தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 13 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத்  தொட்டுவிடத் தொடரும் | 13 | தனுஜா ஜெயராமன்

ரிஷும் முகேஷூம் பார்ட்டி முடிந்து வெளியே வந்தனர்.

“அப்படியே அசோக் சாரை பாத்துட்டு போய்டலாம்டா.. உன்ட்ட ஏதோ டீடெயில்ஸ் கேக்கணும்னாரே? ” என்றான் ஹரிஷ்.

“ஆமாம்டா!… இந்த தலைவலியை சீக்கிரம் தீர்க்கணும்.. முடியல”…என்றான் எரிச்சலுடன்…

“ஏண்டா!… அவளோட வந்த ஆள் யாரா இருக்கும்..? உனக்கேதும் ஐடியா இருக்கா?

“யாருக்குடா தெரியும்”…என உதட்டை பிதுக்கினான்…

“ஆமாடா அவ அப்பவே அந்த மாதிரி தானே..நான் திருச்சியில் இருந்தப்பவே உன்கிட்ட சொல்லலே… வேற யாரோ ஒருத்தனோட பைக்ல பாத்தேன்னு”..

“ம்”…என்றான்…

இருவரும் காரை சன்லைட் டிடக்டிவ் ஏஜென்ஸியில் பார்க் செய்து உள்ளே நுழைந்தனர்.. ரிஷப்ஷனிஸ்ட் பரிச்சய புன்னகையில் வரவேற்க, பதிலுக்கு சிரிப்பை உதிர்த்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்தனர்.

அரைமணிநேர காத்திருப்பிற்கு பின் இன்டர்காமில் அழைக்கப்பட, கதவை திறந்து உள்ளே நுழைந்ததும்… சிரித்தபடியே “வாங்க…” என்றார் அசோக்.

“முகேஷ்! நீங்க அம்ரிதாவை எப்படி தெரியும்ன்னீங்க.. மறுபடியும் ஒருமுறை அவங்களை பறறி சொல்லுங்க”…என்றார்.

முகேஷ் தனக்கு தெரிந்த தகவல் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லத் துவங்கினான்.

அவன் பேசி முடிக்கட்டும் என காத்திருந்த அசோக்… “அது எந்த வருஷம்ன்னு சொல்ல முடியுமா முகேஷ்”…

“2013 சார்”…என்றான்.

“அவளுக்கு பொண்குழந்தை கூட இருந்ததா சொன்னீங்க தானே”..

“ஆமா சார்”…

“நீங்க சொன்ன முதல்கட்ட தகவலை வைச்சி விசாரிச்சதுல அவங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சது”.

“வாட்?” என அதிர்ச்சியில் கத்தினான்.

“ஆமாம் முகேஷ்… அவளுக்கு கல்யாணமெல்லாம் ஆகலை… அது அவளோட பெண்குழந்தையா என்பதும் நிச்சயமில்லை”..

“ஆ..னா… அவளோட ஹஸ்பெண்டை நான் பாத்திருக்கேனே?

“அது அவங்க ஹஸ்பெண்ட் தான்னு உங்களுக்கு தெரியுமா? எப்படி உறுதியா சொல்றீங்க?”

முகேஷ் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தான்.

“அவங்களோட பாய் பிரண்டாகவோ.. ஏன் பிஸினஸ் பார்ட்னராகவோ கூட இருக்கலாம் இல்லையா?”

“பிஸினஸ் பார்ட்னரா? அப்படி என்ன பிஸினஸ் சார்”…என்றார் குழப்பத்துடன்..

“இன்னமும் சில விஷயங்களை உறுதிபடுத்திகிட்டு சொல்றேனே?” என்றார் தயக்கத்துடன்..

“அப்புறம் அந்த ஆண் குழந்தையை பத்தி தெரிஞ்சிக்க ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து கூட கன்பார்ம் பண்ணிடலாம்? “

“அதுக்கு அம்ரிதா சம்மதிப்பாளா?”

“நிச்சயமாக சம்மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு தெரியாம எடுத்துருவோம்…அதை நாங்க பாத்துக்கறோம். நீங்க கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணினா சீக்கிரம் இதை முடிச்சிடலாம்”.

“ம்”…என்றான்.

“அதை சீக்கிரம் செய்திட்டா உண்மை தெரிஞ்சிடும். நடக்குற சில விஷயங்களை பார்த்த குழந்தை உங்களுடையதா இருக்க வாய்ப்பு ரொம்ப குறைவுன்னு தோணுது… பாக்கலாம்”..

