1/4, 1/2, 3/4, 1 – ஓர் அறிமுகம்!!

 1/4, 1/2, 3/4, 1 – ஓர் அறிமுகம்!!

கார்த்திக், தினேஷ், ரேயான் மற்றும் சாத்விக் என்கிற நான்கு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலைக்கு வருகிறார்கள். நால்வரும் தமிழகத்தின் முக்கிய நகரங்களான, திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லையில் இருந்து சென்னை நிறுவனத்தில் பணியாற்ற வருகிறார்கள்.

கார்த்திக்கிற்கு எல்லாவற்றிலும் பெஸ்ட் வேண்டும். ஐஸ்வர்யா ராய் லெவலுக்கு மனைவி இருக்க வேண்டும். ஆனால் பெண்களை அடக்கி ஆளவே ஆண்கள் பிறந்திருக்கிறார்கள் என்கிற எண்ணம் உள்ளவன்.

தினேஷ் சோம்பேறி! ஒரு பெண் தன்னை அடக்கி ஆள அனுமதிக்க வேண்டும் என்றால், அவள், அவனை ஜாலியாக வைத்துக் கொண்டு, கேட்கும் போது பாக்கெட் மணி கொடுத்து, மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். மனைவி பணக்கார குமரிப் பெண்ணோ, விதவையாகவோ அல்லது கிழவியாகவோ இருந்தாலும் பரவாயில்லை..! ஆனால் கோடீஸ்வரியாக இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மை கொண்டவன்.

ரேயானின் தந்தை ஒரு மெடிக்கல் ரெப்..! தொழில் ரீதியாக மற்ற மாநிலங்களுக்கு பயணிக்கும் போது யாராவது ஒரு பெண்ணை மணந்து கொண்டு, இவள்தான் உன் சித்தி என்று அறிமுகப்படுத்தி, ரேயான் வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார். ஆனால் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை இருப்பதால், மாநிலத்திற்கு ஒரு பெண்தான். ரேயான் வீட்டிற்கு டெல்லி, குஜராத் , கர்நாடகா, ஆந்திரா, என்று பல சித்திகள் வந்து ரேயானிடம் பணம் பிடுங்கிக் கொண்டு போவார்கள். தெலுங்கானா மாநிலம் உருவானதும் ஒரு புதிய சித்தி வந்து பணம் பிடுங்க, ரேயான் பிரதமர் மோடிக்கு தந்தி அடித்து, என் குடும்ப நிலையை எண்ணி, இனி புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தான், என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவன் படும் சிரமங்களை. எனவே பெண்கள் எல்லோரும் பிரச்னைக்குரியவர்கள் என்று அவர்களை வெறுப்பவன்.

சாத்விக் நவநாகரீக பட்டணத்து பெண்கள் அனைவரும் அடங்காப்பிடாரிகள். கிராமத்து விரட்டி தட்டும் பெண் மனைவியாக வந்தாலும் பரவாயில்லை… அடங்கி நடப்பாள் என்கிற எண்ணத்தில் இருப்பவன்.

ஆணாதிக்க எண்ணம் கொண்ட இந்த நான்கு வாலிபர்கள் தங்கும், பிளாட் எதிரே ஒரு பெண் குடி வருகிறாள். மைசூரிலிருந்து வருவதால், அவளை . கன்னடபெண் என்று நினைக்க, அவளுடன் தகராறு செய்து, அவளை நால்வரும் தமிழில் திட்டி விடுகின்றனர். ஆனால் அவள் இவர்கள் அலுவலகத்திற்கே வருகிறாள். கடைசியில் அவள்தான் இவர்களது டீம் லீடர் கங்கணா என்பதை அறிந்ததும் இவர்களுக்கு பேரதிர்ச்சி.

தங்களது டீம் லீடர் ஒரு பெண் என்பதை ஜீரணக்க முடியாத நால்வரும் கங்கணாவை விரட்ட சதி செய்ய, அவள் எப்படி அவர்களுக்கு ஈடுகொடுத்து போராடுகிறாள் என்பதுதான் கதையின் கரு.

நால்வரையும் எடைபோடும் கங்கணா–

ஒருவன் கால் சதவீதம் பிரச்னைக்குரியவன்,

ஒருவன் அரை சதவீதம் பிரச்னைக்குரியவன்,

ஒருவன் முக்கால் சதவீதம் பிரச்னைக்குரியவன்,

கடைசி நபர் முழுவதுமாக பிரச்னைக்குரியவன்,

என்று உணருகிறாள். துரதிர்ஷடவசமாக முழுவதுமாக பிரச்சனைக்குரியவனைத்தான் அவள் காதலிக்க தொடங்குகிறாள்.

‘மின் கைத்தடி’யில் தொடர்ந்து உங்கள் விலாவை வலிக்க வைக்கப் போகிற நகைச்சுவைக் கதை–

காலச்சக்கரம் , நரசிம்மா-வின்

கால், அரை, முக்கால், முழுசு..!

நாளை முதல்….

ganesh

6 Comments

  • Expect good humor

  • கதைக்களம் அதகளம்.
    கதைக்கான அறிமுகம் ரணகளம்.
    கற்பனை செய்தால் ஒரு போர்க்களம் ஆரம்பம்…
    4 ஆண்~1 பெண் ‘ நகை’ ப்போருக்கு அது போராட்டங்களும்!

  • *போராட்டக்களம்

  • தம்பி கணேஷ்பாலா எழுத வேண்டியதை அண்ணன் எழுதுகிறார். We are waiting. Welcome sir.

  • Interesting

  • Super… Great expectations..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...