சிறப்புகள் நிறைந்த சித்திரை

 சிறப்புகள் நிறைந்த சித்திரை

பெரும்பாலான ஆலயங்களில் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் சித்திரை மாதத்தில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன.

சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்தார். அன்றைய தினம் ‘மத்ஸ்ப ஜெயந்தி’யாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாள்தான், பூமியை பிரம்மன் படைத்த தாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. சித்திரை மாதத்தில் வரும் வளர் பிறை வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சித்ரா பவுர்ணமி அன்று, நெய்தீபம் ஏற்றிவைத்து குபேரனையும், அவரது மனைவி சித்ராதேவியையும் வழிபட்டால் செல்வம் சேரும். சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணியம் சேரும்.

சித்திரை மாத பரணி நட்சத்திரத்தில் பைரவரை நினைத்து விரதம் இருந் தால் காரிய தடை நீங்கும். சித்திரை மாத மூல நட்சத்திரம் அன்று, லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

சித்திரை மாத வளர்பிறை திருதியை அன்று, அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில் சிறிதளவு பொன் அல்லது உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.

சித்திரை முதல் நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில், அன்னாபி ஷேகம் நடைபெறும். சித்திரை மாத சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும். சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்திலிருந்து பூமிக்கு விஜயம் செய்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திரகுப்தர் தோன்றினார். ஒரு முறை சிவபெருமான் ஒரு சித்திரம் வரைந்தார். அந்த ஓவியம் உயிர்ப் பெற்று வந்தது. அவரே சித்திரகுப்தர். இவரை உயிர்கள் செய்யும் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக எமதர்மனுக்கு உதவியாளராக சிவபெருமான் நியமித்தார். இவர் எமதர்மனின் கணக்கராக இருந்து, பாவ- புண்ணிய கணக்குகளை எழுதி வருவதாக இதிகாச, புராணங்கள் கூறு கின்றன. சித்திரை மாத பவுர்ணமியில்தான், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

மஞ்சள் நீராட்டு

சித்திரை மாதத்திற்கு ‘சைத்ர மாதம்’ என்ற பெயரும் உண்டு. சைத்ர மகரிஷி பிறந்த மாதம் என்பதால் இந்தப் பெயர் வந்தது. மிகவும் புண்ணிய மாதமான சித்திரை, அம்மனுக்கு உகந்தது. எனவே தான் இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விழா எடுக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருப்பதால், வெயில் கூடுதலாக இருக்கும். அதன் தாக்கத்திலிருந்து நம்மை குளிர்ச்சி அடையச் செய்வதற்காக இவ்விழா வின்போது மஞ்சள் நீராட்டு விழா நடத்துகின்றனர்.

சந்திரன் வழிபாடு

சித்ரா பவுர்ணமி தினத்தன்று இரவில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்தால், என்றும் நித்ய கல்யாணியாக (தீர்க்க சுமங்கலி) இருப்பர் என்பது ஐதீகம். அன்று இரவில் தம்பதியர் பரிபூரணமாக பிரகாசிக்கும் சந்திரனைப் பார்த்து, களங்கம் இல்லாத வாழ்வு கிடைக்க வேண்டினால் குடும்பம் சிறப்பாக இருக்கும்.

கிரிவல நாள்

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது, சக்தி வாய்ந்தது. எனவே அன்றைய தினம் சத்யநாராயணர் மற்றும் சித்ரகுப்தரை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும். இந்நாளில் கிரிவலம் வருவதால் உடலுக்குப் புதுத்தெம்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக அருணாச்சலம் அருளும் திருவண்ணாமலை கிரிவலம் வாழ்வில் பல நன்மைகளை வழங்கும்.

குபேரனுக்கு உகந்த நாட்கள்

சித்திரை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் குபேரனுக்கு உகந்த நாட் களாகும். இந்த நாட்களில் 108 தங்கம் அல்லது வெள்ளிக்காசுகளால் மகாலட்சுமியை அர்ச்சித்து ‘லட்சுமி குபேர பூஜை’ செய்தால் வாழ்விற்குத் தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை யாகும். ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை பகவான் கொடுப்ப தில்லை. எனவே வசதி இல்லாதவர்கள் தங்க காசுகளுக்குப் பதிலாக 108 பூக்களால் பூஜித்தாலே போதும் அந்தப் பலன் கிடைத்துவிடும்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும்.

சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும்.

  • சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கி னால் நினைத்தது நடக்கும்.
  • சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர்.
  • மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும்.
  • மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும்.
  • சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்தால் வழக்கு களில் வெற்றி உண்டாகும்.
  • சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா, சித்ரா பவுர்ணமி அன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.
  • சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது.
  • சித்திரை திருவிழா மதுரை தவிர திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப் படுகிறது.
  • சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாக வும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும், இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
  • சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னா பிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
  • சித்திரை குப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்.
  • சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.
  • சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப் படுகிறது.
  • சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
  • சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படு கிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படு கிறது.
  • எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
  • ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...