முகேஷின் வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. சட்டென மனது லேசானதாக உணர்ந்தவன்… “அது மட்டும் உண்மைன்னா.. நான் ரொம்ப நிம்மதியா இருப்பேன் சார்”…என்றான் சந்தோஷத்துடன்..

“நான் சில விஷயங்களை சொல்றேன் அது படி செய்யுங்க”…என்று சிலவற்றை சொன்னார்..

“என்ன வேணாலும் சொல்லுங்க சார்.. நான் செய்யறேன்.. எனக்கு சீக்கிரம் இதிலிருந்து வெளியே வந்தா போதும்”…என்றான் பதட்டத்துடன்…

“நான் ஒவ்வொண்ணா சொல்றேன் அதை மட்டும் செய்து குடுங்க போதும்..” என்றார் அசோக். “ஆமா அந்த பையன் எந்த ஸ்கூல்ல படிக்கிறான்னு தெரியுமா?”

“தெரியாது சார்!.. ”

“சரி விடுங்க அதை நாங்க பாத்துக்குறோம்”.. என்றார்.

சோக்கிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.

“என்னடா இது அவளுக்கு கல்யாணம்கூட ஆகலைங்குறாரு?”

“ஆமாம்டா ஒரே குழப்பமா இருக்கு எனக்கும்… அப்ப அவ புருஷன்னு சொன்னாளே அவன் யாராயிருக்கும்… நாம திருச்சியில் பாத்த ஆளு?”

“தெரியலைடா!… அவன் வேற ஆறுமாசத்துக்கு முன்ன செத்து போனதா சொன்னாளே பாவி”!!

“சுத்த ப்ராடா இருப்பா போல”..

“இதை நம்பி எங்கம்மா வேற அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க.. ச்சே எல்லாம் என் தலையெழுத்துடா!” ..

“எப்படி எல்லோரையும் நம்ப வைச்சி எமாத்தியிருக்கா இல்லை”?

“சரி விடுறா!… அசோக் தான் அது உன் குழந்தையா இருக்க வாய்ப்பில்லைன்னு சொல்றாரே.. அப்படிதான் இருக்கும்.. நீ வீணா மனசை போட்டு அலட்டிக்காதே”..

“நானும் அந்த நம்பிக்கையில் தான்டா கொஞ்சம் நிம்மதியானேன்”…

“சரிடா, நான் இப்படியே கிளம்பறேன்.. நாளைக்கு பாக்கலாம்… நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுடா!”…என கிளம்பினான் ஹரிஷ்..

“பை டா”… என காரை கிளப்பியவன்.. அசோக் பேசிய வார்த்தைகள் சற்று உற்சாகம் தந்திருக்க… விசிலடித்தபடியே டேப்ரெக்கார்டை ஆன் செய்து…பிடித்த பாடல்களை முணுமுணுத்தபடி ரசித்துக்கொண்டே காரை ஓட்டினான்..

வீட்டினுள் நுழைந்தும்… “அம்மா பசிக்குது மா”…என கேட்க…

“உனக்கு பசி கூட எடுத்குதாடா?” என கிண்டலடித்தபடி உணவை பரிமாறினாள் அம்மா.

சப்பாத்தியும், குருமாவும் வழக்கத்தை விட அதீத சுவையாக தெரிந்தது. எவ்வளவு நாளாகிறது இப்படி ரசித்து ருசித்து சாப்பிட்டு என தோன்றியது.. வழக்கத்தை விட இரு சப்பாத்தி கூடுதலாக உள்ளே நுழைந்தது.

சாப்பிட்டதும் குழந்தையை கொஞ்சி விளையாடி, சுதாவிடம் பேசி மகிழ்ந்து அப்படியே தூங்கி போய்விட்டான். நீண்ட நாளுக்கு பிறகு ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்..

காலையில் விழித்ததும் சற்று மனது அமைதியாக இருந்தது. உற்சாகமாய் காலை கடன்களை முடித்து ஆபிஸிற்கு கிளம்பி விட்டான்.

ஆபிஸில் ஏராளமான வேலைகள் அப்படியே காத்திருக்க… நெடுநாளைக்கு பிறகு உறசாகமாய் வேலைகளை இழுத்துப்போட்டு கொண்டு செய்து முடித்தான். வேலை முடிந்து நிமிர்ந்த போது மணி இரண்டு ஆக காட்டியது கடிகாரம். பசி வயிற்றை கிள்ளஇ சுதா கொடுத்திருத்த கேரியருடன் சாப்பிட அமர்ந்தான்… மொபைல் ஒளிர…

எதிர்முனையில் ஹரிஷ்… “என்னடா மச்சி..என்ன செய்யுற?”…

“இப்ப தான் சாப்பிட வந்தேன்… சொல்லுடா?

