Tags :க்ரைம் த்ரில்லர்

தொடர்

ஆசையின் விலை ஆராதனா | 9 | தனுஜா ஜெயராமன்

“எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு…நீங்க கொஞ்சம் வரமுடியுமா..?” என அனாமிகா கேட்டதையடுத்து.. “ஓ…ஷ்யூர்…இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்”…என்றான் அம்ரீஷ் சொன்னமாதிரி சரியாக அரைமணி நேரத்தில் அம்ரீஷ் வந்து விட்டான்… ஷேவ் செய்யாத முகத்தில் ஒரு வார தாடி. அது அவனை சற்று டல்லாக காட்டியது போல தெரிந்தது. முதலில் பார்த்ததை விட சற்று தெளிந்திருந்தான். ” உட்காருங்க எனக்கு சில தகவல்கள் வேணும்..ஆராதனாவை பற்றி”… என சேரை காட்டினாள். “ம்…கேளுங்க”…என சேரின் நுனியில் அமர்ந்தான். “உங்களோடது […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 12 | சுபா

பீஹாரில் நான் கொன்ற புத்திசுவாதீனமற்ற கணவன், தான் சாகப் போகிறோம் என்பதை உணராமலேயே, ஓர் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து, கடவுளிடம் சேர்வதற்காக நான் காட்டிய வழியான, குதித்தடைவது என்ற வழியைப் பின்பற்றிக் கீழே குதித்துச் செத்தான். சாவு என்பதையே உணராதவன். என் கைகளில் ரத்தக்கறை படியவில்லை. என் மேல் குற்றக்கறை படியவில்லை. போலீஸ், அவன் சித்தசுவாதீனமற்றவன் என்பதால் தற்கொலை செய்து கொண்டான் என்று ஃபைலை மூடிவிட்டது. ரத்தம் விரயமானதை நான் பார்க்கவே இல்லை. அவனுடைய படித்த மனைவி, […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 11 | சுபா

“ஏய்.” “……” “இதோடு பத்துமுறை கூப்பிட்டு விட்டேன். இந்த முறை நீ பதில் பேசாவிட்டால், நான் எழுந்து போய்விடுவேன்.” “ம்” என்றாள் உமா. நான், அவள் மடியில் தலைவைத்திருந்தேன். அவள், தன் இருகால்களையும் சோஃபாவில் இருந்து, கீழே தொங்க விட்டிருந்தாள். நான் கண்களை உயர்த்தி, அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் கலங்கி இருந்தன. “அழுகிறாயா என்ன?” என்று பதற்றப்பட்டுக் கொண்டு எழுந்து விட்டேன். “ம்.” “ஏன் உமா?” “என்னால் தாங்க முடியவில்லை சிவா.” “எது?” “இந்த ஒரு […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 10 | சுபா

அது ஒரு குகைப்பாதை. ஏழடி அகலம். ஏழடி உயரம். ஜெலட்டின் வெடிகளை வைத்துத் தகர்க்கப்பட்ட குகைப்பாதை. நீளமாக முடிவின்றிப் போய்க் கொண்டே இருந்தது. பாதையில் காலுக்குக் கீழே தண்டவாளம் ஒன்று ஓடியது. நாரே கேஜ் தண்டவாளம். தலைக்கு மேல் இரண்டு இரும்புக் குழாய்கள். நடக்க, நடக்க இரும்புக் குழாய்களும் நீண்டன. ஒரு குழாயில் காற்று. அழுத்தப்பட்ட காற்று. அந்தக் காற்று பாறைகளை ஓட்டை போடும் ட்ரில்லர் இயந்திரத்தை இயக்குவதற்குப் பயன்படுத்தலாம். மற்றபடி சுவாசிப்பதற்குப் பூமி மட்டத்திலிருந்து குளிரூட்டப்பட்ட […]Read More

தொடர்

ஆசையின் விலை ஆராதனா | 8 | தனுஜா ஜெயராமன்

ஆராதனாவின் கேஸ் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக போய்க் கொண்டிருப்பதாகவே தோன்றியது அனமிகாவிற்கு.. அந்த அம்ரீஷிடம் இன்று பேசியாக வேண்டும் என்று நினைத்தவள். அவன் லண்டனுக்கு போயிருப்பானா? அல்லது இந்தியாவில் தான் இருக்கிறானா? அடுத்த வாரம் தான் கிளம்புவதாக சொல்லியிருந்தான். எதற்கும் இருக்கட்டுமென.. வாட்சாப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினாள்.. “வேர் ஆ யூ? ஐ நீட் டூ டாக் வித் யூ? வென் யூ ஆர் ப்ரீ கால் மீ திஸ் நம்பர்” – […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 9 | சுபா

