ஆசையின் விலை ஆராதனா | 7 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 7 | தனுஜா ஜெயராமன்

னாமிகா ஜீப்பை ஸ்டேஷனை நோக்கிச் செலுத்தினாள். வித்யா பார்த்த அவன் யாராயிருக்கும் கேள்வி மண்டையை குடைந்தது.

ஸ்டேஷனில் வைத்திருந்த CCTV புட்டேஜ் காபியை ஆராய்ந்தாள். சரியாக 12 மணி முதல் 2 மணிவரை ஆராய்ந்தாள். ஸ்விகி, சோமோட்டோ ஆட்கள் நிறைய பேர் போவதும் வருவதுமாக இருந்தனர். அது சரியாக மத்திய சாப்பாட்டு நேரம். அதனால் தாறுமாறாய் ஆர்டர்கள் பறந்து டெலிவரி ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்… க்கும் வீட்ல யாருமே இப்பொதெல்லாம் சமைக்கறதில்லை போல… என அங்கலாய்த்தபடி அனாமிகா பொறுமையாய் பார்த்து கொண்டிருந்தாள்.

சரியாக 12.00 மணி வாக்கில் இளைஞன் ஒருவன் பார்சலை கையில் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். ப்ளாக் பேண்ட் ப்ளூசர்ட் அணிந்திருந்தான்.. ச்சே… அவன் ஹெல்மெட்டை கழற்றவில்லை. முகத்தை சரியாக காணமுடியவில்லை என்பது எரிச்சலாக வந்தது அனாமிகாவிற்கு.. ஆனால் அவன் ஹெல்மெட்டை லிப்ட் அருகில் வரும்போது கழற்றி இருக்க வேண்டும். அப்போது தான் அவனை வித்யா பார்த்திருக்கிறாள்.

இப்போது என்ன செய்வது?… அவனை ஹெல்மெட்டுடன் மொபைலில் ஒரு போட்டோவை எடுத்துக்கொண்டாள். ஆனால் அவன் ஒரு கால்மணி நேரத்தில் திரும்பக் கீழே வந்து பைக்கை எடுப்பது தெரிந்தது.

ஆனால் ஸ்விகி டெலிவரி பாய் செல்வகுமார் 12.45 மணிக்கு ஆராதனாவை உயிருடன் பார்த்திருக்கிறான். அப்போது சோபாவில் முதுகை காட்டி உட்கார்ந்திருந்தவன் யார்? எதற்காக வந்திருப்பான்?

“அப்ப அவன் வேற இவன் வேறவா? ச்சே!… ஜாண் ஏறினா மொழம் சறுக்குது.. திரும்பவும் ஆரம்பத்திலிருந்தா?” என ஆயாசமாக உணர்ந்தாள்..

மொபைல் ஒளிர.… அசிஸ்டெண்ட் கமிஷனர் லைனில்..

“என்னம்மா அனாமிகா! … அந்த ஆராதனா கேஸ் எவ்வளவு தூரம் வந்திருக்கு?”

“சார்!.. விசாரிச்சிட்டிருக்கோம் சார்!… எவிடேன்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிகிட்டிருக்கோம். கூடிய சீக்கிரம் குற்றவாளியை கண்டுபிடிச்சிருவோம்”

“சீக்கிரம் கண்டுபிடிங்க… அந்த வெங்கடாச்சலம் என்கூட காலேஜ்ல படிச்சவன்… ஆராதனா என் மக மாதிரி… நிறைய முறை போன் பண்ணிட்டான்.. கொஞ்சம் சீக்கிரம் பாரும்மா”…

“சார்!… இந்த வாரத்திற்குள் கண்டிப்பா முடிச்சிடுறோம் சார்”…. என பவ்யமாய் போனை வைத்தாள்..

ரவிக்கு டயல் செய்து… “ரவி! நீங்க எங்க இருக்கீங்க.”…

“மில்லினியம் ஸ்டோன்ல தான் மேம்… நான் ஆராதனா போனை செக் பண்ணேன்… அதிலிருந்து அமேசான் ஆர்டர் எதுவும் போகலை.. செக் பண்ணிட்டேன்”

“ஓக்கே, அலெக்ஸ் எங்க?”

