ஸ்ரீஅரவிந்தர் அன்னை பிறந்த நாள் தரிசனம்
கொல்கத்தாவில் பிறந்து, லண்டனில் கல்விபெற்று, தாய்நாடு திரும்பி, சுதந் திரப் போராட்டத் தலைவரானவர் ஸ்ரீஅரவிந்தர். அலிப்பூர் குண்டுவீச்சு வழக்கில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையானபின் ‘புதுச் சேரிக்குப் போ’ என்ற அந்தராத்மாவின் குரலை ஏற்று ஸ்ரீ அரவிந்தர் 1910-ல் புதுவை வந்து தவம் இருந்தார் அரவிந்தர்.
உலகின் வறுமையும் வேதனையும் ஒழிய மனிதன் தேடும் மோட்சம் உதவாது என்றறிந்த ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூர் சிறையிலிருந்தபொழுது விவேகானந்தர் அவர்முன் தோன்றி ஸ்ரீஅரவிந்தர் தேடும் சக்தி எது எனக் காண்பித்தார். அதுவே சத்தியஜீவியம் (Supermind). ரிஷி தன் தபோ வலிமையால் சத்தியஜீவிய சக்தியை அடைந்து, தம் சரணாகதியால் அச்சக்தியை உலகுக்குக் கொணர்ந்தால் உலகம் மரணத்திலிருந்து விடுபடும் என ஸ்ரீஅரவிந்தர் அறிந்தார்.
1950-இல் ஸ்ரீஅரவிந்தர் சமாதியானார். அவர் சூட்சும உலகில் தங்கி செய்த யோக பலத்தால் 1956-இல் சத்தியஜீவிய சக்தி உலகை வந்தடைந்தது. பாரிஸில் பிறந்த அன்னை தம் தியானத்தில் கண்ட ‘கிருஷ்ணனைத்’ தேடி புதுவையில் வரும்போது ஸ்ரீஅரவிந்தரைக் கண்டு, அவருடன் இறுதிக் காலம்வரை இருந்தார்.
மகான் அரவிந்தரின் முக்கிய சீடராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மீரா அல்பாசா (அன்னை). இவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1878 பிப்ரவரி 21ம் தேதி பிறந்தார். அரவிந்தரின் ஆன்மிகச் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு வந்தார்.
புதுவையில் அரவிந்தர் நிறுவிய ஆசிரமத்தில் பணியாற்றிய இவர் இங்கேயே தங்கிவிட்டார். மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஒரு இடம் விளங்கவேண்டும் என மகான் அரவிந்தர் விரும்பினார். அவரின் கனவை நிறை வேற்றும் வகையில் அன்னை மீரா ஆரோவில்லில் சர்வதேச நகரை உருவாக் கினார். அரவிந்தரின் மறைவுக்குப் பின் ஆசிரமத்தை நடத்தி வந்தார் அன்னை மீரா.
1973 நவம்பர், 17ஆம் தேதி அன்னை மீரா அல்பாசா சமாதியானார். ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் 1926-இல் அவரால் நிறுவப்பட்டது. 1968-இல் ஆரோவில் நகரத்தை உலக சமாதானத்திற்காக நிறுவினார் அன்னை.
ஆசிரமத்தில் அரவிந்தரின் சமாதிக்கு அருகிலேயே அன்னையின் சமாதியும் அமைக்கப்பட்டது. அரவிந்தர், அன்னையின் பிறந்த நாள், நினைவு நாளை ஆசிரம வாசிகளும் பக்தர்களும் வழிபட்டு வருகின்றனர்.
அன்னை மீராவுக்கு இன்று 144வது பிறந்த நாள். இதையொட்டி அன்னையின் சமாதி வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத் துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறை மற்றும் பொருட்கள் பக்தர்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது அன்னை சமாதியை வணங்கிச் சென்றனர்.