மூன்று முன்னாள் முதல்வர்களின் சொத்துக் கணக்கு
முதல்வர் 1
இன்றைய காலத்தில் மக்கள் சேவை செய்ய வரும் ஒரு மாநகராட்சித் தலைவ ரின் சொத்து மதிப்பே எவ்வளவு என்பது பரலாகத் தெரியும். ஆனால் மாநகராட் சித் தலைவராக ஆவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தார் என்பது தெரியும். அதிலும் எம்.எல்.ஏ., எம்.பி. என்றால் அவர்களின் சொத்து மதிப்பு தேர்த லில் நிற்கும்போது காண்பிக்கப்படுவதே கண்ணை மறைக்கும் உண்மை சொத்து மதிப்பு எவ்வளவு என்றால் மக்களில் பாதிப்பேருக்கு மாரடைப்பு வந்துவிடும். அதிலும் மந்திரியாக இருப்பவரின் சொத்து மதிப்பு கேட்கவே வேண்டாம். மேலும் முதலமைச்சராக இருந்தவர்கள் என்றால் சொத்துமதிப்பு கணக்கிடவே முடியாது.
இவர்களில் குறிப்பிட்ட ரத்தினங்களாக சில முதல்வர்கள் சொத்து சேர்க்காமல் வாழ்ந்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சொக்கத்தங்கங்களாக உள்ள இரண்டு முதல்வர்களைப் பார்ப்போம்.
பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் தன் வாழ்வை 55 ஆண்டுகளைப் பொது வாழ்வுக்காக அர்ப்பணித்தவர். அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு தனது காரில் ஒரு பயணத்துக்காகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது நடைமுறைப் படி முதல்வருக்கான கான்வாய் வாகனங்களும் சைரன் சத்தத்துடன் பாதுகாப்புக் காகச் சென்று கொண்டிருந்தன. இதனைக் கவனித்த பெருந்தலைவர், தனது காரின் உள்ளே இருந்த உதவியாளரிடம் முன்னே செல்லும் சைரன் கார்களை நிறுத்துமாறு கூறுகிறார். கார் நிறுத்தப்பட்டவுடன் அதிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்து, நான் நன்றாகத்தானே இருக்கிறேன், எதற்கு எனக்கு முன்பு சங்கு ஊதிக்கொண்டு செல்கிறீர்கள் என கேட்கிறார்.
முதல்வரின் இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்ப்பாராத அதிகாரிகள் தங்களின் பாதுகாப்புக்காக நடைமுறைப்படி தான் செல்கிறோம் என கூறுகின்றனர். உடனே காமராஜர், நான் முதல்வராக வரவேண்டும் என்றுதான் மக்கள் என்னைத் தேர்ந் தெடுத்துள்ளனர். அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி அவர்கள் அச்சுறுத்தல் கொடுப்பார்கள். எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. உதவிக்கு மட்டும் ஒரு கார் வரட்டும். மற்ற கார்கள் புறப்படலாம் எனக் கூறிவிடுகிறார்.
பாதுகாப்புக் கருதி அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதனை பெருந்தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கான டீசல், சம்பளம் என பல வகைகளில் அரசுக்கு ஏற்படும் செலவு குறையும் எனக்கூறி கான்வாயைத் தவிர்த்துவிட்டார் காமராஜர்.
அதேபோல் அவர் தன் அம்மாவிற்கு மாதம் ரூ. 120 மட்டும் அனுப்பிக் கொண் டிருந்தார். கூடுதலாக வெறும் முப்பது ரூபாய் கேட்டதற்கு, “நீ வீண் செலவு செய்துவிடுவாய்” எனக் கூறி மறுப்புத் தெரிவித்த தலைவர் காமராஜர்.
காமராஜர் இறந்தபோது அவரிடம் இருந்தது நான்கு கதர் வேட்டி, சட்டை, 350 ரூபாய் மட்டுமே.
