தமிழ்மொழி | மாலா மாதவன்

 தமிழ்மொழி | மாலா மாதவன்

தமிழா தமிழா தமிழ்மொழி அமுதாம்
… தடையைத் தகர்ப்பாய் தமிழினில் பேச!
தமிழின் சிறப்புத் தானறிந் தாயோ
… தமிழில் பேசத் தயக்கமேன் தோழா?

சங்கம் வளர்த்தத் தமிழ்மொழி என்பர்
…..சாலச் சிறந்து விளங்கிடும் மொழியே
எங்கும் எளிதாய்ப் பரவிடும் இனிதாய்
….எங்கள் மொழியாம் எழிலுடைத் தமிழே!

கண்டோம் குறளாய் காப்பியம் பலவாய்
….கவியும் நடையும் கரையிலை மொழிக்கு
பண்ணோ பாட்டோ பழகுதல் தமிழால்
…பாடம் இனிமை படிபடி இன்னும்

அறிவாய் தெளிவாய் அழகுறப் பேசு
…அன்னை தமிழின் மணமது வீசும்
நெறியோ கருத்தோ நேர்படப் பேச
….நிழலாய்த் தொடரும் மொழிவளம் பெறுவாய்

ழகரம் தமிழின் மொழிகொளும் சிறப்பு
..நாளும் நீயும் நாவிடைக் கொள்வாய்
பகரும் மொழியே பரம்பரை மொழியாம்
… பாரில் சிறப்பு தமிழெனும் மொழியாம்

– மாலா மாதவன்

கமலகண்ணன்

1 Comment

  • மிக அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...