96 பக்கங்களை கொண்ட காஷ்மீர் ஜோசப் அவர்களின் பேரழகியின் பெயரென்ன ? கேள்விக்குறியோடு தலைப்பைச் சுமந்திருக்கும் இந்த கவிதைத்தொகுப்பு காதல் ஒவ்வொரு பரிமாணத்தையும் விவரிப்பதாய். வலியும், சுகமும், ஏக்கமும், தவிப்பும், பூரண திருப்தியும், அழுகை, சிரிப்பு என ஒவ்வொரு அழகான உணர்வுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர். காதல் அதை சுவாசிக்காத மனிதர்கள் இல்லை, எல்லா உறவுகளுக்கு உள்ளும் வெவ்வேறு பரிமாணங்களில் காதல் வாழ்ந்து வருகிறது. நமக்கு வேண்டிய பெயர்களை நாம் அதற்கு இட்டுக் கொள்கிறோம் என்பதே உண்மை. […]Read More
ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களின் கைவண்ணத்தில் கண்மணியில் வெளியான வா…வா…வசந்தமே நாவல். தெளிந்த நீரோடையில் வீசும் தென்றலைப் போல சுகம் பரப்பும் நாவல். இந்த விமர்சனம் சற்று தாமதம் என்றாலும் தரமான ஒரு நாவலுக்கு என்பதில் சந்தேகம் இல்லை. கதையின் முதல் அத்தியாயம் இன்றைய உணவிற்கு பணியைத் தேடிச் சுமக்கும் கண்களைக் கொண்ட கூட்டத்தினருள் ஒருத்தியாய் கதாநாயகி வசந்தி, முதலில் புறக்கணிக்கப்பட்டாலும் மீண்டும் பணிக்கு அமர்த்திக் கொண்டு, சித்தாளாய் வசந்தியின் முதல்அத்தியாயம். சாந்துசட்டியினைச் சுமக்கும் விரல்களின் கணத்ததையும் தாண்டி […]Read More
ஒரு உயிரற்ற பொம்மையின் உயிர்ப்புள்ள வாழ்க்கைச் சித்திரம் இந்த மரப்பாச்சி. கதையின் தலைப்பு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சகிதா முருகனின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது என்று நினைக்கிறேன். வெறும் வர்ணனைகளில் வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் அற்புதமான கதையோட்டத்தை தெளிந்த நீராய் கொடுத்திருக்கிறார் அதற்கு வாழ்த்துக்கள். பிருந்தா அன்பான மகள், அழகில்லா உடல் அமைப்பினால், திருமணம் என்ற சந்தையில் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறாள். சகோதரிகளின் வெறுப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்து இரண்டாம் தாரமாக மணிமாறனை […]Read More
அலங்காரத் தேரின் சக்கரங்கள் கடவுளுக்காக சுழலும் நேரத்தில் சில நேரம் கடமைக்காகவும் சுழல்கிறது என்பதுதான் நிலவோடு வா தென்றலே, தென்றலாய், புயலாய், சூறாவளியாய், சுழல்கிறது அத்தியாயங்கள். அது சுமந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள். சுயநல ஓவியத்தின் வரிவடிவம்தான் தினேஷ் கதாபாத்திரம். தன்னம்பிக்கையின் சுடரொளியாய் உமா. நாவல் படிக்கும் போது நல்லதொரு நாடகம் பார்த்த நிறைவு அத்தனை எதார்த்தம் பொதிந்திருந்தது உமாவின் தந்தை டாக்டர் சுமித்ராவின் குடும்பம் ஒரு பெண்ணால் தன் மனதில் உள்ள […]Read More
பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம் – கமலகண்ணன் அன்பை அள்ளித் தரும் அன்னையாய் பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய் சரித்திர நேசமுடன் சகோதரியாய் அப்பாவின் பெண்பாலாக அத்தையாய் பெரிதுவக்கும் பெரியம்மாவாய் சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய் அன்னைக்கு அடுத்தாக அண்ணியாய் மனதை புரிந்து கொள்ளும் மச்சினியாய் மனமுருக வைத்திடும் மகளாய் மகிழ வைத்திடும் மருமகளாய் இவை அனைத்திற்கும் மேலாக கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய் தோள் கொடுக்கும் தோழியாக […]Read More
குற்றப் பரம்பரை நமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல் “பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்” என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான். ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்கள் என்று நிலைநிறுத்தி எழுதுகிறார் என்றால் கண்டிப்பாக அந்த எழுத்தில் உண்மையும் யதார்த்த நிலையும் கண்டிப்பாக இருக்கும் என்ற ஆசையில் தான் இதை படிக்க எடுத்தேன். நான்கு நாட்களில் படித்து முடித்த முதல் புத்தகம். நேர்மை. […]Read More
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?
- நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!