வரலாற்றில் இன்று – 20.11.2020 சர்வதேச குழந்தைகள் தினம்

 வரலாற்றில் இன்று – 20.11.2020 சர்வதேச குழந்தைகள் தினம்

சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம்

ஆப்பிரிக்கா, இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப்பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஆம் தேதியை ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.

திப்பு சுல்தான்

“மைசூரின் புலி” என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த இவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.

உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்” என்று ஆங்கிலேயர் கூறியபோது, முடியாது என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல் வாழ்வதை விட, புலியைப் போல் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணம் அடைந்தார்.

தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் 1799ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1985ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...