நீ இல்லாத நான் | பவானி

young couple is holding hands on a background sunset silhouette.
ஜென்மங்கள்
ஏழு என்றால்
உறுதியாக இருக்கும்
இந்த ஜென்மமே
இறுதியாக இருக்கட்டும்
இறைவா…
மரணம் வரை
விடை தெரியாத
ஒரே கேள்வி
யாரை நம்புவது ?
இழப்பின்
வலி
இழந்தவர்களுக்கு
மட்டுமே தெரியும்…
நீ
இல்லாத
நான்
என்றுமே
அனாதை தான்…
இழந்ததற்கு மாறாக
ஒன்று கிடைக்கும்
என்றால்
அது இழந்ததற்கு
ஈடாக அது
இருக்காது…
ஏமாற்றம் நிறைந்த
இந்த
உலகில் உன்னை
ஏற்ற நினைக்கும்
ஒரே ஜீவன்
உன் அப்பா…
மனதில்
இருக்கும் வலியை
மறைக்க
நம் உதடுகள்
போடும் நாடகமே
சிரிப்பு…
இதுவும்
கடந்து போகும்
ஆனால்
எதுவும்
மறந்து போகாது
மறத்தும் போகாது…
என்
முதலும்
நீ
என்
கடைசியும்
நீ…