ஆசையின் விலை ஆராதனா | 9 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 9 | தனுஜா ஜெயராமன்

“எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு…நீங்க கொஞ்சம் வரமுடியுமா..?” என அனாமிகா கேட்டதையடுத்து..

“ஓ…ஷ்யூர்…இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்”…என்றான் அம்ரீஷ்

சொன்னமாதிரி சரியாக அரைமணி நேரத்தில் அம்ரீஷ் வந்து விட்டான்… ஷேவ் செய்யாத முகத்தில் ஒரு வார தாடி. அது அவனை சற்று டல்லாக காட்டியது போல தெரிந்தது. முதலில் பார்த்ததை விட சற்று தெளிந்திருந்தான். ” உட்காருங்க எனக்கு சில தகவல்கள் வேணும்..ஆராதனாவை பற்றி”… என சேரை காட்டினாள்.

“ம்…கேளுங்க”…என சேரின் நுனியில் அமர்ந்தான்.

“உங்களோடது லவ் மேரேஜா? நீங்க ஆராதனாவை எங்க மீட் பண்ணிங்க?”

“யெஸ்… லவ் மேரேஜ் தான்.. நானும் ஆராதனாவும் ஒண்ணா காலேஜ்ல படிச்சோம்… அப்ப தான் தேர்ட் இயர்ல எங்க லவ் ஸ்டாட் ஆச்சு…அ ப்புறம் படிச்சி முடிச்சதும் நான் எங்க பிஸினஸ் பாத்துக்க லண்டன் போய்ட்டேன்.. ஆராதனாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆக வேறவழியில்லாம அந்த மேரேஜை ப்ரேக் பண்ணி தான் நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம்”…

“ம்… உங்க மேரேஜ் லைப் எப்படி போயிட்டிருந்தது?”

“இட்ஸ் அமேசிங்!… எல்லாருக்கும் வர்ற சின்னசின்ன சண்டைகள் மனஸ்தாபங்கள் தவிர ரொம்ப ஸ்மூத்தா தான் போயிட்டிருந்தது”..

“உங்களுக்கோ ஆராதனாவுக்கோ எதிரிங்க யாராவது இருக்காங்களா?”

“எங்களுக்கு அப்படி யார் எதிரிங்க இருக்கமுடியும்..? சான்ஸேயில்லை..நோ ஐடியா”..என உதட்டை பிதுக்கினான்.

“அப்ப ஏன் ஆராதனா கொலை செய்யப்பட்டாங்க..? அல்லது சூசைட்னாலும் ரிசன் வேணும்ல.”…

“அதான் எனக்கும் கன்ப்யூசனாவே இருக்கு.. இதுபத்தி எந்த முடிவுக்கும் என்னால வரமுடியலை”…

“ஓக்கே… உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் போட்டோவில் இருக்குற அந்த ஷெர்லி யாரு?”

“அவங்க எங்களோட லண்டன் வீட்டு நெய்பர்… ஆராதனாவும் ஷெர்லியும் ரொம்ப குளோஸ்… ஷெர்லி நம்ம ஊரை சேர்ந்தவங்க வேற”…

“ஓ.. ஐஸி… ஆராதனாவோட டெத் அவங்களுக்கு நியூஸ் அவங்களுக்கு தெரியுமா?”

“தெரியும்.. .நான் லண்டன்ல இருந்து கிளம்புறப்ப சொல்லிவிட்டு தான் வந்தேன்.. ரொம்பவே அழுதாங்க… அவங்களால் தாங்கவே முடியலை’..

“அவங்ககிட்ட நான் பேசமுடியுமா?”

“ஓ யெஸ்… வாட்சாப் போன் ரெண்டு நம்பருமே தர்றேன்… பேசுங்க”..

“அப்புறம் உங்களுக்கு ஆராதனா ப்ரண்ட் ரித்தேஷை தெரியுமா?”

