எம்.எஸ்.தோனியின் சிறந்த பண்புகள்
சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 3.6.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியது:
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் நிர்வாகம் எப்படி இருக்குமோ, உடன் விளையாடும் வீரர்கள் எப்படி இருப்பார்களோ, ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்குமோ என பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால் சென்னை எனது இரண்டாவது இல்லம் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. சென்னை ரசிகர்கள்தான் அணியின் பலம். அவர்கள் என்னைத் தங்களில் ஒருவனாகப் பார்க்கின்றனர். அதைவிட பெரிய பரிசு வேறு எதுவும் இல்லை.
கடந்த ஆண்டில் சொந்த மண்ணில் வெற்றிகளை குவித்த இந்திய அணி, தற்போது ஆடி வரும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை அந்த அணியிடம் இழந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு தோனி கூறியதாவது:
தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்திருந்தாலும் சில நேர்மறையான விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டியில் ஓர் அணி வெற்றி பெற வேண்டுமெனில், 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்; இந்திய அணி அதைச் செய்திருக்கிறது.
இந்தியாவுக்கான வெற்றி தொலைவில் இல்லை. வெற்றி பெறுவது கடினம் என உணரும்போது டிராவை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக ரன்களை குறைவாக விட்டுக்கொடுத்து, அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று” தோனி கூறினார்.
எம்.எஸ்.தோனியின் பண்புகள்
தனது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற ICC யின் மூன்று உலகக் கோப்பை (2007 T20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை , 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ) வெற்றி கொண்டாட்டங்களின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை …
வெற்றிக் கோப்பையைத் தன் அணியினர் கையிலேந்திக் கொண்டாடுகையில் தான் ஒரு ஓரமாகவோ, இல்லை முழுவதுமே மறைந்து காணப்படுவார்.
2007 T20 உலக கோப்பை:
ராபின் உத்தப்பா கையில் உலக கோப்பை , அதே கை மறைக்கும் வகையில் கேப்டன் M.S.தோனி .
2011 உலக கோப்பை:
இடது ஓரத்தில் இரண்டாவது ஆளாக கேப்டன் M.S.தோனி .
2013 சாம்பியன்ஸ் ட்ராபி:
இடது மூலையில் கடைசி ஆளாக, கேப்டன் M .S. தோனி
தான் தலைமை ஏற்று வழிநடத்தும் IPL’களிலும் இதே தொடர்கிறது .
2018 ம் ஆண்டு மூன்றாவது முறையாக CSK கோப்பையை வென்று கொண்டாடுகையில் , அவரோ பின்னணியில் தன் ஆசை மகளுடன் விளையாடி கொண்டிருக்கிறார்
அணி முழுவதும் கோப்பையை கையிலேந்திக் கொண்டாடி கொண்டிருக்கையில்,
M.S.தோனியோ , தன் செல்ல மகளை கையிலேந்திக் கொண்டாடி கொண்டிருக்கிறார்.
அதே நேரம் 2015ஆம் வருடம் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ,அரையிறுதியில் ஆஸி. அணியிடம் தோற்ற பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தானே கலந்து கொண்டு தோல்விக்குப் பொறுப்பேற்கும் காட்சி…
இதுவே M.S.தோனி அவர்களிடம் நான் காணும் சிறந்த தலைமைப் பண்புகள்.
இவ்வகை தலைமை பண்பு கொண்டவர்களை இந்திய அன்னை ஈன்றெடுத்துக் கொண்டே இருப்பது, இந்தியர்களாகிய நாம் பெற்ற வரம்.