Tags :சரித்திரத் தொடர்கதை

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 26 | ஜெயஸ்ரீ அனந்த்

அவமானத்தில் பயத்தில் கூனிக் குறுகி இருந்த அவனை அரசர், “எழுந்திரு சுமத்திரா” என்று அவனின் தோளைத் தொட்டுத் தூக்கினார்.  அவனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.  இருவரின் கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “என்ன நடந்தது? “ என்றார் அரசர். “ நானும் குயிலியும் மிகவும் பாதுகாப்போடுதான் பல்லக்கைக் கவனித்து வந்தோம். ஆனால், நம் வீரனாலேயே அரசர் தாக்கப்படுவார் என்று துளியும் நான் நினைக்கவில்லை” என்றான்.  அப்பொழுது தான் அரசர் முத்து வடுகநாதர் சிவகொழுந்தை […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 25 | ஜெயஸ்ரீ அனந்த்

வெற்றிவேல் வீரவேல்…. என்ற கோஷம் எழுப்பியபடி வீரர்கள் பல்லக்கை சுற்றி அரணாக நின்றார்கள். சில வீரர்கள் தங்களிடமிருந்த வாளை சிகப்பிமீது எரிந்து அவளை கொல்ல முற்ப்பட்டனர். அவள் அதை சாதுர்யமாக தடுத்தாள். பழக்கப்பட்ட கைகள் சுலபமாக எதிரிகளின் வாள்களையும் வேள்களையும் தடுத்தது. இருப்பினும் ஒரு சந்தர்பத்தில் அவள் கைகளிலிருந்த வாள் நழுவி கீழே விழுந்தது. ‘பிடியுங்கள் இவளை … ‘ என்ற படி வீரர்கள் அவளின் மீது பாய்ந்தனர். அவர்களை எல்லாம் கணப்பொழுதில் சூறாவளியைப்போல் சூழன்று தடுத்தவள்,  […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 24 | ஜெயஸ்ரீ அனந்த்

இந்த அத்தியாயத்திலிருந்து நாம் முத்துவடுகநாதரை அரசர் என்றே அழைக்கலாம்.  சிவக்கொழுந்தும் தன் பங்கிற்குக் கூடமாட அரசரின் மதிப்பைப் பெறுவதற்க்காக அவரின் கண்ணில் படும்படி முக்கிய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து வந்தான்.  குதிரைகளுக்குப் புல் வைப்பதும், விருந்தினர்களுக்கு உபச்சாரம் செய்வதும், குறுநில மன்னர்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்வதும்… இதை கண்ட குயிலி அவனிடத்தில், “ஐயா… வீரரே இந்த முறை இளவரசியை …. தவறு… தவறு… ராணியைக் கண்டதும் தாங்கள் மயங்கி விழாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. இது […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 23 | ஜெயஸ்ரீ அனந்த்

அச்சமயம் வீரன் ஒருவன் ஓலை ஒன்றைக் கொண்டு வந்தான். “ முதல் மந்திரிக்கு வணக்கம். நான் பிரான் மலையிலிருந்து வருகிறேன். அரசர் இதைத் தங்களிடம் சமர்ப்பிக்கச் சொல்லி கட்டளைஇட்டுள்ளார்.” என்றவன் பணிவுடன் ஒலையை முதன் மந்திரியிடம் தந்தான். அதை படித்த தாண்டவராயப்பிள்ளை முகத்தில் மகிழ்ச்சி ரேகை கரைபுரண்டு ஒடியது. உடனடியாக அமைச்சர்களுக்கு ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.  “ அமைச்சர்களே, நமது  இளவரசருக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. ஆகவே தாங்கள் அனைவரும் உடனடியாக பிரான்மலை செல்ல ஆயத்தமாக […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 22 | ஜெயஸ்ரீ அனந்த்

இளவரசரும், இளவரசியும் தம்பதி சமேதராகப் பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டிருந்த சமயம், “வெற்றிவேல், வீரவேல்” என்ற கோஷத்துடனும் வேல் மற்றும் வாள் பிடித்த விரர்களுடனும் சுமனும் குயிலியும் குதிரையில் வந்திறங்கினர். “இளவரசருக்கு வணக்கம்,” என்ற சுமனைப் பார்த்து, “நண்பா, வந்து விட்டாயா?” என்று அழைத்தவாறு இளவரசர் அவனை ஆரத்தழுக் கொண்டார். “தாமதமானாலும் சரியான சமயத்தில் தான் வந்து இருக்கிறோம்.” என்றவன், மரத்தினால் செய்யப்பட்டு வேலைப்பாடு நிறைந்த சிறு பேழை ஒன்றை இளவரசரிடம் தந்தான். “தமையன் இதைத் தங்களது […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 21 | ஜெயஸ்ரீ அனந்த்

