எழுத்தாளர் பேனாமுனை
உலக ஊழல் எதிர்ப்பும் இந்திய ஊழல் வளர்ப்பும்
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. முதலில் ஊழல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமா? ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். ஊழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ‘ஊழல் புலனாய்வுக் குறியீடு’ […]
பத்திரிகையாளர் பாமா கோபாலன் காலமானார்
சென்னையில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார். பி.எஸ்ஸி. பட்டதாரி. தான் படித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப் பிரிவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணிபுரிந்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி. 1963ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்களால் […]
துப்பறிவாளர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை
தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். TAPD என்ற தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் டாக்டர் மது “சட்டம் மற்றும் குற்றவியல் தடையவியல் பட்டதாரி மாணவர்களுக்குத் துப்பறிவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர […]
தனித்தமிழ் வழிவந்த இறைக்குருவனார் வாழ்வும் பணியும்!
மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழியில் தமிழ் மொழி, இனம், நாட்டுரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் களம் கண்டவர் இறைக்குருவனார். இவர் கழகக் காலப் புலவர்களுக்கு இணையான தமிழ்ப் புலமைப் பெற்றவர். மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராடி சிறை சென்றவர். பாவலரேறுவிற்குப் பின் ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் தனது இறுதிக் காலம் வரை சிறப்புறச் செயலாற்றியவர். மனுதரும நூல் எரிப்புப் போராட்டத்தில் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனாருடன் இணைந்து கலந்துகொண்டு […]
சிறுகதை எழுதுவது எப்படி? – ராஜேஷ்குமார் – மின்மினி நவம்பர்
மசால் தோசையும் சிறுகதையும் என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் சிறுகதை எழுதுவது எப்படி என்தை அவரது பாணியில் சொல்லித் தருகிறார். – படியுங்கள் மின்மினி நவம்பர் மாத இதழ்… மேலும் படிக்க…
சுபாஸ்கரனும் லைகா நிறுவனமும் ஒரு பார்வை…
இந்தியத் திரைப்படத் துறையில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ரஜினி நடித்த ‘2.0’ படம் ஏற்படுத்திய தாக்கம் அடங்கிய உடனே தற்போது ‘பொன்னியின் செல்வன்’ ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்துகொண்டுள்ளது. லைகா தயாரிப்பு என்றாலே மிகப் பிரம்மாண்டம்தான். தற்போது ரஜினி நடித்து தயாராகியுள்ள ‘தர்பார்’, கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’, மணிரத்னம் இயக்கி அடுத்த மாதம் வெளிவரவுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறது லைகா. சரி லைகா தயாரிப்பு நிறுவன முதலாளி யார்? […]
பிரான்ஸில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் 2022ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைத் தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும் அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அன்னி எர்னாக்ஸ், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதும் துணிச்சலான […]
‘புலியைத் தொடுக மொழியைத் தொடாது விடுக’ வைரமுத்து காட்டம்
கவியரசர் வைரமுத்து மத்திய அரசை நோக்கி தன் விரல்களை நீட்டி “அதிகாரமிக்கவர்களே, அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக, மொழியைத் தொடாது விடுக” என்று காட்டமான கவிதை ஒன்றை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. வைரமுத்து எழுதும் கவிதைகள். கதைகள் எப்போதும் பரபரப்பாகப் பேசப்படுவதைப் போலவே அவரது அறிக்கைகளும் அடிக்கடி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவருவது சகஜமாகி விட்டது. அது பற்றிய ஒரு பார்வை இதோ. வைரமுத்து தற்காலக் கவிதைகளின் ஆளுமை. தன் வசீகரிக்கும் எழுத்தாற்றலால் பேச்சாற்றலால் […]
பெண் குழந்தைகளைத் தலைநிமிரச் செய்த 111 கன்றுகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிற ஒரு குக்கிராமம், பிப்லாந்திரி (Piplantri) . சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும், பெண் குழந்தை பிறந்த செய்திதான் அங்கு மிகப் பெரிய துக்கச் செய்தியாக இருந்தது. காரணம் அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரதட்சணை பழக்கவழக்கம். அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும், சமூக ஆர்வல ருமான ஷியாம் சுந்தர் பலிவால் தன் கிராமத்தின் பெண் குழந்தைகளின் எதிர்காலத் தைக் கருத்தில்கொண்டு ஒரு திட்டத்தை யோசித்து, அரசாங்க உதவியுடன் நடை முறைக்குக் கொண்டுவந்தார். […]
இலக்கியச்சோலை – 13ஆம் ஆண்டு விழா
இலக்கியச்சோலை, திங்களிதழ் சார்பாக 13ஆம் ஆண்டு விழா 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் இக்சா மையம் (ஜீவனஜோதி ஐடிஐ) (ICSA Centre), 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600 008. (கன்னிமாரா நூலகம் மற்றும் மியூசியம் எதிரில்) நடைபெற்றது. அது சமயம் இலக்கியச்சோலை’ 13ஆம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. ‘இலக்கியச்சோலை’யின் வாழ்நாள் உறுப்பினர்களுக்கு (2021-22) ‘இலக்கியச் சோலையின் இமயம்’ விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து கவியரங்கமும் கருத்தரங்கமும் நடைபெற்றது. சான்றோர்களுக்கு […]