எனக்கு விந்தணு உற்பத்தி அறவே இல்லை… என்ன செய்யலாம் டாக்டர்?
எனக்கு விந்தணு உற்பத்தி அறவே இல்லை. அதனால் செயற்கை வழி கருத்தரிப்பை முயற்சி செய்யுங்கள் என என் மருத்துவர் கூறிவிட்டார். டெஸ்ட் டீயூப் பேபி அல்லது ஐ.வி.எப்ஃ. முறையை அணுகவும் என்கிறார். இதை எப்படிப் கையாள்வது?
Azospermia என்ற விந்தணு உற்பத்தி அறவே இல்லாத நிலைப்பாடினால் செயற்கை முறையில் கருத்தரிப்பதை நினைத்து தற்போது வருத்தம் அடைய தேவை யில்லை. காரணம் அதற்குச் சில மேன்மையான சிகிச்சை முறைகள் வந்துள்ளன.
சாதாரணமாக விரைப்பையில் உற்பத்தியாகும் விந்து ஆணுறுப்பு வழியே வெளியே வருகிறது. பலருக்கு அந்த விந்து வரும் பாதையில் தொற்றுக்கள் அல்லது அடைப்பு ஏற்பட்டிருக்கும். இதனால் போதிய இரத்த ஓட்டம் இல்லாமல் வெளியே வரும் விந்தணு இறந்துபோகும். அதற்குத்தான் தற்போது விரைப் பையிலிருந்து நேரடியாக விந்தணு திரவத்தை வெளியே எடுத்து வரும் சிகிச்சை முறைகள் உதவுகிறது.
TESTICULAR EPIDIDYMAL SPERM ASPIRATION (TESA) என்ற சிகிச்சை முறை மூலமாகத் தங்களது விரைப்பையிலிருந்து நேரிடையாக விந்து திரவத்தை எடுத்து அதில் உள்ள நல்ல விந்துக்களை சீர் பிரித்து எடுக்கும் யுக்தியாகும்.
இது சிறிது மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்படும் முறையாகும். அதற்கு முன்னர் தங்களுக்குத் தேவையான மருந்துகள் கொடுத்து விந்து நீர் சுரப்பதை அதிகப்படுத்துவர். ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கான மருந்துகள் எடுத்துக்கொள்வதும் அவசியமாகும்.
விரைப்பை விரைகுழாய் போன்ற வெவ்வேறு பிறப்புறுப்பு பகுதிகளிலிருந்து சேகரிப்படும் நீரிலிருந்து சிறந்த விந்து அணுக்களைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். அதனால் எப்படியும் உங்கள் விந்தில் இருந்தே பிறக்கும் குழந்தை யைப் பெறும் பாக்கியம் கிடைக்கும்.
தற்போது ஐ.வி.எஃப். முறையைவிட மேம்பட்ட இக்ஸி (INTRA CYTOPLASMIC SPERM- ICSI) INJECTION என்ற முறையில் உங்கள் மனைவியிடமிருந்து கருமுட்டையை எடுத்து அதனுள்ளேயே உங்களின் தரம் பிரித்தெடுத்த விந்துவைச் செலுத்தி கருவை உண்டாக்குவதே நல்லது.
தேர்ந்தெடுத்த கருமுட்டையைச் சுற்றி விந்துக்களை விட்டு கருவை உண்டாக்க வைப்பது IVF எனப்படும். ஆனால் அந்த கருமுட்டையின் உள்ளேயே நல்ல விந்து வைச் செலுத்தி கருவை உருவாக வைப்பதுதான் ICSI. இதுவே தற்போது நல்ல முறையில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் செயற்கை கருத்தரிப்பு முறை யாகும்.
இதற்கு நீங்கள் ஒரு யூராலஜிஸ்ட் என்ற ஆண்கள் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தங்கள் விரைப்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களைப் பரிசோ தனை செய்துகொள்ள வேண்டும். இதன் பின்னர் கணவர் – மனைவி உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல்நலனை மேம்படுத்துங்கள். பின்னர் உங்களுக்குத் தேவையான கருத்தரிப்பு முறையைச் செய்யவேண்டிய மருத்துவமனையைத் தீர்மானியுங் கள்.
முதலில் உங்கள் இருவரின் உடல்நலத்தில் நல்ல முறையில் அக்கறை கொண் டால் மட்டுமே கருத்தரிப்பது இயற்கையாக இருந்தாலும், செயற்கையாக இருந் தாலும் நல்ல முறையில் கருவை பெற்றெடுக்க முடியும்.
அரிசி கோதுமை உணவுகளைக் குறைத்து புரதம் நிறைந்த மீன், முட்டை, இறைச்சி, காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்து எடையைச் சீராக்கவும்.
மகப்பேறு மருத்துவர்