முதல்வர்-2
1980ல் 31ம் வயதில், திரிபுராவின் அகர்தலா சட்டமன்றத் தேர்தலில் வென்றதன் மூலம், மாணிக் சர்க்காரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1983 தேர்தலிலும் இவர் வென்றார். 1998 முதல் கடந்த 20 வருடங்களாக திரிபுராவின் முதல்வராக இருந்தவர் மாணிக் சர்க்கார்.
இவரது 20 வருட முதல்வர் வாழ்க்கையானது 2018ஆம் ஆண்டில் முடிவிற்கு வந்தது. பின்னர் முதல்வர் பதவியை இழந்ததால் அரசு குடியிருப்பு பகுதியில் இருந்து காலிச் செய்து, இவரும் இவரது மனைவியும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியேறினர்
நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த இந்திய மாநில முதல்வர்களுள் ஒருவர் மாணிக் சர்க்கார். மார்க்சிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் மற்றும் கொள்கை வகுக்கும் குழுவான பொலிட் பீரோவின் உறுப்பினராக இருந்தார்.
திரிபுராவில் மூன்றாவது முறை முதல்வராகப் பதவி வகித்தபோது, மாணிக் சர்காரின் சொத்து மதிப்பு ரூ.13,500 மட்டும்தான். அவருக்கு கிடைத்த மாத ஊதியம் ரூ.9,200. படிகள் ரூ.1,200. இவற்றைத் தான்சார்த்த மார்க்சிஸ்ட் கட்சிக்கே கொடுத்துவிடுவார் மாணிக் சர்கார். இவருக்கென்று சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. இவரது மனைவி பாஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறை யில் பணியாற்றினார். பிறகு மனைவியின் ஓய்யூதியத்தில்தான் குடும்பம் நடத்தினார். முதல்வராக இருந்தபோது அவர் தனது மனைவியுடன் வெளியே செல்லும்போது அரசு காரைப் பயன்படுத்த மாட்டார். எந்தப் பாதுகாவலரும் இன்றி ரிக்சாவில்தான் செல்வார்.
முதல்வர் 3
ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள்.
1. விலை உயர்ந்த சேலைகள் – 11344
2. ஏசி மெஷின் – 44
3. டெலிபோன்/இண்டர்காம் – 33
4.சூட்கேஸ் – 131
5. கைக் கடிகாரம் – 91
6.சுவர்க் கடிகாரம் – 27
7. மின்விசிறி. – 86
8. அலங்கார நாற்காலி – 146
9. டீ பாய். – 34
10. மேஜை – 31
11. கட்டில் – 24
12. டிரஸ்ஸிங் டேபிள்- 9
13. தொங்கும் விளக்கு – 81
14. ஷோபா செட் – 20
15. செருப்பு. – 750
16. டிரசிங் டேபிள் கண்ணாடி – 31
17.கிர்ஸ்டல் கண்ணாடி – 215
18. இரும்பு பூட்டுகள் – 3
19. சால்வை – 250
20. பிரிட்ஸ் – 12
21. பணம்- 160,514; 32688
22. டி வி – 10
23. VCR – 8
24. வீடியோ கேமரா – 2
25. C D பிளேயர் – 4
26. ஆடியோ டெக் – 2
27. 2 இன் 1 டேப் – 24
28. வீடியோ கேசட் – 1040
29. தங்க, வைர, வைடூரியம், ரூபி,
எம்ரால்டு – நகைகள், வைர கடிகாரங்கள் – தங்க சாமி சிலைகள், தங்க மாங்காய், தங்க மயில், தங்க பூஜை சாமான் – 468
39. வெள்ளி பொருட்கள் – 700 கிலோ.
இவற்றை எல்லாம்
ஏலம் விட உச்ச நீதிமன்றம் உத்தரவு.
ஜெயலலிதா சொத்துக்கள் ஒரு பக்கம் ஏலத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் அவர் கட்டிக்காத்த அ.தி.மு.க. கட்சி துட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.