வேலு நாச்சியாரின் கூரான கத்தி அவ்விளம் பெண்ணின் ஹிருதயத்தை ஆழமாகப் பதம் பார்த்தது. “வீல்…” என்ற அலறலுடன் அவள் தரையில் வீழ்ந்து மடிந்தாள். க்ஷணநேரத் தாக்குதலைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் “ஹோ…” என்று தன்னையறியாமல் அலறியும் விட்டனர். அவளுடன் வந்தவர்கள் இத்தகைய நிகழ்வைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் பயத்தில் மேடையை விட்டு மெதுவாக வெளியேறினர். “வேலு, நீ என்ன காரியம் செய்தாய்? நம்மால் காரியசித்தி பெற வந்தவர்களை நீ […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 20 | ஜெயஸ்ரீ அனந்த்

ப்ரான்மலையை வந்தடைந்த பல்லக்குகளில் சக்ரவர்த்தி செல்லமுத்துவின் பட்டமகிஷியானவளும், வேலு நாச்சியாரின் தாயாருமான ராணிமுத்தாத்தாளை, ராணி அகிலாண்டேஸ்வரியும், இளவரசி வேலுநாச்சியாரும் எதிர்கொண்டு வரவேற்றனர். ராணி முத்தாத்தாளுடன் வந்திருந்த செல்லமுத்துவின் தங்கை முத்து திருவாயி நாச்சியார், அகிலாண்டேஸ்வரியைக் கண்டவுடன் அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அகிலாண்டேஸ்வரி, இருவரையும் வரவேற்று, கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். “அனைவரும் நலம்தானே..? தங்கள் ஈசனின் திருத்தொண்டு எவ்வாறு இருக்கிறது..?” என்றார் அகிலாண்டேஸ்வரி. “அந்த ஈசனின் அருளால் அனைத்தும் மிக அற்புதமாகவே நடக்கிறது […]Read More

தொடர்

சிவகங்கையின் வீர மங்கை | 19 | ஜெயஸ்ரீ அனந்த்

“கெளரி, கெளரி” என அழைத்தும் கதவு திறக்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளான வைத்தியர், மகளுக்கு வாக்கு ஒன்றைத் தந்து விட்டார். “அம்மா… உன் மனச்சஞ்சலத்தை நான் அறிவேன். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை அமைய என்னால் ஆன முயற்சியை நான் மேற்கொள்ளுவேன். இல்லையேல் இதோ இங்கே வீற்றிருக்கும் ராஜேஸ்வரி ஆலயத்தின் முன்பாக நான் என்னை மாய்த்துக் கொள்வேன்..” என்றதும், “தந்தையே…” என்று கூக்குரலுடன் ஓடி வந்து தந்தையைக் கட்டிக் கொண்டாள். இதைக் கண்ட தாண்டவராயப் பிள்ளை ஸ்தம்பித்து நின்று […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 18 | ஜெயஸ்ரீ அனந்த்

குருக்கள் தக்ஷணாமூர்த்தி மங்களநாதருக்கு அபிஷேக ஆரத்தி முடிக்கும் தருவாயில் கோவிலுக்கு இரண்டு புதியவர்களை அழைத்துக் கொண்டு இசக்கி உள்ளே நுழைந்தான். புதியவர்களைக் கண்ட தக்ஷணாமூர்த்தி… “என்ன இசக்கி, ரொம்ப நாட்களாகி விட்டது உன்னைப் பார்த்து, உன் மனைவி சிகப்பி நலம்தானே..?” “எங்கே…. நானும் மங்களநாதரை பார்க்க வர வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் முடிவதில்லை. ஏதோ ஒரு வேலை வந்து விடுகிறது. இப்பொழுது கூட ஒரு வேலையாக தான் வந்துள்ளேன்” என்றான் இசக்கி. “வேலையாகவா..? என்ன […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 17 | ஜெயஸ்ரீ அனந்த்

சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றாள் குயிலி. அதற்குள் பாய்ந்து வந்து குயிலியை நெருங்கிய சுமன், ஸ்தம்பித்து நின்ற குயிலியின் தோளை உலுக்கி அவளை நினைவுக்குக் கொண்டு வந்தான். “குயிலி… என்ன சிலை போல் நின்று விட்டாய்..?” அவன் ஸ்பரிசம் பட்டதும் சடாரென்று நினைவு வந்தவளாய், “ஹ்ஹா… தாங்கள்…. தாங்கள்… உண்மையைக் கூறுங்கள். இத்தனை சிறப்பாக வளரி எறிகிறீர்களே..? தாங்கள் யார்..? யார் கூறி எங்களுக்கு அரணாக வந்துள்ளீர்..?” கேட்டவன் சுமனிடமிருந்து சற்று விலகி நின்றாள் . “நான் […]Read More