பொன்னியின் செல்வன் அப்டேட்ஸ்

 பொன்னியின் செல்வன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் இன்டஸ்ட்ரியே கூர்ந்து கவனிக்கும் இயக்குநர் மணி ரத்னம். அவரின் கனவுத் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய ஐந்து பாகங்கள் கொண்ட நாவலைச் சுருக்கி இரண்டு பாகங்களாக மணிரத்னம் படமாக எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெயராம், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா என ஏகப் பட்ட பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 75 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தோட தகவல்கள் எல்லாம் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே சில பல தகவல்கள் கசிந்துவிடு கின்றன. அதன் சில தகவல்களை இங்கே பார்க்க லாம்.

மிகப்பிரம்மாண்டப் படைப்பாக ரூ. 800 கோடி செலவில் லைக்கா புரடக்சன் பேனரில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கோவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போடப்பட்டது.  தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் இப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய் கிறார்.

விக்ரம் நடித்த ‘தெய்வமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பேர் பெற்ற சாகா அர்ஜுன் இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கதாபாத்திரமாக நடிக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கியமான போர்க் காட்சியைப் படத்தொகுப்பு செய்யப் பட்டிருக்கிறது. ஒரு காட்சியைப் படத்தொகுப்பு செய்து இயக்குநர் மணிரத்னத்துக்குக் காட்டும்போது அவர் மெளனமாகக் கூர்ந்த கவனித்திருக்கிறார். இந்தக் காட்சி, படத்தின் முக்கியமான பகுதி என்பதால் பங்கேற்றவர்கள் ஈடுபாட்டோடு செயல்பட்டனர்.

போர்க் காட்சிகளை மணிரத்னத்தின் சிறப்பான திரைக்கதையில், பாகுபாலி சண்டைப் பயிற்சி இயக்குநரின் வடிவமைப்பு, ரவி வர்மனின் திறமையான ஒளிப்பதிவால் உருவாக் கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்திற்குப் படத்தொகுப்பு செய்து வரும் மனு ஷஜூ, இன்ஸ்டாகிராமில் இப்படத்தின்  பொனனியின் செல்வன் படத்தின் போர்க் காட்சிக்கு படத்தொகுப்பு செய்துள் ளது பற்றிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில் “பொன்னியின் செல்வன் படத்தின் முக்கியமான போர்க் காட்சியைப் படத்தொகுப்பு செய்தேன். அதனை உடனடியாக மணிரத்னத்துக்குக் காட்டச் சென்றேன். ஒவ்வொரு காட்சியும் 7 கேமரா, ஹெலி கேம், கோப்ரோ கேமராவால் படமாக்கப்பட்டிருந்தது. அந்தப் போர்க் காட்சியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

ஒரு காட்சியைப் படத்தொகுப்பு செய்து அதனை இயக்குநருக்குக் காட்டும்போது அவர் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் எனத் தெரிந்துகொள்ள இயக்குநரின் முகத்தைப் பார்த்தேன். இயக்குநர் மணிரத்னம் படத்தொகுப்பு செய்த காட்சியை பார்த்ததும் எதுவும் சொல்லவில்லை. உடனிருந்த ஜெயம் ரவி மணிரத்னத்திடம் எதுவோ சொல்லி, பின்னர் படத்தொகுப்பு செய்த காட்சியைப் பார்த்தார்.

ஜெயம் ரவியும் என்னிடம் எதுவும் சொல்லாமல், மணிரத்னத்திடம் மட்டும் அவரது கருத்து களைத் தெரிவித்தார். பின்னர் மணிரத்னம் என்னைப் பார்த்து சிரித்தபடி அவரது கட்டை விரலை உயர்த்தி காட்டினார்” என குறிப்பிட்டுள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...