2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து பா.ஜ.க. தலைவர் நட்டா வியூகம்
2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது பா.ஜ.க. மாநில வாரியாகத் தொகுகளைத் தேர்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வாங்கிவருகிறார்கள்.
வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள் கட்சியைச் சேர்ந்த சிலர். தற்போது அ.தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் பா.ஜ.க. இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
கடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நைனா நாகேந்திரந்திரன் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சசிகலாவிடம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அறிந்த அதிமுக தலைவர்கள் பா.ஜ.க.வை விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போர் ஒரு பக்கமிருக்க பாஜக தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பாஜக என்ன செய்யவேண்டும் என ஆன்லைனில் பாடம் எடுத்துள்ளார்.
அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் தென்சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சிவகங்கை, ஈரோடு, தென்காசி ஆகிய எட்டு தொகுதிகளை முதல் கட்டமாகத் தேர்வு செய்துள்ளனர் பா.ஜ.க.வினர்.
இந்த எட்டு தொகுதி நிர்வாகிகளுடனும் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி வழியாகப் பேசினார். அப்போது தொகுதி நிலவரங்களைக் கேட்டறிந்து அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இந்தத் தொகுதிகளைக் கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்துள்ளார்கள்.
2024 தேர்தலைச் சந்திக்க பூத் கமிட்டிகளை உடனடியாக அமைப்பது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 பொறுப்பாளர்கள், நாடாளுமன்றத் தொகுதிக்கு 6 பொறுப்பாளர்களை நியமிப்பது ஆகிய அடிப்படைப் பணிகளை முதலில் முடிக்க வேண்டும் ஆணையிட்டுள்ளார் நட்டா,
மேலும் அந்தத் தொகுதியில் மாற்றுக்கட்சிகளில் அதிப்தியாக இருப்பவர்களை பா.ஜ.க.வில் சேரவைப்பது மற்றும் மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்களைத் தகுதியானவர்களுக்குக் கிடைக்கச் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ஜே.பி.நட்டா ஆலோசனை கூறியுள்ளார்.
தென்சென்னை தொகுதியில் 2014 தேர்தலில் பா.ஜ.க. தனித்துப்போட்டியிட்டது. அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய மணிப்பூர் கவர்னராக உள்ள இல.கணேசன் தி.மு.க.வைவிட கூடுதல் வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்திருந்தார். அதேபோல் கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 89 ஆயிரத்து 701 வாக்குகள் பெற்று தி.மு.க.வைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்திருந்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் பொன்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் ஒரு சட்டமன்றத் தொகுதியைக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி 2 லட்சத்துக்கும்மேல் வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்திருந்தது.
சிவகங்கை தொகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்று பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா 3வது இடத்தைப் பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரோடு பகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. வெற்றி பெற்றுள்ளார். 2 தொகுதிகளில் பா.ஜ.க. 2வது இடத்தைப் பிடித்திருந்தது.
2019ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவிலில் காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கோவை தெற்குத் தொகுதியில் வானதி ஸ்ரீநிவாஸன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகிய நான்கு பேர் வெற்றிபெற்றதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். தமிழகத் தலையெழுத்து அப்படி