தயாராகிறது தமிழ், தெலுங்கில் தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’

பல வெற்றி படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவன மான   சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்,  இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து ‘வாத்தி’  என்ற தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறது. இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு  சமூக ஊடகங்களில் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் .

சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலேயே ராங்டே படத்தை இயக்கிய இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்குகிறார். சூர்யதேவரா நாக வம்சியின்  சித்தாரா என்டர்டெயின் மென்ட்ஸ் இந்தப் படத்தை சாய் சௌஜன்யா (ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்) தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதி வாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2022ல் தொடங்குகிறது.

தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக  சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!