“சும்மா தான் பண்ணேன்.. வேற எதுவும் விஷயமில்லையே? எனிதிங் ஸ்பெஷல்? ”  என்றான் கிண்டலுடன்

“இதுவரை ஒண்ணும் இல்லை”…என்றான் முகேஷ் சிரித்தக்கொண்டே..

“அப்படியே ஆகட்டும்” என ஆசிர்வதித்து.. கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு போனை வைத்தான் ஹரிஷ்…

போன் சார்ஜ் குறைந்திருக்க.. அதை சார்ஜ் போட்டு விட்டு திரும்ப வேலையில் முழ்கினான்.. நிமிர்ந்து கடிகாரம் பாரக்க நேரம் மாலை ஆறு.. சோம்பல் முறித்தபடியே காபியை வரவழைத்து குடித்தான். சற்று தெம்பாக இருந்தது.அப்படியே வீட்டிற்கு கிளம்ப யத்தனித்தவன்.. தனது மொபைலை தேட, சார்ஜ் போட்டிருந்தது நினைவுக்கு வந்தது.

எழுந்து போய் சார்ஜரிலிருந்து போனை அன்லாக் செய்ய… ஏகப்பட்ட மிஸ்ட்கால்.. அம்ரிதாவின் கால்… அவள் எதற்கு இவ்வளவு கால் செய்திருக்கிறாள் என பயமாக வந்தது.

தான் எடுக்கவில்லை என்றது மெசேஜ் தந்திருந்தாள்..

குழந்தைக்கு ஆக்ஸிடெண்ட் என்று.. இது வேற என்ன புதுக்குழப்பம் என்று தோன்றியது. அடுத்த மெசேஜாக ” கிளவுட் 9 ” ஆஸ்பத்தியில் சேர்த்திருப்பதாக தகவல் சொல்லியிருக்கிறாள்.

யாருக்கு வேண்டும் இந்த தகவல்?.. அவள் குழந்தை அவள் பிரச்சினை… யாரை எங்கே சேர்த்திருந்தால் எனக்கென்ன?…என அலட்சியமாக மொபைலை பேக்கெட்டில் போட்டு கொண்டு கிளம்பினான்.

திடீரென ஞாபகம் வந்தது. இனி அம்ரிதா பற்றிய சிறுதகவல் தெரிந்தாலும் உடனே தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நேற்று அசோக் கூறியது நினைவிற்கு வந்தது. இதை அசோக்கிடம் சொல்லணுமா? கூடாதா? என மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தினான். இறுதியாக சொல்லிவிடுவது என அசோகிற்கு போன் செய்தான்..

எதிர்முனையில்…”வாவ்”…என்றார் அசோக்..

“ஏன் சார்? என புரியாமல் கேட்டவனை..

“பழம் நழுவி பால்ல விழுந்தது. நம்ம வேலை ரொம்ப சுலபமா ஆகிடுச்சி… நீங்க உடனே கிளம்புங்க ஆஸ்பெட்டலுக்கு. நான் சொல்லுகிற மாதிரி செய்யுங்க”..என உற்சாகமானார் அசோக்..

அசோக்கின் திட்டம் மனதுக்குள் புது நம்பிக்கையை சந்தோஷத்தை தர… உடனே கிளம்பினான் “கிளவுட் 9” ஹாஸ்பெட்டலுக்கு…

காரில் அமர்ந்த முகேஷ்… சுதாவிற்கு போன் செய்து வேலை இருப்பதாகவும், நேரமாகும் என சொல்லிவிட்டு.. மருத்துவனைக்கு காரை செலுத்தினான். வெளியே இருள் கவிழ ஆரம்பித்தது. ஆனால் முகேஷிற்கோ வாழ்வில் இருள் விலகி நம்பிக்கை என்னும் கீற்று தெரியத் தொடங்கியது போன்று தோன்றியது.

முகேஷின் நம்பிக்கை ப்ரச்சனைகளை தீர்க்குமா? வாழ்வில் பழைய இனிமை தொடருமா? என்பதற்குக் காலம் தான் பதிலளிக்கும்….

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...