சென்னையில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

 சென்னையில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

முதல்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் திருவிழா  நடை பெற இருக்கிறது.

200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடை பெறவிருக்கிறது. கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

2022-ஆம் ஆண்டுக்கான போட்டியை போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறி வித்த நிலையில், போட்டியை நடத்த பல நாடுகள் முயற்சித்தன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத் தப்படும் செஸ் ஒலிம்யாட், 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகி றது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடந்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது.

ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் கிட்டதட்ட 180 நாடுகளிலிருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்

முதலில் இது ரஷ்யாவில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், போட்டி அங்கிருந்து மாற் றப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் பெயரில் ஒலிம்பியாட் என்று இருந்தாலும், இதற்கும் ஒலிம்பிக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. செஸ் என்ற தனி நபர் விளையாட்டை ஒரு அணியாக விளையாடினால் எப்படி இருக்கும். அதற்குப் பெயர்தான் செஸ் ஒலிம்பியாட். ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இந்த 4 பேரும், நான்கு வெவ்வேறு செஸ் போர்டில் ஒரே நேரத்தில் விளையாடுவார்கள். விதிகள் வழக்க மான செஸ் போட்டி மாதிரி இல்லாமல் இதற்கு குறிப்பிட்ட நேரத்தில் காய்களை நகர்த்தி ஆட்டத்தை முடிக்க வேண்டும்.

வெற்றி பெற்றால் 2 புள்ளிகள், தோல்வி அடைந்தால் புள்ளிகள் ஏது மில்லை. போட்டி சமனில் முடிந்தால் புள்ளிகள் வழங்கப்படாது. ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டி வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவின் செஸ் தலைநகர மான சென்னையில் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்,

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள், பயிற்சி யாளர்கள், அணி மேலாளர்கள் என 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவிருப்பதால் விமானப் போக்குவரத்து, தங்குமிட வசதி உள்ளிட் டவை கருத்தில் கொண்டு டெல்லி அல்லது சென்னையில் போட்டியை நடத்த பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் சென்னையில் போட்டி நடத்தப் படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போட்டி நடைபெற இருப்பதால் இந்தியாவின் சார்பில் பல அணிகள் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் திருவிழாவால் சென்னை சர்வதேச அளவில் உற்று நோக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. செஸ் விளையாட்டு மீதான ஆர்வம் மேலும் அதிகரிப்பதற்கும் பயிற்சி மையங்கள் போன்றவை அதிக அளவில் திறக்கப்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் உருவாகி இருக் கின்றன. மறுபுறம் 200 நாடுகளின் வீரர்கள் சென்னைக்கு வர உள்ளதன் மூலம் உலக அளவில் தமிழ்நாடும் சென்னையும் கவனம் பெறும். அத னால் சர்வதேச அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் என கருதப்படுகிறது.

இதற்கிடையே 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடத்துவது குறித்து அமைச்சர் மெய்யநாமன் தலைமையில் ஏப்ரல் 1 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் செய்திளார்களிடம் பேசினார். தமிழகத்தில் நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் தொடரில் 44 போட்டிகள் நடைபெற உள்ளன.

சதரங்க ஒலிம்பியாட் போட்டிக்காக கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2500 அறைகள் முன்பதிவு செய்யப் பட்டுள்ளன. போட்டியில் கலந்துகொள்ளும் 75 இந்திய கிராண்ட் மாஸ்டர் களில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்தர்கள். சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்காள ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்றார்.

“2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு மிகப்பெரிய செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. தமிழகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை” என சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப் பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.

உலக சாம்பியன் கார்ல்ஸன் உட்பட உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் “செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போ தும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என விஸ்வநாதன் ஆனந்த் கூறி யுள்ளார்:

ஐந்து முறை உலக சாம்பியனும், தமிழக செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பதிவில், ‘‘சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி. அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் சென்னை செஸ் சமூகம் உள்ளிட்ட அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம். செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...