கூர்மன் படம் ரிலீசுக்குத் தயார்

 கூர்மன் படம் ரிலீசுக்குத் தயார்

டைரக்டர் பிரயான் பி ஜார்ஜின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம், கூர்மன். பிரபல தயாரிப்பு நிறுவனமான எம்.கே.என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர் மற்றும் பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

டோனி பிரிட்டோ இப்படத்திற்கான இசையினை இசையமைத்துள்ளார். படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் காட்சிப்படுத்த, அதனை எஸ் தேவராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது.

இவ்விழாவினில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்ட லிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதைக் கண்டுப்டிக்கும் நிகழ்வினை  செய்துகாட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். நடிகை ஜனனி ஐயர் கூறியதாவது,  பிரையன் பி ஜார்ஜை தெகிடி படத்தி லிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன் ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார்.

இந்தக் கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும், ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும். நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது. ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம். அப்படியும் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம், ஆனால் மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...