ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடம்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களாக ரிலையன்ஸ் இன்டஸ்ட் ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளனர்.
இந்த நிலையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரமதர் மோடியின் ஆசிபெற்ற கௌதம் அதானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் உலகின் பணக்காரர்கள் வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஆசிய பணக்காரர்கள் பட்டிய லில் முகேஷ் அம்பானியை முந்திக்கொண்டு கௌதம் அதானி முதல் இடத்தைப் பிடித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதானி சொத்து மதிப்பு ரூ.1,200 கோடி டாலர் அதிகரித்ததால் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 88.5 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.6.60 லட்சம் கோடியாகும். இந்த ஆண்டில் உலகிலேயே அதிகபட்ச வருமானத்தை ஈட்டிய தொழில் அதிபர் என்ற பெருமை அதானி யையே சாரும்.
நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்துக்குப் பெற்ற அனுமதி பெரும் சர்ச்சையானது.
பருவநிலை மாறுபாடு விழிப்புணர்வு ஆதரவாளர்கள் பலரும் நிலக்கரி சுரங்கத் தொழில் குறித்துக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இத னால் மரபுசாரா எரிசக்தி தொழிலில் அதானி குழுமம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இது தவிர இந்த நிறுவனம் விமான நிலையப் பராமரிப்பு, ராணுவத் தளவாட ஒப்பந்தப் பணி உள்ளிட்ட தொழில்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள் ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழுமப் பங்குகளின் விலை ரூ.600 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தொடர்ந்த முதல் இடத்திலிருந்து வந்த முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 2ஆவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 6.56 லட்சம் கோடியாகும்.
முகேஷ் அம்பானி அடுத்த மூன்று ஆண்டுகளில் பசுமை சார்ந்த எரிசக்திக்கு ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். அதானி குழுமம் அடுத்த எட்டு ஆண்டுகளில் ஏழாயிரம் கோடி டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
எல்லாம் ‘ஆண்டவன்’ செயல்…