அத்தியாயம் -12 நாய் கடிக்கு மருந்து வாங்க போய் நரி கடித்த கதையானது. தலைவலிக்கு தைலம் கேட்கப் போனவள் தலையையே தண்டவாளத்தில் கொடுத்ததைப்போல் கீழே வந்தாள். சோபாவில் சாய்ந்தாள். பார்த்த காட்சி பயங்கர கோபத்தை உண்டாக்கியிருந்தது. உள்ளே புகுந்து அப்படியே கோதையின் கன்னத்தில் பளார் பளார் என அறைய வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டு அங்கிருந்து வந்துவிட்டாள். உள்ளே கண்ட காட்சி உண்டாக்கிய அதிர்ச்சி உயிரையே அசைத்ததைப் போலிருந்தது. ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கோதை. ஒரு கையில் […]Read More
அத்தியாயம் – 12 “கொஞ்ச நாளைக்கு முன்னால ராகவ் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா சொன்னானாம்மா..“ பாஸ்கரன் நந்தினியிடம் கேட்டார். நந்தினி திடுக்கிட்டு அவரை பார்த்தாள். “உங்களுக்கு எப்படிப்பா அந்த விஷயம்..“ “ எப்படியோ தெரிஞ்சுது.. நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு..“ “ஆமாம்ப்பா..“ “அதுக்கு நீ என்ன பதில் சொன்ன..“ “எனக்கு ஐடியா இல்லன்னு சொல்லிட்டேன்..“ “ஏன்..“ “அம்மா இறந்ததுக்கப்புறம் என்னை வளர்க்குறதுக்காக நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிங்க.. எனக்காக இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கல.. அது […]Read More
அத்தியாயம் – 12 உன் நினைவுகளை உன் பின்னால் அனுப்பு. உன் கனவுகள் முன்நோக்கிச் செல்லட்டும். உன்னால் முடியும் என்ற எண்ணம் மட்டுமே உனக்குள் இருந்து உன்னை வழி நடத்தட்டும். வாசல் கேட்டில் அமர்ந்து ஒரு காகம் கரைந்தது. வைத்திருந்த சாத உருண்டையை பார்த்து விட்டு கா,கா என்று தன் சுற்றத்தைக் கூவி அழைத்தது. எங்கியோ பறந்து போய் தன் இனத்துப் பறவைகள் இரண்டுடன் மீண்டும் வந்தது. […]Read More
அத்தியாயம் – 02 “நானும் அவரும்” தலைப்பு உபயம் : கல்யாணி கண்ணன் குமுதம் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ரா.கி.ரங்கராஜன் சொன்னதுபோலவே இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்பது போல், உரையாடல் பாணியில் பேட்டியை எழுதினார் இவர். “சார் கொண்டு வந்து கொடுக்கலாமா?” என்று போன் செய்து கேட்டபோது, “அப்பிடியே ஒரு போட்டோகிராஃபரை வைச்சு நீங்க ரெண்டு பேரும் உரையாடுவது போல் ஒரு போட்டோ எடுத்து அனுப்பிடுங்க” என்று சொல்லிவிட்டார் ரா.கி.ர சார். இப்போது போல் […]Read More
அத்தியாயம் – 03 துவாரகா உள்ளே வந்தான். அம்மா எதையோ எடுக்க உள்ளே வந்தார். “அம்மா! தலைவலியா இருக்கு. கொஞ்சம் காபி குடேன்.” அம்மா காதில் அது விழுந்ததாகவே தெரியவில்லை. திரும்பி நடக்க, “அம்மா! நான் உன் கிட்ட காபி கேட்டேன். உன் காதுல விழலையா? மூன்று வயது அஸ்வின் உள்ளே ஓடி வந்தான். “ பாட்டி! அப்பா எங்கே? எனக்கு கிண்டர் ஜாய் வாங்கி தர்றதா சொன்னாங்க.” “எனக்கு அதிர்ச்சியா இருக்கு. நான் எதிர்ல இருக்கேன். […]Read More