“நல்லாவே தெரியும்”…என சிரித்தவன் அவன் ஆராதனாக்கு மட்டுமில்ல எனக்கும் ப்ரண்ட் தான்… நாங்க மூணு பேரும் காலேஜ்ல ஒண்ணா படிச்சவங்க.. இன்பார்ட்.. நான் செகண்ட் இயர்ல தான் அந்த காலேஜ்ல ஜாயின் பண்ணேன்.. பட், ரித்தேஷூம் ஆராதனாவும் நான் வர்றதுக்கு முன்னாடியே க்ளோஸ் ப்ரண்ட்ஸ்… நான் தான் நடுவில் வந்து அவங்களோட ஜாயின் பண்ணது”…

“நீங்க உங்க மேரேஜிற்கு பிறகு ரித்தேஷை மீட் பண்ணியிருக்கீங்களா?”

“ஓ யெஸ்.. நானும் சரி ஆராதனாவும் சரி எப்ப இந்தியா வந்தாலும் அவனை மீட் பண்ணுவோம்… இதுவரை நிறைய தடவை மீட் பண்ணியிருக்கோம்”…

“ரித்தேஷ் என்ன வேலை பாக்குறார்?”

“அவனுக்கு வேலை ஏதும் சரியா அமையலைன்னு சொன்னான்… இப்ப  ரீசண்டா கூட ஏதோ பிஸினஸ் பண்றதா சொல்லிகிட்டிருந்தான்”…

“ம்..… நீங்க திரும்ப எப்ப லண்டனுக்கு கிளம்புவீங்க?”

“இந்த வாரம் ஆராதனாவோட  காரியம் இருக்கு..அது முடிஞ்சதும் கிளம்பிடுவேன்”..

“பைனலா ஒரே ஒரு கேள்வி… அந்த மில்லேனியம் ஸ்டோன் ப்ளாட்டோட சாவி யார்ட்ட இருக்கு ?”


“அது… ம்… இரண்டு சாவி! ஒண்ணு மாமா கிட்ட. இருக்கு… இன்னொண்ணு பரணி இன்டீரியர் ஒர்க்குக்காக வாங்கிட்டு போனார்”..

“பரணி அதை உங்க ப்ரண்ட் யாரோ வந்து வாங்கியதாவும் அவர்ட்ட குடுத்துட்டதாகவும் சொல்லியிருக்காரே?”

“யா..யா… ஐ பர்காட் இட்… அது வீடு பாக்கணும்னு என் ப்ரண்ட் ஒருத்தர் கேட்டிருந்தார்… நான் தான் சாவி வாங்கிக்க சொல்லியிருந்தேன்”…

“சாவியை திரும்ப வாங்கிட்டீங்களா?”

“நோ… இன்னும் இல்லை”..

“அது எந்த ப்ரண்ட்.? அவரோட… பேர், நம்பர் சொல்லுங்க?”

“இருங்க… நம்பரை எடுத்து தரேன்”…

ஐந்து நிமிடம் அமைதியாக வெயிட் செய்ய…. கொஞ்ச நேரத்திற்கு பிறகு… “அவர் பேர் சுதீஷ்… நம்பர் நோட் பண்ணிக்கங்க.”.. என அவன் சொல்லிய நம்பரை குறித்துக் கொண்டாள்.

“ஓக்கே… தாங்யூ பார் யுவர் கோ- ஆப்ரேஷன் அம்ரிஷ்.. பர்தரா ஏதாவது டீடெயில்ஸ் தேவைபட்டா உங்களுக்கு நான் கால் செய்யறேன்”…


“எனி டைம்”.. என நன்றி சொல்லி கிளம்பினான்.

ல்வேறு யோசனைகள் மூளையை குழப்பி அடிக்க விடை தேடும் தவிப்புடன் அமைதியாக சேரில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்தாள்.

அப்போது அலெக்ஸ் ஓடிவந்து …” மேம்…அந்த ஸ்விகி டெலிவரி பாய் செல்வகுமார் உங்க கிட்ட ஏதோ சொல்லணுமாம்… லைன்ல இருக்கான்”..என மொபைலை நீட்டினார்.

“சொல்லுப்பா”… என்றாள் அனாமிகா .

