மனக்காடு | ஆர்னிகா நாசர்

 மனக்காடு | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 3

பேன்டஸி ஸ்டுடியோ

கிருஷாங் மெல்லிய டெஸிபல்லில் சீழ்க்கையடித்தான். அவனுக்கு வயது 30. ஆறடி உயரன். வகிடு இல்லாத முரட்டுகேசம். முட்டைக்கண்கள். நாவல்நிற உதடுகள். இந்தியாவின் நம்பர் ஒன் புகைப்படக்கலைஞன். எதனை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் புகைப்பட கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பான்.

அவனது மேஜையில் கீழ்க்கண்ட டிஜிட்டல் கேமிராக்கள் ஓய்வெடுத்தன.

நிகான் டி3-500

ஒலிம்பஸ் ஒஎம்-டிஈ-எம்10 மார்க் IV

ப்யூஜி பிலிம் எக்ஸ் –டி200

கேனான் ஈஒஎஸ்-90டி

பேனஸோனிக் லூமிக்ஸ் ஜி100

ஸோனி இஸட்வி – 1

இன்ஸ்டா 360 ஒன் ஆர் ட்வின் எடிஸன்

வாசலில் பவ்யமான காலடி அரவம் கேட்டது. நிமிர்ந்தான் கிருஷாங்

உலகின் எல்லா அழகான பூக்களையும் பிசைந்து செய்தது போல ஒரு பெண் நின்றிருந்தாள். இரு மணிப்புறாக்களாய் மார்பகங்கள். லோஹிப் கட்டியிருந்தாள். தேனில் ஊறிய உலர் திராட்சை போல் தொப்புள். தர்பூசணி பழங்களாய் புட்டங்கள்.

அவளுடன் கைகோர்த்து ஒரு யுவன் நின்றிருந்தான்.

இருவரும் வணங்கினர். “வணக்கம் மிஸ்டர் கிருஷாங்!”

“வணக்கம்… வந்து அமருங்கள்!”

எதிரில் அமர்ந்தனர். அந்த பெண்ணிடமிருந்து மகிழம்பூ வாசனையடித்தது. பவளவாய் திறந்தாள். வெல்வெட் நாக்கு. முப்பத்திரெண்டு பௌர்ணமி பற்கள். டால்பின் கண்கள் அபிநயித்தன.

“என் பெயர் ஷிவாங்கி. இவன் பெயர் மனுஷ். நாங்கள் இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்களை வைத்து பிரி வெட்டிங் ஷுட் நடந்த ஆசைப்படுகிறோம்!”

“தாராளமா பண்ணித்தருகிறேன்… உங்கள் பட்ஜெட் என்ன?”

“எவ்வளவு செலவானாலும் சரி… இது போல் ஒரு பிரி வெட்டிங் ஷுட்டை யாரும் நடத்தியதில்லை என ஊர் புகழ வேண்டும்… எங்களுடைய பிரி வெட்டிங் ஷுட் புகைப்படங்களில் காதலும் காமமும் பொங்கி வழிய வேண்டும். நான் ரதியாக இவன் மன்மதனாக உருமாற வேண்டும்…”

கிருஷாங் சிரித்தான்.

“உருமாற தேவையில்லை. நீங்களிருவரும் கிரேக்க காதல் தேவதைகள் போலதான் காட்சி அளிக்கின்றீர்கள்… பிரிவெட்டிங் ஷுட்டை என்றைக்கு எடுக்க வேண்டும்?”

“நாளையிலிருந்து பத்து நாட்களுக்கு எடுக்கலாம்…”

“எங்கெங்கு எடுக்க வேண்டும் என உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா?”

“இருக்கு… ஓடும் ரயிலின் முன்… ராஜநாகத்துடன்… நீர்வீழ்ச்சி உச்சியில்… நூறடி உயரமுள்ள மரவீட்டில்…. பத்துகாட்டுயானைகளுக்கு நடுவே… ரோலர் கோஸ்ட்டரில்… அறுபது மாடி கட்டட நுனியில்…”

“நிறுத்துங்க நிறுத்துங்க… எங்கெங்க உயிராபத்துகள் இருக்கோ அங்கெல்லாம் பிரிவெட்டிங் ஷுட் நடத்தனும்னு சொல்றீங்க… ஷுட் முடிக்றப்ப மூணு பேரும் உயிரோடு இருப்போமா?”

