பூப்படைந்த பெண்கள் உட்கொள்ளவேண்டிய சத்தான உணவுகள் என்ன?
பூப்படைதல் அதாவது பருவம் அடைதல். இந்தச் சூழ்நிலை பெண்ணுக்குப் புரியாத வயது. புதிதான அனுபவத்தால் பயம்.. இனம் புரியா வேதனை இருக்கும். அந்த நேரத்தில் ஒரு தாயின் கடமை மகளை அன்போடு அரவணைத்துக் கொள்ளுதல். அன்போடு நெற்றியில் முத்தமிட்டு தாய்மை யின் அன்பைப் பரிமாறி, தளர்வான மனதிற்குப் புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும்.
தான் வாழ்வில் கடந்துவந்த பாதையைப் புரியவைத்து, பயத்தைத் தெளிய வைத்து, பூத்தமலர் சிரிக்க புலகாங்கிதம் கொண்டு, அடுத்து செய்ய வேண் டிய வழிமுறையைத் தொடர்வேண்டும்.
ஒரு பெண் குழந்தை பூப்படைந்தால் அவளுக்கு மிக முக்கியமாக தேவைப் படுவது ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல் பாடு சிறப்பாக இருக்க வேண்டும். எலும்புகள் வலுவாகவும் ,சீரான மாத விடாய் சுழற்சிக்கும் இந்த ஹார்மோன் செயல்பாடுகள் உதவும்.
அதற்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளைப் பார்ப்போம்.
பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் ‘சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்’ என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடி யாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப் பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற் படும்.
எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்
உடல்பலம், மனபலம் வித்தாகி மாதவிடாய் சுழற்சி சீராகி, எதிர்கால வாழ்க் கை மிகச் சிறப்பாக வருவதற்கு முக்கியமாகச் செய்து கொடுக்கக் கூடிய அமிர்தமே உளுந்தங்களி.
இடுப்பு எலும்பை வலுப்பெறச் செய்து மாதவிடாய் சுழற்சியைச் சீர் செய்து இரும்புச்சத்து, கால்சியம் சக்தியை அதிகம் கொடுத்து, பெண்களின் உஷ்ணத்தைக் குறைத்து வயிற்றுவலியை மறக்கச்செய்து புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது உளுந்தங்களி. தொடர்ந்து இந்த மூன்று நாட்கள் உளுந்தங்களி செய்து ஒரு கப் அளவிற்குக் கொடுத்து வரவும்.
உளுத்த மாவு, சிறிது அரிசி மாவு சேர்த்து நீர் விட்டு நன்றாக கிண்டி வேகவைத்து, வெல்லக் கரைசல் ஏலக்காய் முந்திரி, நெய் சேர்த்த களியின் சுவை , பூப்பெய்த மகள் அறிந்து கொண்டால், அதனை மூன்று நாட்களும் தொடர்ந்து உட்கொண்டால் எதிர்காலத் திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் அனைத்திற்கும் இந்த அமிர்தம் வித்தாகும்.
உடலளவிலும் மனதளவிலும் பலம் சேர்த்து மங்கையர் பல துறைகளில் சாகசம் செய்து சாதிப்பதற்கு உடலுக்குப் பலம் அளிப்பது உளுந்தங்களி. ஆதலால் வயதுப் பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை இந்தக் களியை உண வாக எடுத்துக் கொள்ளவும்.
மேலும் பேரீச்சம்பழம் பாலில் ஊறவைத்து தேன் கலந்து தினமும் இரவு எடுத்துக் கொள்ளவும்.
முருங்கைக்கீரை நாட்டு முட்டை சேர்த்துப் பொரியல் செய்து கொடுக்க…. இந்தச் சமயத்தில் உடல்நலம் சீராக வழிவகுக்கும்.
கெட்ட கொழுப்புகள் உடலிலிருந்து வெளியேற சமையலில் அதிகமாக சுத்தமான நல்லெண்ணெய் சேர்க்கவும்.
அதுமட்டுமல்லாது கீரை வகைகள் காய்கறி வகைகள் ,பருப்பு வகைகள் பழங்கள் என அனைத்தும் இந்த நேரத்திற்குப் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய உணவுகள்.
சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை. சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளை வாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்து விடும். அதனால் அதைத் தவிர்க்கவும்.
பெண் குழந்தைகள் அனைவரும் பெட்டகத்தில் மின்னக்கூடிய வைரக் கல்லாக ஜொலிக்க வேண்டும் என்பதை உறுதிக் கொள்ளுங்கள்.
வைரத்தின் ஒளி அவளை மட்டுமன்றி அவளைச் சுற்றிலும் ஒளி கொடுத்து, வாழ்வில் மலர்ச்சி பெற்று, சாதித்துப் புகழ்பெற்று வாழ வேண்டும் என நினைக்கும் தாய்மார்களுக்கு ஒரு நிமிட சிந்தனை…
பெண்ணே நீ பெண்ணாக இரு – பேறு பெற்றவள் நீயாயிரு! சோதனை வந்தா லும் துவளாதிரு புகழுக்கு என்றும் மயங்காதிரு!
சிந்தனை செய்வதில் தனித்துவமாய் இரு புதுமை புகுத்துவதில் முனைப் பாய் இரு. வெற்றிக்கனி கிடைத்து மனதிற்கு என்றும் மகிழ்வாய் இரு.