தற்போது கேட்கப்படும் பள்ளிக் கட்டணம்
அனைவருக்கும் வணக்கம்
அதீத கொரானாவின் தாக்குதலை முன்னிட்டு, நாம் ஆங்காங்கே வீட்டை தாண்டி வெளியே வர முடியாத சூழ்நிலையில், நமது கனவு, லட்சியம், பதவி உயர்வு, முன்னேற்றம், ஏன் சம்பளம் கூட சரியாக கிடைக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு அபாயமான காலகட்டத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த வருடத்திலிருந்து எல்லாவற்றிற்கும் கஷ்டமான காலம் என்று கருதப்படுகின்ற சூழ்நிலையை உருவாக்கி வைத்து விட்டது இந்த கொரானா வைரஸ். ஆனாலும் சில பள்ளிகள் தங்களின் வசதிக்காக பலவற்றை செய்கிறது. உதாரணத்திற்கு கே.கே. நகர் பள்ளி மிகவும் பிரபலமாக தவறான செய்கையால் அனைத்து ஊடகங்களிலும் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதில் நிறைய அன்பர்கள் கட்டணத்தைப் பற்றி எதிராக பதிவு செய்திருந்தார்கள். ஒரு மணி நேரமே எடுக்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகள், முக்கியமாக கட்டணம் வசூலிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்பதை எல்லோரும் அறிவார்கள். அதிலும் தனி மொபைல் போன், சார்ஜிங், போன் ரீசார்ஜ், இன்டர்நெட் சார்ஜ் போன்ற அதிகப்படியான செலவுகள் என்றாலும் கூட, பிள்ளைகள் வகுப்பில் இருக்கிறார்களா அல்லது இணையதளத்தில் உலா வருகிறார்களா? அல்லது கேம்ஸ் விளையாடுகிறார்களா என்று தெரியாது.
அதையெல்லாம் தாண்டி தற்பொழுது கட்டணம் வேண்டி வந்துள்ள ஒரு வாட்ஸ்அப் பதிவு இந்த படம். இது சரியா என்று தெரியவில்லை. உயிர் தப்பினால் போதும் என்ற ஒரு அபாயகரமான சூழலில் நாம் தவித்து நின்று கொண்டிருக்கும் பொழுது, இவர்கள் முழு கட்டணத்தையும் உடனடியாக கட்டவேண்டுமாம்.
அதிலும் கூகுள்பே ல் கட்டுங்கள் என்று என வேண்டுகோள் வைப்பது போல, அதிகார பூர்வமாய் அறிவிப்புகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். இது எந்த அளவுக்கு சரி என்று அவர்களுக்கு தோன்றுகிறதா இல்லையா என்று தெரியவில்லை.
இதற்கு நம் அரசாங்கம் சற்று கவனித்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமா என காத்திருக்கிறோம். மக்களின் நன்மைக்காக நல்லதொரு முடிவை எடுக்குமா பொறுமையுடன் காத்திருக்கிறோம்…
#PSBB #school #SchoolFees #onlineclasses