ஷிவாங்கி கிருஷாங்கை பார்த்து கண்ணடித்தாள். “பயப்படாதீர்கள்… பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன்!”

அவளது வாய்வார்த்தை பூடகமாய் அவளின் விசேஷத்தன்மையை உணர்த்தியது.

“நீங்கள் இருவரும் உண்மையில் யார்?”

“நாங்கள் இருவரும் காதலால் கசிந்துருகி வழிந்தோடும் மெழுகு பொம்மைகள். அதற்கு மேல் எங்களை ஆராயாதீர்கள்.”

“முன் பணம் எதுவும் தருகிறீர்களா?”

ஷிவாங்கி தனது மான் விழிகளை மூடித்திறந்தாள். உதடுளை குவித்தாள். அந்த குவிப்பு கிருஷாங்கின் இந்திரியத்தை பறிக்க துடித்தது.

அவள் கோடிடன் காந்தமாகவும் கிருஷாங் ஒரு கிராம் இரும்புத்தூளாகவும் மாறினர்.

கையிலிருந்த பையை கிருஷாங்கின் முன் கொட்டினாள். நூற்றுக்கணக்கான தங்க காசுகள்!

“எல்லாம் எனக்கா?””

“ஆமா!”

“ஓவ்! உங்களுக்கு தங்கச்சி கிங்கச்சி இருக்கா!”

“இல்லை!”

“பெரியம்மா பொண்ணு சின்னம்மா பொண்ணு?”

“இல்லை… ஏன்?”

“இருந்தா காதலிச்சு கல்யாணம் பண்ணிப்பேன்!”

“வந்ததிலிருந்து நீ என்னை காதலிச்சிக்கிட்டுதான இருக்க?” ஒருமைக்கு தாவினாள்.

“உள்நோக்கம் இல்லாத ரசிப்பு அவ்வளவே… இன்னொருவன் காதலியை பென்டாள நினைப்பேனா?”

“இனி நாம் ஒருவரை ஒருவர் நீ வா போ என்று ஒருமையில் விளித்துக் கொள்வோம்!”

“சரி!”

“தங்கக்காசுகளை எடுத்துக்கொள்!” எடுத்துக்கொண்டான்.

“நாளைகாலை ஒன்பது மணிக்கு சந்திப்போம். டிஜிட்டல் கருவிகளுடன் தயாராக இரு!” எழுந்தாள். காதலனுடன் கிளம்பிப் போனாள்.

டுத்த பத்து நாட்களும் பிரிவெட்டிங் ஷுட் நடந்தது.

நூற்றி ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் வரும் ரயிலின் முன் பிரிவெட்டிங் ஷுட் நடத்தினான் கிருஷாங்.

புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் மூவரை நெருங்கியதும் ரயில் ப்ரீஸ் ஆகி நின்றது.

புகைப்படம் எடுத்து முடித்ததும் ரயில் உறைதலிருந்து விடுபட்டு வேகம் ஓடியது.

ராஜநாகத்தின் முன் ஷுட் நடத்தினான். ராஜநாகம் மூவரின் மீதும் விஷத்தை பீய்ச்சியடித்தது. விஷம் ஸ்லோமோஷனில் சிதறி பன்னீர்துளிகளானது.

நீர்வீழ்ச்சியின் மீது ஷுட் நடத்தும் போது ஒட்டுமொத்த நீரும் பனிக்கட்டிகளாய் உறைந்து பின் மீண்டும் தத்தி தாவியது.

சிங்கங்களின் முன் ஷுட் நடத்தும் போது சிங்கத்தின் வாய்கள் தைக்கப்பட்டு பின் தையல் பிரிக்கப்பட்டன.

நூறடி உயரமுள்ள மரவீட்டில் ஷுட் செய்யும்போது மரவீடு தரைக்கு தாழ்ந்து கொடுத்தது.

பிரிவெட்டிங் ஷுட் முடிந்ததும் ஷிவாங்கி மார்பகங்கள் மனுஷ் புஜத்தை அழுத்தி தேய கட்டிக் கொண்டு கிருஷாங்கிடம் வந்தாள்.

“எடுத்த படங்களை முழுக்க காட்டு!”

ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை காட்டினான் கிருஷாங்

“அற்புதம் மஹாஅற்புதம்… ஒவ்வொரு புகைப்படத்திலும் காதல் பொங்கி வழிகிறது. இந்த நூற்றாண்டின் இணையற்ற புகைப்படக்கலைஞன் நீ!”

