வரலாற்றில் இன்று – 17.07.2020 சர்வதேச உலக நீதி தினம்
சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சனைகளின்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப்
1894ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வானியலாளரான ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர் (Georges Henri Joseph Edouard Lemaitre) பெல்ஜியத்தில் பிறந்தார்.
இவரே முதன் முதலில் பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்ட ஆவார். இவர் 1966ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பார்முலா 1 போட்டிகளில் பங்கேற்ற பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் இழூல்சு பியான்கி மறைந்தார்.