“தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம் எண்ணங்களே நமது செயல்களே நம் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக வைப்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது..” என யாரிடமோ மொபைலில் பேசி கொண்டே முகேஷின் வீட்டிற்குள் நுழைந்தான் ஹரிஷ். “வாடா..!” என ஹரிஷை வரவேற்று, “அம்மா காபி குடும்மா..” என உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான் முகேஷ். “வாப்பா ஹரிஷ்..! எப்படியிருக்க..?” என்றபடி காபியை நீட்டினாள். “நல்லாருக்கேன்ம்மா. இன்னைக்கு கடைசி எக்ஸாம். […]Read More
5. கூந்தல் எண்ணெய் அதே நாள். சில மணிநேரம் முன்பு. “ஏய் சாந்தினி! அசமந்தம்! இன்னைக்கு ராத்திரி ட்ரெயின் ஏறணும், சீக்கிரம் சாமானையெல்லாம் எடுத்துவைன்னு நாலு நாழியா கத்தறேன், நீ அசையவே இல்லை! கடைசில சாமானையெல்லாம் நானும் உன் அம்மாவுமே எடுத்து வெச்சுட்டோம். சரி, நீயாவது ரெடி ஆகிக்கக் கூடாதா? இன்னும் குளிக்கக்கூட இல்லை. வந்து உட்கார், எண்ணெய் தடவித் தலைவாரி விடறேன்…” பாட்டியின் அழைப்புக்குப் பதில் வராமல் போகவே “அந்த செல்போன்ல அப்படி என்னதான் இருக்கோ? […]Read More
பாரதி வெளியே வர, சிதம்பரம் மட்டும் சற்றே கவலையுடன் காத்திருந்தார்! “என்னம்மா சொன்னார் உங்கிட்ட..? கோவப்பட்டாரா..?” “கோவப்பட என்ன இருக்குப்பா..? வேண்டாம்னு சொல்றது என் உரிமை..! அதை கேள்வி கேக்கற அதிகாரம் அவருக்கு இல்லையேப்பா..! நான் கிளம்பறேன்..! சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்..!” சிதம்பரத்தை, பூதம் அழைத்தார். சிதம்பரம் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தார். “ஒக்காருங்க சிதம்பரம்..! உங்க மகள் ரெண்டாவது முறையா என்னை அவமானப்படுத்தறா..!” சிதம்பரம் பேசவில்லை. “உங்களை பற்றி ரொம்ப உயர்வான அபிப்ராயம் வச்சிருக்கா உங்க […]Read More
அத்தனை சந்தோஷமாக ருக்மிணியம்மாள் இருந்ததே இல்லை. தரையில் கால் பாவாமல் நடந்ததில்லை. நினைவுகள் நிலைகொள்ளாமல் அலைந்ததில்லை. சமையலறைக்கும் வாசலுக்கும் ஓடினதில்லை, செய்கின்ற காரியங்களில் கவனமற்றுப் போனதில்லை. ‘கணவருக்குத் தெரியப்படுத்தலாமா..?’ தொலைபேசி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு யோசித்தாள். “இல்லை, வேண்டாம். முதலில் நாம் பார்க்கலாம். நம் மனசுக்குப் பிடித்தபின், கணவரிடம் சொல்லலாம்.” ரிஸீவரை வைத்தாள். ‘நம் மனசுக்குப் பிடிப்பதென்ன…? அதான் மதுவிற்குப் பிடித்தாகி விட்டதே…’ உடனே அவனுக்குச் சொல்ல நினைத்து, அவன் இருக்கக்கூடிய அத்தனை இடங்களுக்கும் […]Read More
குடிவந்த ஒரே வாரத்தில் தனலட்சுமியும், அம்ரிதாவும் மிகவும் நெருங்கி விட்டனர். அம்ரிதாவின் கணவர் சர்வேஷ் டெல்லிக்குக் கிளம்பிவிட, அம்ரிதா குழந்தையுடன் தனியாக இருக்க, தனலட்சுமியும் அவளுக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்யவே இருவருக்குமான நட்பு மேலும் பலப்பட்டு விட்டது. குழந்தை ஷ்ரதா பெரும்பாலும் முகேஷின் வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருப்பாள். சில நேரத்தில் அவளை திரும்ப அழைத்துச் செல்லும் போதும், காபித்தூள், சர்க்கரை என அவசரத் தேவைகளின் போதும் அம்ரிதா அடிக்கடி வீட்டுற்கு வந்து போகும் தருணங்களிலும் முகேஷைப் பார்த்து […]Read More
