இயக்குநர் ராஜமௌலி யார்? அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ராஜமௌலி சில படங்கள் மூலம் புகழை எட்ட வில்லை, படிப்படியாகத்தான் புகழ் பெற்றார். தமிழில் நமக்கு ‘மாவீரன்’ என்கிற ‘மகதீரா’ திரைப்படம் மூலமாகத்தான் தெரியும். ஆனால் இவர் இதுக்கு முன்பே தெலுங்கில் நிறைய படங்களை இயக்கியுள்ளார். இவரது சில படங்களைத் தமிழில் மறுஆக்கமும் செய் யப்பட்டுள்ளன. அவருடைய திரைப்படத்துறை பயணம் பற்றி அறிந்து கொள்வோம் வாருங் கள்!
இவரது முதல் திரைப்படம் ஸ்டூடெண்ட் நம்பர் 1 ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் இயக்கிருந்தார். முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். பிறகு தமிழில் இதே பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ஆனால் தயாரிப்பு மற் றும் நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜின் நடிப்பு நன்றாக இல்லாததால் தமிழில் தோல்வி அடைந் தது.
பிறகு மீண்டும் என்.டி.ஆரை வைத்து ‘சிம்மாத்ரி’ என்று ஒரு படத்தை உருவாக்கி மீண்டும் வெற்றி பெற்றார். இந்தப் படமும் மற்ற மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் இப் படத்தை ‘கஜேந்திரா’ என்று நடிகர் விஜயகாந்த் நடித்திருந் தனர். இந்தப் படமும் தமிழில் சரியாக உருவாக் காமல் படம் தோல்வி அடைந்தது.
இதன் பிறகு ‘சை’ என்ற படத்தை நிதின், ஜெனி லியா ஜோடியாக வைத்து இயக்கிருந்தார். எப்ப வும் பார்க்காத ரக்பி விளையாட்டை நன்றாகக் காட்டி இருப்பார். இதுவும் வெற்றி அடைந்தது.
அப்புறம் வெளிவந்த ‘சத்ரபதி’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. முதன் முறையாக பிரபாஸை வைத்து இயக்கிருந்தார். இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளும், உணர்ச் சிவயப்பட்ட காட்சிகளும் அசத்திருப்பார். இந்தப் படத்தில் வரும் இரண்டு காட்சிகளை ‘குருவி’ திரைப்படத்தில் வைத்தனர். பிறகு ‘பாகுபலி’ வெளியீட்டுக்கு முன்பு ‘சந்திரமௌலி’ என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பிறகு வந்த ‘விக்ரமார்குடு’ திரைப்படமும் அதிரடியாக இருக்கும். இதில் ரவி தேஜா இரண்டு கதாபாத் திரங்களில் நடித்திருந்தனர். கதாநாயகியாக அனுஷ்கா நடித்திருந்தனர். இந்தப் படமும் மற்ற மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது. முக்கி யமாகத் தமிழில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இங்கேயும் அதிரடியாக அமைந்தது.
இதற்கு அப்புறம் மீண்டும் என்.டி.ஆரை வைத்து ‘யமதொங்கா’ என்ற திரைப்படம் இயக்கியிருந் தனர். இந்தப் படம் மூலமாகத்தான் தன் படங் களில் கிராபிக்ஸ் காட்சிகள் வைக்கத் தொடங் கிவிட்டார். இந்தப் படம் நம்ம ரஜினிகாந்தின் ‘அதிசய பிறவி’ படம் போன்று இருக்கும். ஹீரோ வுக்கும் யமனுக்கும் நடுவில் வரும் கதை சிறப் பாக இருக்கும்.
இதன்பின் இவர் தன்னுடைய திரைப்படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை அதிகரித்தார். ‘மகதீரா’ என்று அற்புதமான காதல் கதை இயக்கி பிரம் மாண்டமான இயக்குநர் ஆகிவிட்டார்.
இந்தப் படத்தின் வெற்றி ஹீரோ ராம் சரண் மூல மாகத் தான் ஆனது என்று செய்தி பரவியபோது இவர் ஒரு சுனில் என்ற நகைச்சுவை நடிகரை வைத்து ‘மரியாத ராமன்னா’ என்ற திரைப் படத்தை இயக்கி, படத்தின் வெற்றி இவரால் தான் என்று காட்டி இருந்தார். இந்தப் படமும் மற்ற மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது. தமிழிலும் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தா னம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் கதாநாயகனாக மாறிவிட்டார். தெலுங்கில் பெற்ற வெற்றி தமிழில் பெறவில்லை.
மீண்டும் திரைப்படத்தின் வெற்றி மொத்தம் தனக்கே வரவேண்டும் என்று உருவாக்கிய படம் தான் ‘ஈகா’. இது தெலுங்கிலும் தமிழிலும் ஒரே முறை ‘நான் ஈ’ என்று ஈயை ஹீரோவாக வைத்து உருவாக்கப்பட்டது. கிரேசி மோகனின் வசனங் கள் தெலுங்கை விட நகைச்சுவையாக இருக்கும். தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் பெரிய வெற்றி அடைந்தது. தென்னிந்திய மக்களுக்கு அறிமுகம் ஆன, 3–4 மாதங்களுக்குப் பிறகு இந்தி யில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். மொத்த இந்திய அளவில் புகழ் பெற்றார்.
இந்த நேரத்தில்தான் ‘பாகுபலி’ என்று மிகப் பெரிய படைப்பை உருவாக்கினார். மதன் கார்க்கி உதவியுடன் தமிழிலும் ஒரே முறை உரு வாக்கி, மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து பிரம்மாண்டமான இயக்குநர் ஆகிவிட் டார். பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற சஸ்பென்ஸ்சுகாகவே ‘பாகுபலி 2’ மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
தன்னுடைய திரைப்படங்களுக்குத் தான்தான் போட்டி என்று திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று செய்பவர் ராஜமௌலி.
சமீபத்தில் வெளியான RRR (ரத்தம் ரணம் ரௌத் திரம்) திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற் றது. மீண்டும் என்.டி.ஆர்., ராம் சரண் வைத்து இயக்கியுள்ளார்.
மற்றொரு விஷயம், இவரது வெற்றிக்குப் பின் இவரது அப்பா – விஜயேந்திர பிரசாத்தின் கதை, இவரது மனைவி ரமா ராஜமௌலியின் ஆடை அமைப்பு, இவரது உறவினர் மரகதமணியின் இசையும் காரணங்கள்.
சில திரைப்படங்களுக்கு அதிரடி வெற்றி அமை யும். ஆனால் விருதுகள் கிடைக்காது. ஒருவேளை விருதுகள் கிடைத்தால், பெரிய அளவில் வெற்றி பெறாது. ஆனால் ராஜமௌலியின் திரைப்படங் களுக்கு மட்டும் மிகப்பெரிய வெற்றி அமையும். நிறைய விருதுகளும் வெல்லும். இவ்விதம் இவர் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய புகழை எட்டியுள்ளார்.