விஜி, தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களில் என்னை, வெகு சுலபமாகச் சேர்த்து விட்டான். என்னுடைய இயல்பான, கவர்ச்சியான, பெண்மை கலந்த சிரிப்பினால், சக தொழிலாளர்களைக் கவர்ந்து விட்டேன். தங்கபாண்டி, பீட்டர், மது, குமார், அபூபக்கர் எல்லோருமே என்னுடன் சகஜமாகப் பழகினார்கள். டீ சாப்பிட்டார்கள். சிகரெட் புகைத்தார்கள். சாராயம் குடித்தார்கள். என் சக தொழிலாளர்களிடம் எனக்குக் கொஞ்சம் செல்வாக்கு அதிகம் வேண்டும். நான் சுரங்கத்தில் விஜியை எப்படிக் கொல்வது என்று தீர்மானித்த பின், என் சக தொழிலாளர்கள் […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 8 | சுபா

நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தேன். டிக்கெட் கிழிப்பவன் கூட அங்கே இல்லை. எல்லாம் கீழ்த்தள காபி, டீ, கேக், பிஸ்கட், சிகரெட் விற்பனையில் மும்முரமாக இருந்தார்கள். நான், உமாதேவியின் கைப்பற்றி, அவளை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்தவனைக் காட்டினேன். அவள் மார்பை அழுத்திக் கொண்டாள். “இறந்து விட்டானா என்ன?” “இல்லை, சினிமா முடியும் வரை எழுந்திருக்க மாட்டான்” என்றேன். “யூ ஆர் கிரேட்.” “தியேட்டரில் இருட்டில் ஒரு முத்தத்துடன் சொல்” என்றேன். முதல் முறையாக நான் […]Read More

தொடர்

ஆசையின் விலை ஆராதனா | 7 | தனுஜா ஜெயராமன்

அனாமிகா ஜீப்பை ஸ்டேஷனை நோக்கிச் செலுத்தினாள். வித்யா பார்த்த அவன் யாராயிருக்கும் கேள்வி மண்டையை குடைந்தது. ஸ்டேஷனில் வைத்திருந்த CCTV புட்டேஜ் காபியை ஆராய்ந்தாள். சரியாக 12 மணி முதல் 2 மணிவரை ஆராய்ந்தாள். ஸ்விகி, சோமோட்டோ ஆட்கள் நிறைய பேர் போவதும் வருவதுமாக இருந்தனர். அது சரியாக மத்திய சாப்பாட்டு நேரம். அதனால் தாறுமாறாய் ஆர்டர்கள் பறந்து டெலிவரி ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்… க்கும் வீட்ல யாருமே இப்பொதெல்லாம் சமைக்கறதில்லை போல… என அங்கலாய்த்தபடி […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 7 | சுபா

எதற்கு வீணாக வளர்த்துக் கொண்டு? நான் போயிருந்த சமயம், அவள் கணவன் வெளியூர் போயிருந்தான். விஜயகுமார், நல்லவன். அதுதான், அவள் கணவன். அவளைக் காதலித்து மணந்தவன். ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸில் பதிவுத் திருமணம். தாலி எல்லாம் வேண்டாம். அது பெண்களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது போல என்று சொல்லி, விஜயகுமார், தான் ஒரு முற்போக்கானவன் என்று, அவளிடம் காட்டிக் கொண்டிருக்கிறான். அவனும், உமாதேவியும் கணவன் – மனைவி என்பதற்கு அடையாளமாக மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் என்று உமாதேவியைச் […]Read More

தொடர்

ஆசையின் விலை ஆராதனா | 6 | தனுஜா ஜெயராமன்

ஆராதனாவின் ப்ளாட்டில் அனாமிகா இன்ச் இன்ச்சாக அலசிக் கொண்டிருந்தாள். கூடவே ரவி மற்றும் அலெக்ஸூம் வேறு எதாவது கிடைக்குமா? என ஒருபுறம் ஆராய்ந்து கொண்டிருந்தனர். “ரவி.. ஆராதனா பத்து மணிக்கு இங்க வந்தாங்கன்னு சொல்றாங்க.. அவங்க வரும்போது செக்யூரிட்டி பாத்திருக்காங்க. அப்புறம் மூர்த்தி வேற போன் பண்ணி பேசியிருக்கார். நடுவில் அந்த ரித்தேஷ் வேற போன் பண்ணி பேசியிருக்கான். அவனையும் விசாரிக்கணும். கார்ல வரும்போது ஒரு முறை அம்ரிஷ் பேசியிருக்கார். நடுவில் கீழே போய் செகரெட்டரியை வேற […]Read More