விஜய் போடும் அரசியல் கணக்கு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தனது பிறந்த நாளை எளிமை யாகக் கொண்டாடி வந்தார். அவரது ‘தலைவா’ படத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அவரது பிறந்தநாள் ரசிகர்களால் விமர்சையாகக் கொண்டாட் டப்பட்டு வருகிறது. அதன் பிறகு நடக்கும் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி யில் ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு குட்டிக் கதை சொல்லும் பழக்கம் விஜய்க்கு வந்தது.
இந்தக் கதைகளில் பெரும்பாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டும் விஷயங்களே அதிகமாக இருக்கும். ஆனால் அதுவும் அரசியல் கண்ணோட்டத் துடன் பார்க்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது ‘பீஸ்ட்’ படத்திற்குப் பாடல் வெளியீட்டு விழாவே நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.
ஆனால் இதற்குப் பின்னாலும் அரசியல் இருப்பதை விஜய் நன்றாகவே உணர்ந்து கொண்டார். இந்த முறை கொஞ்சம் அமைதி காத்து எந்தக் கருத்தும் சொல்லா மல் இருந்துவிட்டார். இந்த நிலையில்தான் அவரது பிறந்த நாளுக்கு ரசிகர் களுக்கு வாழ்த்துச் செய்தியைக் குரல் வழியாக அனுப்பினார். அந்தப் பதிவில் கூறி யிருப்பதாவது,
‘நீ நதி போல ஓடிக்கொண்டிரு’ என்று டைட்டில் தரப்பட்டுள்ளது.
“கிட்டத்தட்ட நம்ம எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு நதி போலத்தான் இருக் கும். ஒரு நதி ஓரிடத்தில் புறப்பட்டு அதோடு வழியில் வரும். அப்படி அந்த நதி ஓடும்போது, ஓரிடத்தில் அதை விளக்கேற்றி வரவேற்பார்கள். இன்னும் சில இடத்தில் நதி மீது பூப்போட்டு வரவேற்பார்கள். அப்பவும் நதிபாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும். நதி ஓடும். அந்த நதியில் சிலர் கல்லை எறிவார்கள். பிடிக்காதவர்கள் நம் மீது கல் எறிவது போல்.
ஆனாலும் அந்த நதி தன்பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரிதாங்க நம்ம வாழ்க்கையும். நம்மை வணங்குபவர்களும் இருப்பார்கள். வரவேற்பவர்களும் இருப்பார்கள். எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதனால் நாம் எல்லோரும் நதி போல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்” என்று குறிப்பிட் டிருக்கிறார்.
விஜய் மக்கள் இயக்கத்தினர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டதோடு, சில இடங் களில் வெற்றியும் பெற்றுள்ளனர். விஜய் அவ்வப்போது அவருடைய படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் பேசிவருகிறார்.
இருந்தாலும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “அரசுப் பதவிகளில் உள்ளவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணைய தளங்களில், போஸ்டர்களில் என எந்தத் தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதையுமோ இயக்கத்தினர் வெளியிடக் கூடாது.
இதன் மூலம் தனது அரசியல் பயணத்தைப் பதுங்கிப் பாயும் உத்தியைக் கடைப் பிடிக்கிறார் விஜய் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
அரசியல் களத்தில் நேரடியாக இறங்கினால்தான் தெரியும். விஜய்யின் உண்மை முகம்.