சிவகங்கையின் வீரமங்கை | 23 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 23 | ஜெயஸ்ரீ அனந்த்

ச்சமயம் வீரன் ஒருவன் ஓலை ஒன்றைக் கொண்டு வந்தான்.

“ முதல் மந்திரிக்கு வணக்கம். நான் பிரான் மலையிலிருந்து வருகிறேன். அரசர் இதைத் தங்களிடம் சமர்ப்பிக்கச் சொல்லி கட்டளைஇட்டுள்ளார்.” என்றவன் பணிவுடன் ஒலையை முதன் மந்திரியிடம் தந்தான். அதை படித்த தாண்டவராயப்பிள்ளை முகத்தில் மகிழ்ச்சி ரேகை கரைபுரண்டு ஒடியது.

உடனடியாக அமைச்சர்களுக்கு ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.  “ அமைச்சர்களே, நமது  இளவரசருக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. ஆகவே தாங்கள் அனைவரும் உடனடியாக பிரான்மலை செல்ல ஆயத்தமாக வேண்டும். எனக்கு இங்கு பல வேலைகள் இருப்பதால் என்னல் வர இயலாது. ஆகவே நீங்கள் அனைவரும் அரசருடன் உடனிருந்து இளவரசரின் பட்டாபிஷேக வைபவத்தை மிகச்சிற்ப்பாக நடத்தவேண்டும். “  என்றவர், அமைச்சர்கள், வீரர்கள் புடைசூழ விலை உயர்ந்த நன்கு பயிற்சி தரப்பட்ட இரட்டைக் குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்றில், நங்கு அலங்கரிக்கப்பட்டு, விலையுயர்ந்த ரத்தின பெட்டியில் மணிமகுடமும் வாளும் ஏற்றப்பட்டு அவைகள் பிரான்மலை நோக்கிச் சென்றன. வீரர்கள் கண்களை விட்டு மறையும் வரை காத்திருந்த தாண்டவராய பிள்ளை நீண்ட பெரு மூச்சு ஒன்றை உதிர்த்தார். பின், தனது அறை நோக்கி சென்றவர் தனது நம்பிக்கைக்கு உரிய காளிங்கனை அழைத்தார். முதன் மந்திரி அழைத்த செய்தி வந்ததும், அவசர அவசரமாக காளிங்கன், தாண்டவராயப்பிள்ளை இடத்திற்க்கு வந்தார். 

இடுப்பில் இறுக்கி இருந்த அங்கவஸ்திரம் அவனின் மரியதையை அமைச்சருக்கு தெரிவித்தது. பய பக்தியுடன் அவரின் முன் வந்து நின்றான். 

நிமிர்ந்து அவனை பார்த்தவர், தனது கைகளால் அவனை தன் பக்கம் இருத்தினார்.

“காளிங்கா… நீ என் சகோதரன் மாதிரி… ஒரு சமயத்தில் எனக்காக் உயிரையும் தரத்துணிந்தவன். உனக்கு நான் என்றும் கடைமைப்பட்டுள்ளேன். உன்னை போல் நம்பிக்கை நிறைந்த மனிதர்களால் தான் இன்றும் நம் தேசம் உயிர்ப்பித்து இருக்கிறது. “ என்றவர் நீண்ட பெருமூச்சை மறுபடியும் உதிர்த்தார். “காளிங்கா நான் எதிர்பார்த்தபடியே இளவரசர் பட்டத்துக்கு வந்துவிட்டார். இனி பவானியால் நாட்டுக்கு ஏதும் பயம் இருக்கப்போவதில்லை.  ஆனால் அதே சமயம் …. அரசருக்கு, “ இவ் வார்த்தை சொல்லும் சமயத்தில் தாண்டவராயரின் கண்கள் இரண்டும் அச்சத்தில் விரிந்தது. கைகள் சற்று நடுங்கின.