சங்கோஜினான் கிருஷாங்.

அனைத்து புகைப்படங்களையும் பென்டிரைவில் பதிவிட்டு கொடுத்தான்.

“கிருஷாங்! உனக்கு எதாவது கொடுக்க விரும்புகிறோம்!”

“அதுதான் தங்கக்காசுகளை கொடுத்துவிட்டீர்களே?”

“நான் கொடுத்தது ஊதியம் நான் இப்போது கொடுக்க நினைப்பது பரிசு!”

“எதற்கு உனக்கு வீண் சிரமம்!”

“பரவாயில்லை… உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்!”

“பரிசு கேட்பதற்கும் கொடுப்பதற்கும் முன் ஒரு கேள்வி. நீங்களிருவரும் உண்மையில் யார்?”

“நாங்கள் இணைப்பிரபஞ்சத்திலிருந்து வந்த தேவதைகள்!”

“வாவ்! தேவதைகளுக்கு பிரிவெட்டிங் ஷுட் நடத்திக் கொடுத்திருக்கிறேனா? சூப்பர்ப்!”

“பரிசைக் கேள் சீக்கிரம்!”

யோசித்தான் கிருஷாங். ‘வருங்காலத்தில் டிஜிட்டல் போட்டோகிராபியில் முழுக்க முழுக்க ஆர்ட்டிபீசியல் இன்ட்லிஜென்ஸ் புகுந்து விடும். ஆனால் எந்த காலத்திலும் மனதை புகைப்படம் எடுக்கும் கேமிரா வரவே வராது. மனதை படம் பிடிக்கும் கேமிரா ஒன்றை இவர்களிடமிருந்து பரிசாய் பெற்றால் என்ன?’

“எது கேட்டாலும் பரிசாய் கொடுப்பாயா ஷிவாங்கி?”

“ஆம்!”

“இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை டைம் ட்ராவல் போய் தடுக்க முடியுமா என்னால்?”

“முடியும்!”

“முடிவாகக் கூறுகிறேன்… எனக்கு மனிதமனங்களை அப்பட்டமாய் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கருவியை பரிசளி!”

ஷிவாங்கி விரலை சொடுக்கி நீட்டினாள். நீலநிறத்தில் ஒரு கருவி!’ “இதோ நீ கேட்டது!”

தெருவில் இறங்கி போபவர்களை வருபவர்களை புகைப்படம் எடுத்து தள்ளினான் கிருஷாங்.

புகைப்படங்களில் அவர்களின் மனங்கள்.

குரங்குகளாக- ஆந்தைகளாக-

கரடிகளாக- கழுதைகளாக

பிணந்தின்னி கழுகுகளாக- எருமைகளாக

முதலைகளாக- பல்லிகளாக

சுறாமீன்களாக கொடூரம் காட்டின.

பயந்து போய் ஓடிவந்தான் கிருஷாங். “என்ன ஷிவாங்கி… எல்லாம் மனங்களும் கொடூர மிருகங்களாக பறவைகளாக ஊர்வனவாக பூச்சிகளாக அருவெறுப்பு காட்டுகின்றன?”

“மனித மனங்கள் விகாரமானவை. உன்னை நீயே ஒரு சுயமி எடுத்து பார்!”

எடுத்தான். கிருஷாங்கின் மனம் ஒரு சிம்பான்ஸி குரங்காக கிளைவிட்டு கிளை தாவியது.

“என்னது…என் மனம் ஒரு குரங்கா? ஷிவாங்கி! நீ ஒரு தேவதை! உன் மனதை ஒரு புகைப்படம் எடுக்கிறேன். உன் மனம் ரோஜா நந்தவனமாய் மணம் வீசும்!”

“நோ!” என்ற ஓடிய ஷிவாங்கியை துரத்தி அரைமணிநேர துரத்தலுக்கு பிறகு அவளின் மனதை புகைப்படம் எடுத்தான்.

ஷிவாங்கி இரத்தமும் நிணமும் உமிழ்நீரும் வழியும் வாயுடன் நீண்டநீண்ட நகங்கள் கொண்ட கைகளுடன் முள்ளுமுள்ளான செதில்கள் கொண்ட உடம்புடன் இரத்தக்காட்டேரியாய் காதை குத்தி கிழிக்கும் டெஸிபல்லில் ஊளையிட்டாள்!

 ●

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...