ஹன்சிகா நடிக்கும் பெயரிடப்படாத படம் பூஜையுடன் தொடங்கியது

 ஹன்சிகா நடிக்கும் பெயரிடப்படாத படம் பூஜையுடன் தொடங்கியது

வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம்  சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குநர்கள் சபரிகிரீசன், சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்). பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் போர்டை அடிக்க, K.S. ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...