“ காளிங்கா… உன்னிடம் உண்மையை சொல்வதில் எனக்கென்ன தயக்கம்? .. நானும் என் மனதில் இத்தனை நாட்கள் சுமந்துக்கொண்டிருக்கும் பாரத்தை உன்னிடம் இறக்கி வைக்க ஆசைப்படுகிறேன். என்றவர், சற்று நிதானித்து,  ஆம்.. என் கணிப்பின் படி சசிவர்ணத்தேவரின் ஆயுட்காலம் முடியும் நேரம் நெருங்கி விட்டதாக எண்ணுகிறேன். ஏனெனில் வானில் தோன்றிய வால் நட்சத்திரம், ஒரு நன்மையையும் மற்றும் ஒரு தீமையையும் நடத்தும் ஆற்றல்கொண்டது.  அதன்படி நல்ல செய்தியாக இளவரசருக்கு விவாகமும் முடிந்த கையோடு அரியனை ஏறும் நேரமும் நெருங்கி விட்டது. அதே சமயம் வானில் வால் நட்சத்திரமும் தன் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அது முற்றிலும் தன் நிலையை இழப்பதற்க்குள் கண்டிப்பாக ஒரு அரசகுல உயிரை எடுத்து விடும் இது சர்வ நிச்சயம். இதை நினைக்கும் போது தான் என் நெஞ்சம் பதறுகிறது. இவ் இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்க்கு அன்னை ராஜராஜேஷ்வரி தான் எனக்கு உதவ வேண்டும். என்றவர், காளிங்கனை அழுத்திப்பிடித்தப்படி அரியணையில் சரிந்து அமர்ந்து விட்டார். 

தாண்டவராயப்பிள்ளையின் பதற்றத்தையும் நடுக்கத்தையும் தெரிந்துக்கொண்ட காளிங்கன், அவரிடம் தனது கைகளின் சைகையினாலும் கண்களின் மொழியினாலும், சில ஆறுதல்களை சொன்னான்.  ஆம் காளிங்கனுக்கு போர்க்களத்தில் காதும் நாக்கும் எதிரிகளால் துண்டிக்கப்பட்டது. அவனால் பேசவோ கேட்கவோ முடியாது. இதுவும் ஒரு காரணம், தாண்டவராயப்பிள்ளை இவனிடத்தில் தனது அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள… ஆனால் காளிங்கனுக்கு அவரின் வருத்தம் நன்றாகவே புரிந்தது. அவனுக்குத் தெரிந்தது, அம்பாளிடத்தில் முறையிடுதல் மட்டுமே.  ஆவேசமாக கிள்ம்பியவன். அரண்மனையினுள் வீற்றிருந்த மகிஷாஷுர மர்த்தினியிடம்சென்று அமர்ந்து தீவிரமாக தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தான்.  

ணிமகுடத்தை சுமந்து வந்த ரதம் வரும் வழி எங்கும் மக்கள் கூட்டம் அதிகரித்து வெற்றி வேல் வீரவேல் கோஷத்துடன் அதற்கு பூமாலை பொழிந்தனர்.  கணித்த நேரத்தில் வீரர்கள் பிரான் மலை வந்தடைந்தனர். பேரிக்கைகள் முழங்க, வாழ்த்து முழக்கங்கள் விண்னை முட்ட , சசிவர்ணத்தேவர் தனது ஒரேபுதல்வரான,  வேலுநாச்சியாரின் பதியுமான முத்து வடுகநாதரை எளிமையாக அரியணை ஏற்றினார்.  “ எனது சீமந்த புத்திரன், பட்டத்து இளவரசருமான, முத்துவடுகநாதர் இன்றையிலிருந்து சிவகங்கையின் மன்னராக பதவி ஏற்று மக்களை வழிநடத்துவார். இது உங்களுக்கு சம்மதம் தானே?”  என்று அங்கு கூடியிருந்த அவயோரை கேட்டதும், அனைவரும் ஒரு சேர சம்மதம் தெரிவித்தனர். அதன் பின் மேள தாளங்கள் முழங்க சசிவர்ணத்தேவர் மணிமகுடத்தை முத்து வடுகநாதருக்குச் சூட்டினார். மிக எளிமையாக முத்து வடுகநாதர், வேலுநாச்சியாருடன் அரியணை ஏறினார்.

அச்சமயம், அங்கு நிறைந்திருந்த மக்களோடு மக்களாக கண்களில் வெறியுடனும் தலையில் முக்காடுடனும் பவானியும் இந்நிகழ்ச்சியை மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பற்கள் நறநறத்துக்கொண்டிருந்தன.

–வீரமங்கை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...