தூரிகையின் பெருமை | ஆதியோகி

 தூரிகையின் பெருமை | ஆதியோகி

தூரிகையோ, உளியோ, பேனாவோ
பெரிதாய்ப் பெருமை கொள்ள
என்ன இருக்கிறது…?
பெருமைமிக்க ஒரு
ஓவியனின், சிற்பியின், கவிஞனின்
கைகளில் கருவியாய்
இருந்ததைத் தவிர…

++++++++++++++++++++++
மகிழ்ச்சி
———–
நாளை வாடப் போவது
தெரிந்தும்தானா,
சிரிக்கின்றன பூக்கள்…?

++++++++++++++++++++++
வார்த்தைகள்
———–
‘பூக்கள் கூறும்
கவிதைகளை எல்லாம்
வடித்திடும் அளவுக்கு
தன்னிடம் வார்த்தைகளில்லை’
என்று புலம்புகிறது மொழி

++++++++++++++++++++++
எதிர்பார்ப்பு
———–
“நமக்கென்று எதிர்பார்ப்புகளே
இருக்கக் கூடாது”
என்றேதான்
எதிர்பார்க்கிறார்கள் எல்லோரும்.

++++++++++++++++++++++
காரணம்
———–
எரியும் தீ ஒருவேளை
அறிந்திருக்கக் கூடும்
‘தான் உறைந்து கிடந்தது
உரசிக் கொண்ட
குச்சியின் தலையிலா?
பெட்டியின் சுவரிலா?’

++++++++++++++++++++++

– ஆதியோகி

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...