“மேம்.. அன்னைக்கு அந்த ப்ளாட்ல ஒரு ஆள் சோபாவில் முதுகை காட்டி இருந்தார்னு சொன்னேன் இல்லை… அப்ப டீபாய் மேல் ஒரு பார்சல் ஒன்னு இருந்தது மேம்… அதுவும் பிரிக்காம இருந்தது. ஒருவேளை அப்ப வந்ததா கூட இருக்கலாம்.. இன்னைக்கு திடீரென என் ப்ரண்ட் ஒருத்தருக்கு வந்த பார்சலை பாக்கும்போது தான் ஞாபகம் வந்தது மேம்… நீங்க தான் சின்ன விஷயமா இருந்தாலும் சொல்லுன்னீங்களா… அதான் சொல்லிட்டேன் மேம்”..

“ரொம்ப தாங்ஸ் செல்வகுமார்.. நான் அதை பாத்துக்கறேன்.… இன்னமும் ஏதாவது ஞாபகம் வந்தா கூட மறக்காமல் போன் பண்ணி சொல்லுங்க”.

“சரிங்க மேம்”… என போனை வைத்தான்.

அன்னைக்கு வித்யா சொன்ன ஆளும் கையில் பார்சல் வைத்திருந்தை புட்டேஜ்ல பாத்தோம். ஆனா அவன் சீக்கிரம் இறங்கி கீழே வந்ததையும் பார்த்தோம். டைம் ஒரு 12.30 இருக்கும்… அதுக்கப்புறம் செல்வகுமாரும் ஆராதனாவை உயிரோட பாத்திருக்கான். ஆராதனா இறந்தது 1 மணியிலிருந்து 2 க்குள்ள… அவன் வேற ஆளாயிருந்தாலும்  இவனை கண்டுபிடிச்சா ஏதாவது புதுத்தகவல் கிடைக்கலாம். இவனை எப்படி கண்டுபிடிப்பது? என குழப்பமாக இருந்தது ஆராதனாவிற்கு.

திடீரென யோசனை வந்தவளாக அந்த ரித்தேஷை இன்று விசாரித்துவிடவேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு போன் செய்யுமுன்… அவனுக்கு ஆராதனா இறந்த விவரம் தெரியுமா? டெத்திற்கு வந்தானா? என யோசித்தவள்…

“ஹலோ!… அம்ரிஷ்…ஒரு சின்ன டவுட்..கேட்க மறந்திட்டேன். அந்த ரித்தேஷ் ஆராதனா டெத்திற்கு வந்தாரா?”

“ஓ.. யெஸ்… வந்திருந்தான்… என் கையை பிடிச்சிட்டு ரொம்ப அழுதான்”.

“நீங்க தான் அவருக்கு இன்பார்ம் பண்ணீங்களா? “

“இல்லையே… அவனே நியூஸ் தெரிஞ்சிட்டு வந்திருக்கலாம்”..

“ஓக்கே”… என யோசனையுடன் போனை வைத்தாள்.

கான்டக்ட் லிஸ்டை தேடி எடுத்து… ரித்தேஷ் நம்பருக்கு கால் செய்தாள்..

எதிர்முனையில், “ஹலோ” என்ற குரலை கேட்டதும்.. “ஹலோ மிஸ்டர் ரித்தேஷ்.. ”

“நான் ரித்தேஷ் தான் பேசுறேன்… நீங்க..?”

“நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் அனமிகா போசுறேன். ஆராதனா டெத் விஷயமா சில தகவல்கள் வேணும்.. உங்ககிட்ட பேசலாமா..?”

“ஓ.. யெஸ்.. கேளுங்க..”

“கொஞ்சம் விரிவான தகவல் வேணும்… உங்க அட்ரஸை அனுப்புங்க.. நேர்ல வர்றேன்… ”

“நேர்லையா..?” சற்று தயக்கத்துடன்… “சரி வாங்க… அட்ரஸை மெசேஜ்ல அனுப்பறேன்..” என்று போனை வைத்தான்.

இவனிடமிருந்தாவது ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்குமா? என யோசனையுடன் போனை வைத்தாள்.

–அனாமிகா வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...