தடகள ஓட்ட ராணி பி. டி. உஷா

 தடகள ஓட்ட ராணி பி. டி. உஷா

கேரளாவைச் சேர்ந்த பி. டி. உஷா 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளை யாட்டுத் துறையில் பங்கெடுத்து மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர். ‘இந்தி யத் தடகளங்களின் அரசி’ எனக் குறிப்பிடப்படும் இவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறார். 1985லும் 1986லும் உலகத் தடகள விளையாட்டு களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்.

பி.டி.உஷா  1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ‘பய்யோலி’ என்ற இடத்தில் பைத்தல் என்பவருக்கும் லட்சுக்கும் மகளாகப் பிறந்தார்.

சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவர், தன் னுடைய பள்ளியில் நடக்கும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொள்வார். அதேபோல் 1976 ஆம் ஆண்டு கேரளா மாநில அரசு, கண்ணூரில் பெண்களுக்கான விளையாட்டுப் பள்ளியைத் தொடங்கியது. அதில் கோழிக்கோடு மாவட்டத்தின் சார்பில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தடகள விளையாட்டில் புயல் வேகத் திறமையினை வளர்த்துக்கொண்டு வந்த அவர், முதன் முதலாக 1977 ஆம் ஆண்டு தன்னுடைய 13 வயதில் தேசிய அளவி லான தடகள விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு, தன்னு டைய முதல் தேசிய சாதனையைப் படைத்தார். பிறகு, தொடர்ந்து பல தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றதோடு மட்டுமல்லாமல், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தேசிய அளவில் பல தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களையும், பல ருடைய பாரட்டுகளையும் வென்ற அவர், பின்னர் சர்வதேச அளவில் கால் பதிக்கத் தயாரானார். 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டி யில் முதன்முதலாக சர்வதேச அளவில் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் பங்கேற்று, பதக்க வாய்ப்பை இழந்தாலும், அதன் பிறகு 1982 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதுவே அவருடைய முதல் சர்வதேச பதக்கமாகும்.

பின்னர் குவைத்தில் நடைபெற்ற சாம்பியன் தடகளப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில், ‘தங்கம்’ வென்று புதிய சாதனைப் படைத்தார். அதன் பிறகு, 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 23வது ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில், அரையிறுதியில் முதலாவதாக வந்தாலும், இறுதி ஓட் டத்தில் 100ல் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டப்பந்தயத்தில் அவரே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்.

1986ல் சியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்திலும் முழு ஆதிக்கம் செலுத்தி, தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று வெற்றிவாகை சூட்டினார். இச்சாதனையைப் பாராட்டி, மத்திய அரசு அவரை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கியது.

அதன் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆசிய விளையாட்டுப் போட்டி களில் கொடிகட்டிப் பறந்த அவர்களுக்கு ‘ஆசிய தடகள ராணி’ எனப் பட்டம் சூட்டப்பட்டது. 1983 முதல் 1989 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அவர், சுமார் 13 தங்கப் பதக்கங்களை வென்றார்.

சுமார் 28 வயதுவரை விளையாட்டு மட்டுமே வாழ்க்கைத் துணை என்று பய ணித்த பி. டி. உஷா, 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் மலப்புரம் மாவட்டத்தில் வசித்துவந்த சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண் டார். சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, சுமார் 3 ஆண்டுகள் விளையாட்டில் பங்கேற்காமல் இருந்த அவர், தன்னுடைய கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக மீண்டும் போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார். 
1998ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ‘வெண்கலப் பதக்கம்’ வென்றார். ஆசியப் போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பி. டி. உஷா, அதுவரை அவர் பங்கேற்ற சர்வதேசப் போட்டிகள் மூலம் சுமார் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.

காலில் தொடர்ந்து அவருக்கு வலி ஏற்பட்டதன் காரணமாக, ஓய்வு எடுத்துக் கொள்ள முடிவு செய்த அவர், ஜூலை 25, 2000-ல் தனது 36வது வயதில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சுமார் 20 ஆண்டுகளாகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பல சாதனைகளைப் படைத்து, இந்திய விளை யாட்டுத் துறைக்கு அரிய பங்காற்றிய அவரை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’  மற்றும் ‘அர்ஜுனா’ விருதுகளை வழங்கியதோடு மட்டு மல்லாமல், இந்திய ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பணியையும் வழங்கி கௌரவித்தது.

சாதனைப் பெண் பி.டி.உஷா தற்போதைய பல இளம்பெண்களுக்கு உதாரணம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...