தாய்மை சிறகா? சிலுவையா? ஆண்களை விட பெண்களுக்கு மல்டி டாஸ்க்கிங் எனப்படும் பல்பணி ஆளுமைத் திறன் அதிகம். குறிப்பாக இந்தியப் பெண்களிடம் இது இன்னும் அதிகம். வீட்டுக்குச் சமைத்து, துணிமணிகள் துவைத்து, கணவனுக்கு மனைவியாய், குழந்தைகளுக்குத் தாயாய், பிறந்த வீட்டின் மகளாய், புகுந்த வீட்டின் மருமகளாய் ஒரு பெண்ணின் சமூகப் பாத்திரம் பல்வேறு முகங்கள் கொண்டது. கால நீட்சியில் பெண்களும் ஹேண்ட் பேக் மாட்டிக் கொண்டு பணிக்குச் செல்லும் சூழல் வந்தபோதும் அவர்கள் வகித்து வந்த பாத்திரங்களின் […]Read More
அத்தியாயம் – 2 அந்தக் கணம் யோதித்தாள் பிருந்தா.. இந்தப் பூமி அப்படியே பிளந்து நான் உள்ளே போய்விடக் கூடாதா? தங்கைகள் சுக வாழ்விற்குத் தடையாய் இந்தப் பூமி ஏன் இன்னும் என்னை விழுங்காமல் வைத்திருக்கிறது என்று! தங்கைகள் கூறியது போல் எதற்காக இந்த தாய பாக்ஸ்,இந்த மரப்பாச்சி உயிரோட இருக்க வேண்டும்?எண்ணியவள் கண்கள் மேலும் கண்ணீரை உதிர்த்தது.வாய் விட்டு அழவேண்டும் என்று வந்த ஆசையை சிரமப் பட்டு அடக்கினாள்.வயதான தாய் தந்தை இல்லை என்றால் இவர்கள் […]Read More
அத்தியாயம் – 2 “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றதுமே மேளம் முழங்கியது. மஞ்சள் சரட்டை எடுத்தவன் அருகில் சொர்ண பூம்பாவையாய் நின்றிருந்தவளை ஏறிட்டான். அவளோ நிலம் தவிர எங்குமே நோக்கவில்லை. கைகள் தயங்கியே நிற்க “மாப்பிளே! கட்டுடா தாலியை “ என்று செந்தில் குரல் கொடுக்க மணப்பெண்ணின் நீள்விழிகள் லேசாய் இமைக் குடை உயர்த்த ‘சட்’டென்று அந்த நொடி நேரத்தில் அந்த மைவிழிகளைக் கவ்வியது நந்தனின் விழிகள். “சம்மதம் தானே! “ என்று கண்கள் தொடுத்த […]Read More
அத்தியாயம் –11 சரியாக காலை பத்து மணிக்கு, அந்த நடனப் போட்டி துவங்கியது. முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், தற்போதைய திரைப்படங்களில், பெரிய பெரிய ஸ்டார்களையெல்லாம் ஆட்டுவிக்கும் டான்ஸ் மாஸ்டரான கோகுலவாசன் சிறப்பு அழைப்பாளராக வந்து, போட்டியில் கலந்து கொள்ளும் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாய் ஒரு உரையை நிகழ்த்தி விட்டு, இறுதியில் எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கும் அந்த அறிவிப்பையும் வெளியிட்டார். “இந்த நடனப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெறும் மாணவச் செல்வங்களை நான் […]Read More
அத்தியாயம் – 11 கடலை ஒட்டி வானவில் வண்ணக்குடைப் பிடித்திருந்தது. தூரத்தில் எங்கேயோ மழை பெய்ய வேண்டும். கடற் காற்றுடன் மழைக் காற்றும் வீச, அந்த மதியப்பொழுதும் மாலை நேரம் போல் ரம்மியமாக இருந்தது. வண்டியை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள கடற்கரை சாலையில், ஓர் ஓராமாக நிறுத்திவிட்டு, கார்த்தியுடன், மணல் வெளியில் கால்கள் பதிய நடந்தாள். காற்றில் பறந்த துப்பட்டாவை இழுத்துப்பிடித்தாள். கார்த்திக் உடன் வந்தாலும், அவள் மனக் கண்ணில், இலக்கியத்தில் படித்த பண்டைய கடற்கரை […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்