள்ளி +2 மாணவி மர்ம மரணமும் கலவரமும்
ஜூலை பன்னிரண்டாம் தேதி நடந்த ஸ்ரீமதியின் மர்ம மரணம் பெரிய கலவரமாக வெடித்தது. ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு பொதுமக்கள் அந்தப் பள்ளியைத் தீக்கு இரை யாக்கி விட்டார்கள். 32 பள்ளி பஸ்களை சில பஸ்களை எரித்துவிட்டார்கள்.
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. தகவலறிந்து வந்த சின்னசேலம் காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர்.
அந்தப் பெண்ணுடைய தாயாரின் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்க வில்லை. மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத்தான் அறிவித்தார்கள்.
ஸ்ரீமதியின் தாயார் அந்தப் பள்ளி மாடிப்படி கைப்பிடியில் ரத்தம் படிந்த கை பதிவு இருந்ததைப் பற்றி பள்ளி சரியான விளக்கம் தரவில்லை.
அந்தப் பெண்ணுக்குப் பின் தலையில் மட்டும்தான் அடிபட்டு இருந்தது. மற்றபடி கீழே விழுந்ததற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை. கை, கால்கள் உடைய வில்லை. காவல்துறை தரப்பில் இருந்து தடையங்களை விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
ஸ்ரீமதியின் தாயார் அந்தப் பள்ளி விடுதியில் இதற்கு முன்பாக 6 குழந்தைகள் மரணம் அடைந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான தடையங்கள் எதுவும் கிடையாது. இந்த வழக்கு இப்போது ஒரு பெரிய போராட்டமாக உருவாகி விட்டது.
நேற்று திடீரென ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்னசேலம் நகரம் போராட்டக் களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கி–சூடு நடத்தினர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர–பாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத் தப்பட்டது.
மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட தாக 329 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி மீது எடுத்த நட வடிக்கை, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோ தனை செய்யக்கோரி, அவரது தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் பிரேதப் பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சதீஷ்குமார், தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படிச் சொல்லலாம்? நீங்கள் இத்துறையின் நிபுணரா? என கேள்வி எழுப்பினார். அதேசமயம், இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனைக்குப் பின் மனுதாரர் வேறு எந்தப் பிரச்சினையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ‘மறு பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும், சமூக வலைதளங்கள், மீடியா டிரையல் நடத்த அனுமதிக்கக்கூடாது. மறு பிரேதப் பரிசோதனையின்போது மனுதாரர் தனது வக்கீலுடன் இருக்கலாம்’ என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நீதிபதி கூறியதாவது: சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசார ணையை நீதிமன்றம் கண்காணிக்கும்.