12. அலங்-கோலாகலம் இயக்குனர் விஷ்வாஸ் தனது காரைச் செலுத்திக்கொண்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி, கேட் அருகே சற்று நிதானித்து இடப்புறம் பார்த்தான். தொலைவில் கனிஷ்காவின் கருமை நிற BMW விரைந்து கொண்டிருந்தது. ‘கனிஷ்காவுக்குத் தெரியாமல் நிச்சயதாம்பூலத்திற்கு வரவும்’, என்று மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான் மிதுன் ரெட்டி. கனிஷ்காவுக்கு எவ்வளவு பயப்படுகிறான் என்பதை இன்றுதான் விஷ்வாஸ் புரிந்துகொண்டான். விஸ்வாஸு க்கு மிதுனின் மீது அளவு கடந்த பிரியம். ‘விஷ்வாஸ் இயக்கினால் உடனே டேட்ஸ் கொடுக்கிறேன்’ என்று […]Read More
6. சம்மதம் கிட்டுமா..? நந்திவர்மர் மாறன்பாவையை சந்தித்து, தனது மனதை வெளிப்படுத்திய பின்னர், ஏரிக்கரை மண்டபம் நோக்கி நடந்தார். அவரது மனதில் ஒருபுறம் மாறன்பாவையின் உடலிலிருந்து வெளிப்பட்ட சுகந்தமும், மறுபுறம் சங்காவின் காதலின் ஆழமும் போட்டியிட்டு சஞ்சலப்படுத்தின. “ஐயனே. அந்தப் பெண்ணை அவளது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டீரா?” சங்கா கேட்டது அவரது செவிகளில் விழவில்லை. “என்ன யோசனை ஐயனே? நான் கேட்பது கூட செவிகளில் விழாத அளவு யோசனையில் உள்ளீரே..?” நந்திவர்மரது தோளில் கை வைத்துக் கேட்டாள் […]Read More
பள்ளி ஆண்டு விழாவில் பார்த்த வாகினியின் ஆசிரியையான மகாலட்சுமி தன்னுடைய வரவை எதிர்பார்த்து, கபிலன் இந்நேரம் வெளியே காத்திருப்பான் என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்தை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தாள். அவள், எதிர்பார்த்ததைப் போல் கபிலனும் பள்ளிக்கூட முன்வாசலில் சைக்கிளில் காத்திருந்தான். அதே நேரத்தில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் எல்லோரும் வீட்டுக்கு செல்வதற்காக ஒருவரை ஒருவர் முந்தியடித்துக்கொண்டு வேகமாக வெளியே ஓடி வந்தனர். அதில் வாகினியும் ஒருத்தி. அந்தக் குழந்தைகளை எல்லாம் முந்தியடித்துக்கொண்டு முன்னால் […]Read More
11. குகன் மணியின் எச்சரிக்கை பீஜிங்கில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தை குகன்மணி செலுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற நினைப்பே மயூரிக்கு முள்ளின் மீது நிற்பது போன்று அவஸ்தைப்பட வைத்தது. நிலப்பகுதியில் பறக்கும் போது, திடீர் என்று வெறிபிடித்து ஏதாவது ஓங்கி உயர்ந்த கட்டிடத்தின் மீது மோதிவிடப் போகிறானே என்று பயந்தாள். கடல் நீரின் மீது பறக்கும்போது, விமானத்தை நீரில் மூழ்கடிக்க செய்து விடுவானோ என்று கலவரப்பட்டாள். விமானத்தை அவன் […]Read More
“பேய் ரெஸ்டாரெண்ட்” அந்தக் காலை நேரத்தில் படு பிஸியாயிருந்தது. எலும்புக் கூடு சப்ளையர்களும், பிசாசு உருவ ஊழியர்களும், ரத்தக் காட்டேரி கேஷியர்களும் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். வழக்கம் போல் எலும்புக் கூட்டின் தலை கழன்று விழுவதும், அந்தரத்தில் ரத்தச் சொட்டுடன் கை பறப்பதும், கை கழுவச் செல்லும் கஸ்டமர்களை அங்கே ஒளிந்திருக்கும் பாதி எரிந்த சவம் கழுத்தைக் கடித்துக் குதறுவதும், சிறப்பாக நடந்து சிரிப்பாக முடிந்து கொண்டிருக்க, கல்லா என்னும் கட்டழகி விரைவிலேயே நிறைமாத கர்ப்பிணி ஆகி […]Read More