32. நாலு பக்கம் ஏரி..! ஏரியில தீவு..! மயூரி அந்த ஒற்றையடிப் பாதையில் தொடர்ந்து நடந்தாள். சற்றுத் தொலைவில் குமுதினியும், குனோங்கும் பின்தொடர குகன்மணி அந்தப் பாதையில் விரைந்து கொண்டிருந்தான். தொலைவில் இருந்த சிறு குன்றின் உச்சியில், விண்ணில் மிதந்து வந்த ஒளிவட்டங்கள் இறங்கியதன் அடையாளமாக ஒருவித ஒளி பரவியிருந்தது. குகன்மணிக்கும் அவற்றிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்..? குமுதினி, குனோங் இருவரையும் அழைத்து கொண்டு, இந்த இரவு வேளையில் எங்கே அவசரமாக செல்கிறான்..? சிறிது தொலைவே […]Read More
4. சிறுகத்தி தன்னுடைய வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, கொட்டைப் பாக்கைச் சிறு கத்தியால் சீவி, சுண்ணாம்பு தடவப்பட்ட துளிர் வெற்றிலையில் அன்புடன் வைத்துக் கொண்டிருந்தார் சுப்பாமணி. வெளியே ஏதோ சப்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்வையைப் போட்டவர், அதிர்ந்தார். ப்ரிஜேஷின் சட்டை ஒரு பெண்ணின் கைகளில் கொத்தாக மாட்டியிருந்தது. (சட்டைக்குள் ப்ரிஜேஷ் இருந்தான்.) வெளியே பாய்ந்தார் சுப்பாமணி. கம்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே அதற்குள் கூடிவிட்ட சிறு கூட்டத்தைப் பிளந்துகொண்டு ப்ரிஜேஷ் அருகில் சென்றார். “என்ன… என்ன பிரச்சனை? எதுவாயிருந்தாலும் பேசித் […]Read More
அப்பா சிதம்பரம், கொஞ்சம் சோர்வுடன் இருந்தார்! அம்மா கௌசல்யா அதைக் கவனித்தாள்! பொதுவாக கண்டிப்பும் கறாரும் இருந்தாலும், குடும்பம் என்று வந்தால் உருகும் மனிதர் சிதம்பரம்..! இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் சுயநலவாதியும் கூட. தன் மனைவி, மூன்று மகள்களை தவிர அவருக்கு எந்தச் சிந்தனையும் இல்லை! அவர்கள் நன்றாக இருந்தால் போதும்! தன் உடன்பிறப்புகள், மனைவியின் உறவுகள் என யாரையும் மதிக்க மாட்டார்..! யார் வீட்டு விசேஷங்களுக்கும் போகவும் மாட்டார்..! “இது சரியில்லீங்க..! நமக்கும் நாலு மனுஷங்க […]Read More
-அமானுஷ்ய தொடர்- திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம்,திருப்பாம்புரம், நாக ராஜா கோயில் மற்றும் சங்கரன் கோவில் என்று நாகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றும் வகையில் பல கோயில்கள் நம் தமிழகத்தில் இருந்தாலும் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நயினார் தீவில் உள்ள “நாக பூசணி அம்மன் கோயில்” நாகர்களுக்கான அதி சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.இந்த கோயில் எவ்வளவு பழமையானது என்று யாராலும் வரையறுத்து சரியாக கூற முடியவில்லை.ஆனால், இக்கோயில் நாகர்களுக்கான மிக முக்கியமான கோயிலாக கருதி வழிபட்டு வரப்படுகிறது. […]Read More
மரத்தின் பின்னே ஒளிந்திருந்த திருமுருகன் சுறுசுறுப்பானான். அவன் எச்சரிக்கை அணுக்கள் ஒவர் டைம் வேலை செய்தன. “என்னது…வர்ற உருவம் ரொம்பக் குள்ளமா இருக்கு?…” அந்த உருவம் அருகில் வர…வர…திருமுருகன் தன் பார்வையைக் கூராக்கிப் பார்த்தான். “அட…இவன் சிவா கூட ஈவெண்ட் பண்ற குள்ள குணாவாச்சே?…இவன் எதுக்கு இந்த நேரத்துல இங்க உலாத்தறான்?” அப்போதுதான் திருமுருகனின் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. “ஒரு வேளை இவன்தான் துர்ஆவி தங்கியிருக்கும் விடுதியோ?” அவன் ஒளிந்திருக்கும் மரத்தை அந்த குள்ள குணா […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )