சென்னை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்கிறது. குன்றத்தூரில் அமைந்துள்ள இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். ஏரியின் முழு கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியாகும்.

இந்நிலையில், ஏரிக்கரைகள் மற்றும் மதகுகளின் பலத்தை முழுமையாகக் கண்டறியும் நோக்கில், ஏரியின் முழு கொள்ளளவான 24 அடி நீரைத் தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரி முதல் முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் நீர் மட்டம் 24 அடியை எட்டியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து 250 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
