சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல் விவரங்களைப் பள்ளி மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிழலில்லாத நாள் குறித்து தங்களைச் சுற்றியுள்ள பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை எவ்வாறு தெரிவிப்பது என்பது தொடர்பாகப் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள். நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் […]Read More
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா வி. சிங் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி (வடக்கு) நல்லிபாளையத்தில் 28-2-2023 அன்று புத்தகத் திருவிழா தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. 80 புத்தக அரங்குகள், 20 பேச்சாளர்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு, உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ணமீன் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி எனக் களைகட்டியது புத்தகத் திருவிழா. நாமக்கல்லில் முதன்முறையாக நடைபெறும் அரசு புத்தகத் திருவிழாவில் […]Read More
“கடந்த 2021 – 22ஆம் நிதியாண்டில் எட்டு தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த நிதியில் பாதிக்கு மேற்பட்ட தொகையை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பெற்றுள்ளது” என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. புதுடில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR), கடந்த நிதியாண்டில் நாடு முழுதும் இருந்து தேசியக் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 2021-22 நிதியாண்டில் இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் […]Read More
சென்னை தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா அரங்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு ஓவியக் கண்காட்சியை எட்டு நாட்களுக்கு நடத்துகிறது. கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் 150 ஓவியங்கள் மற்றும் சிறப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பார்வையாளர்கள் தினமும் இலவசமாகப் பார்வையிடலாம். 19-02-2023 ஞாயிறு காலை தொடங்கி 26-02-2023 சனி மாலை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை ஓவியரும் நடிகருமான சிவகுமார் ஞாயிறு (19-02-2023) காலை 11 மணிக்குத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். […]Read More
‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடியாக ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது. வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாகக் கருதப்படும் ‘சாட்-ஜி.பி.டி.’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏ.ஐ. உருவாக்கி இருக்கிறது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். தொழில்நுட்ப உலகில் சக்கரவர்த்தியாக விளங்கும் கூகுள் நிறுவனத்தைக் கட்டுப்படுத்தவே இவர்கள் ஒன்றிணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘சாட்-ஜி.பி.டி.’க்குப் பதிலடி கொடுக்கும்விதமாக ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை […]Read More
இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படுவது கிராமி விருது. கர்நாடகாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்று சாதித்திருக்கிறார். சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ரிக்கி கேஜ் ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம், சிறந்த அதிவேக ஆடியோ ஆல்பம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பாடல் ராக்-லெஜண்ட் மற்றும் போலீஸ் டிரம்மர் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் ரிக்கி கேஜும் இணைந்து […]Read More
மத்திய அரசு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட பிரபல திரைப்படப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சந்தேகத்துக்கு உரிய முறையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78. பூட்டிய நிலையில் இருந்த வீட்டில் இறந்துள்ளார். அவர் வீட்டுப் பணிப்பெண் பிற்பகல் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. போன் செய்தும் எடுக்கப்படாமலும் இருந்துள்ளது. காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு கதவைத் திறந்து பார்த்தபோது அவர் கட்டிலிலிருந்து விழுந்த நிலையில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. வாணி ஜெயராமன் தலையிலும் காயம் பட்டு ரத்தம் […]Read More
யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என எந்த பக்கம் போனாலும் சித்த மருத்துவத்தை குறித்து ஒரு பெண் மருத்துவர் பேசும் வீடியோ நம்மை கடந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் கட்டிப்போட்டு விடுகிறது. அவர்தான் ஷர்மிகா. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் சித்த மருத்துவ டிப்ஸ் சொல்வதன் வாயிலாகப் பிரபலமானவர். சமீபத்தில் அவர் அளித்த சில டிப்ஸ் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது வித்தியாசமான மருத்துவக் குறிப்புகள் மூலம் […]Read More
நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ராகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். அன்னாரது நினைவு நாள் இன்று. அவரது பிறந்த நாளை ஒட்டி மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள சகித் மினார் மைதானத்தில் நடக்கிற விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்கிறார். அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுபாஷ் சந்திரபோசுக்கு விழா கொண்டாட இருக்கிறது. இதையொட்டி ஜெர்மனியில் உள்ள நோதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ், தொலைபேசி வழியாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். […]Read More
தமிழக அரசின் கல்வி அமைச்சராகப் பத்தாண்டுகள் பொறுப்பு வகித்தவரும் தி.மு.க.வின் பொருளாளராகவும் இருந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நூற்றாண்டு நினைவு வாயில் திறப்பு விழா இன்று (19-12-2022) காலை நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே பேசும்போது “பள்ளிக் கல்வி வளாகம் பேராசிரியர் அன்பழகனார் வளாகம் என பெயர் சூட்டி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ், துரைமுருகன், […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!