இன்றைய தினப்பலன்கள் (12.12.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (12.12.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பேசுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்,
பரணி : விழிப்புணர்வு வேண்டும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் :

தொழில் தொடர்பான செயல்பாடுகளில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். அரசு சார்ந்த வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அபிவிருத்தியான நாள்.
ரோகிணி : உதவிகள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

.

மிதுனம் :

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்துடன் செயல்படுவதை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடந்த கால இனிய அனுபவங்களை சிந்தித்து பார்த்து மனம் மகிழ்வீர்கள். இன்பமான நாள்,

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவாதிரை : விவேகம் வேண்டும்,
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம் :

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உறவினர்களில் உண்மையானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணம் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஆதரவு பெருகும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : அனுபவம் மேம்படும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் :

கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : காலதாமதம் உண்டாகும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி :

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். மனதில் புதிய ஆசைகள் தோன்றும். புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். திருப்தியான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : லாபம் மேம்படும்.
அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.
சித்திரை : புரிதல் மேம்படும்.

துலாம் :

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும், ஆடம்பர பொருட்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

விருச்சிகம் :

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேன்மை நிறைந்த நாள்,

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : சாதகமான நாள்.

தனுசு :

விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் ஒருவிதமான தன்னம்பிக்கையும், எதையும் சமாளிக்கும் புத்துணர்ச்சியும் பிறக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : இன்னல்கள் குறையும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

மகரம் :

மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். சுகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும்.
அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.

கும்பம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெற்றிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : தீர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.

மீனம் :

அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். சில அனுபவ நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும்.

ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : பொறுமை வேண்டும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...