வரலாற்றில் இன்று – 12.12.2021 சர்வதேச கன உலோக தினம்
சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் சிறந்த மற்றும் மிகப்பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
சர்வதேச கரலாக்கட்டை தினம்
டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாக்கட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாக்கட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாக்கட்டையை ஒலிம்பிக்கில் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட்.
ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பனின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.
ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலமொழி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழக அரசு திரைப்பட விருது, கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, பத்ம பூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
முக்கிய நிகழ்வுகள்
1981ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி புகழ்பெற்ற இந்தியக் கிரிகெட் வீரர் யுவராஜ் சிங் சண்டிகாரில் பிறந்தார்.
1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிரபல குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார்.