நுங்கம்பாக்கம் வசந்தி | குட்டி பத்மினி..

யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி.. மொதல்ல அவரை விசாரிங்க.. கொளுத்தி போட்ட குட்டி பத்மினி.. பரபரப்பு

“மொதல்ல நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும்” என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு நடிகை குட்டி பத்மினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரம் சூடு பிடித்து வருகிறது.. தனிப்பட்ட நபரின் ஒரு பாலியல் தொல்லை பிரச்சனையால், மொத்த பள்ளி நிர்வாகமே சிக்கி கொண்டுள்ளது..

ஒருபக்கம் பிள்ளைகளின் பாதுகாப்பை இழந்த முன்னாள் பெற்றோர்கள் கதறுகிறார்கள்.. மற்றொரு பக்கம் பள்ளி நிர்வாகத்தின் பல்வேறு முறைகேடுகள் ஆங்காங்கே வெடித்து வருகிறது..

சிக்கல்

இதற்கு நடுவில் பிராமணர், இந்து என்ற அஸ்திரத்தை பிடித்து தப்பிக்கும் முயற்சியில் மதுவந்தி போன்றோரும் இறங்கி உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், நடிகை குட்டி பத்மினியும் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருந்தார்.. அவர் சொன்னதாவது:

பள்ளியில் சீட்

“பத்ம சேஷாத்திரி ஸ்கூலில் சீட் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன்… அப்போது ஒய்ஜிபி கூப்பிட்டதால், அவங்க ரூமுக்கு போனேன்.. ஏம்மா… நீ எல்லாம் கியூவில் நிக்கலாமா? இந்த ஸ்கூலுக்கு முதன்முதலில் பெரியவங்க எல்லாம் அடிக்கல் நாட்டும் போது, நீ அந்த டைம்ல வந்திருக்கிற, உன் கையால அடிக்கல் நாட்டியிருக்கிற… எனக்கு அது நல்லா ஞாபகம் இருக்கு..”ன்னு சொன்னார்.

சந்தோஷம்

பல சீரியல்ல ஆக்ட் பண்ணியிருக்கேன்… டிராமா, சினிமாவில் ஆக்ட் பண்ணியிருக்கேன்.. ஆனாலும் யாருகிட்டயும் போயி ஆப்ளிகேஷன் கேட்கிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது… சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்… ஆனால் நடந்தது என்ன? என்னுடைய மகளுக்கு அட்மிஷன் எல்லாம் ஆயிருச்சி… ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருந்தாள். ஒரு மாசத்துக்கு அப்புறம் மேடம் கூப்பிடறாங்கன்னு சொன்னாங்க.. என் பொண்ணு சரியான வாண்டு.. என்ன பண்ணிச்சோ.. யார அடிச்சாளோ-ன்னு நினைச்சிக்கிட்டே ஸ்கூலுக்கு போனேன்.

சீரியல்

அப்போ என்கிட்ட சொன்னாங்க, “நீ வருமானவரித்துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே, ரொம்ப நல்லா இருக்கு… நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. வருமான வரித்துறை சேர்மனை நீங்க மீட் பண்ணியிருக்கிறீர்களா?ன்னு கேட்டாங்க. “ஓ, நல்லா தெரியுமே.. அவரை பார்த்து தான் அப்ரூவலே வாங்கி இருக்கோம்… ஒவ்வொரு வாரமும் ஸ்டோரி எல்லாம் அவர் தான் கிளியர் பண்ணணும்”னு சொன்னேன்.

கொடைக்கானல்

அவர்கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு… எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரமாட்டேங்கிறார்.. கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம்… ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கிட்டாங்களாம். சட்டப்படி அது தப்பு போல இருக்கும்… அதனால வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க போல இருக்கு. அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டாங்க.

வீடியோ

அப்ப தான் எனக்கு புரிந்தது. இவங்க இதுக்காக தான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. உண்மையிலே என் மேல இருந்த அன்புனால கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன்” என்றார். குட்டிபத்மினியின் இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்த விவாதங்களும் இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு ட்வீட் போட்டுள்ளார் குட்டி பத்மினி.

வசந்தி

அதில், நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும் என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? இவரை ஏன் குட்டிபத்மினி உள்ளே இழுத்து விடுகிறார்? எந்த வகையில் வசந்தி அந்த பள்ளியால் பாதிப்புக்கு உள்ளானார் என்று தெரியவில்லை.. குட்டிபத்மினி கொளுத்தி போட்ட இந்த வசந்தி விவகாரம், பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் மேலும் பரபரப்பை அள்ளி தெளித்து வருகிறது.

#PSBB #school #onlineclasses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!