5. காதல் மனம் தன்னை அணைத்து, தனது இதழ்களில் முத்தமிட்ட நந்திவர்மரை பிடித்துத் தள்ளிய அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்த நந்திவர்மர் அதிர்ந்தார். “யார்.. யார் நீ?” பதிலேதும் வரவில்லை. எனினும், அந்த பெண்ணின் மெல்லிய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. “என்னை மன்னித்து விடு பெண்ணே. என் மனைவி என நினைத்தே உன்னை அணைத்து விட்டேன். மன்னிப்புக் கேட்பதால் நான் செய்த தவறு சரியாகிவிடாது. எனினும், அதைத் தவிர என்னால் வேறு […]Read More
வெற்றித்தோல்வி என்பது கனவுகளில் தோன்றி நிழல்களில் முடிகின்ற காட்சி அல்ல. நினைவில் தொடங்கி நிஜத்தில் தொடர்கின்ற கருப்பொருள் அது!. வெற்றி தோல்வி மனிதர்களால் தோன்றக் கூடிய ஒன்று. இரண்டிற்கும் நாமே பொறுப்பு என்று உணரும்போது தான் தோல்வி நமக்குப் புதியதொரு வெற்றி என்கின்ற வெளிச்சத்தைத் தேடித் தருகிறது. அந்த இரண்டு பாடத்தை நமக்குக் கற்றுத் தரக் கூடிய இரண்டு இடங்கள் இங்கு உண்டு. முதலாவது பகுத்தறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம். பத்தாம் வகுப்பு கடந்து செல்லும், மாணவர்களுக்கு இறுதியாண்டின் […]Read More
10. மூன்றாவது சிலை..! நல்லமுத்து சென்னைக்குப் புறப்பட ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பள்ளங்கி பவனம் காவலாளி ராஜாபாதரிடம் பலமுறை கூறிவிட்டார். “நான் சென்னைக்கு நீண்டகாலம் கழித்துப் போகிறேன். கொஞ்ச நாள் அங்கே தங்கிட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நேரத்தில் உள்ளே ஒரு ஈ காக்கையைக் கூட நுழைய அனுமதிக்காதே. நான் ஆராதிக்கிற முருகன் சிலையைக்கூட, சென்னைக்கு எடுத்துப் போறேன். அதனால, யாரையும், உள்ளே விடாதே..! குறிப்பா… சஷ்டி சாமி வந்தாக்கூட, நான் சாவியை எடுத்துட்டுப் போய் இருக்கிறதா […]Read More
4. ஏரிக்கரை காஞ்சிபுரம் அரண்மனை பரபரப்பாக இருந்தது. பணிப்பெண்கள் இங்குமங்கும் ஓடியாடி ஏதோ செய்து கொண்டிருந்தனர். வீரர்கள் பணியாட்களிடம் ஏதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். அரண்மனை வாயிலில் ஒரு சிவிகை கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்த அந்த சிவிகையின் இருபக்கமும் திரையிட்டு மூடப்பட்டிருந்தன. சிவிகைக்கு பக்கத்தில் அதைச் சுமப்பவர்கள் நின்றுக கொண்டிருந்தனர். “எல்லாம் தயாரா..?” அரண்மனையின் உள்ளிருந்து வந்த நந்திவர்மர் கேட்டார். “அனைத்தும் தயார் மன்னா. தங்கள் உத்தரவு கிடைத்தால் புறப்படத் தயாராக உள்ளோம்.” பதில் […]Read More
தனியாகத் தொழில் தொடங்கலாமா வேண்டாமா என்று கஸ்தூரியிடம் கூறிவிட்டு, தான் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்குள் வழக்கமான நேரத்தில் நுழைந்தான், சதாசிவம். அவன் தொழிற் சாலைக்குள் நுழையும்போதே கண்களில் ஒரு கனவும் மனதில் ஒரு குழப்பமும் அலைமோதியது. முதலாளியான குமார் ஒரு புதிய அலுமினிய பாத்திரத்தில் நசுங்கி இருந்த இடத்தை, உளியைக் கொண்டு சரி செய்து கொண்டிருந்தார். “வணக்கம்!, முதலாளி” “வணக்கம்!, என்ன சதாசிவம் கவலையா வணக்கத்த வைக்கிறியே. உடம்புக்கு என்ன?” என்று வார்த்தையை முடித்தார், குமார். “அதெல்லாம் […]Read More
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!