“நீங்க கேஸ் விஷயமா அபார்மெண்ட்ல இருக்குற எல்லா வீட்ல விசாரிக்க சொல்லியிருந்தீங்க… அதான் இரண்டு பேரும் ஒவ்வொரு வீடா ஏறி இறங்கி விசாரிச்சிட்டிருக்கோம்.”…

“சரி.. அதை அப்பறம் பாத்துக்கலாம்… நீங்க அலெக்ஸைக் கூப்பிட்டுட்டு ஸ்டேஷன் வந்திருங்க”

“ஏன் மேடம்..?’

“ஏசி வேற போன் பண்ணி கேஸை சீக்கிரம் முடிக்க சொல்லுறார்… இந்த கேஸ்ல வேற எங்க தொட்டாலும் ஆரம்பக் கட்டத்துலையே வந்து நிக்குது… “இப்ப கிளம்பி வந்துடறோம் மேம்”

“சீக்கிரம் வாங்க… வேலையிருக்கு… நான் வெங்கடாச்சலத்தோட தங்கச்சி வீட்டுக்கு போய் அந்த விக்னேஷை விசாரிச்சிட்டு வரேன்”.

விக்னேஷின் வீடு அபிராமபுரம் நான்காவது தெருவில் இருந்தது. நல்ல வசதியான குடும்பமாக தோன்றியது. விக்னேஷிற்கு முப்பத்தியைந்து வயது எனச் சொல்லமுடியாமல் சின்ன பையனாக தெரிந்தான்.

விக்னேஷ் தனது மனைவி கவிதாவையும் அம்மா லலிதாவையும் அறிமுகப்படுத்தினான். கவிதாவும் அழகாக இளமையாகத் தான் இருந்தாள் . வெளியே நான்கு வயதான விக்னேஷின் மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்க!… என்ன தகவல் வேணும் உங்களுக்கு… கவிதா, காபி கொண்டு வா”… என மனைவியை உள்ளே அனுப்பினான்.

“ஆராதனா கேஸ் விஷயமாத்தான் வந்திருக்கேன்”…

“கேள்விப்பட்டேன்… ரொம்ப வருத்தமாகவும் சங்கடமாகவும் தான் இருக்குது”……

“ஆராதனாவை யார் கொன்னிருப்பாங்கன்னு நினைக்கறீங்க?”

“நோ ஐடியா”… என உதட்டை பிதுக்கினான். “அவளை பார்த்தே ஏழு வருஷம் ஆகுது” என்றான்.

“உங்களுக்கும் ஆராதனாவுக்கும் கல்யாணம் கூட நிச்சயம் செய்திருந்ததாக கேள்விப்பட்டோம்”..

“ஆமா!… மேடம்.. அதெல்லாம் ரொம்ப பழைய கதை. ஆராதனா என் மாமா பொண்ணுங்குறதால எனக்கு சின்ன வயசிலிருந்தே பழக்கம்.. ஆனா நீங்க நினைக்குறா மாதிரி காதல் கீதல் எல்லாம் எதுவுமே கிடையாது. ஐஸ்ட் வீட்ல பெரியவங்க டிசைட் பண்ணாங்க.. நான் ஓக்கே சொன்னேன்… தட்சால்.. ஆனா ஆராதனாக்கு இதுல விருப்பமில்லைன்னு தெரிஞ்ச அந்த விநாடியிலிருந்து நான் ஒதுங்கிட்டேன்”…

“ஆனா.. கல்யாணத்தை நிறுத்தினதுல உங்க குடும்பம் ரொம்ப அவமானமா பீல் பண்ணதா உங்க மாமா வெங்கடாச்சலம் சொன்னாரே”….

“உண்மை தான். அப்ப நாங்க கொஞ்சம் அவமானமா உணர்ந்ததென்னவோ உண்மை தான்.. ஏன் ஆராதனா மொதல்லையே இதை தவிர்த்திருக்கலாமேங்குற கோபம் கூட இருந்தது… நாளடைவில் எனக்கு வேற நல்ல வாழ்க்கை அமைஞ்சதில் அதை சுத்தமா வீட்லையும் மறந்துட்டாங்க.. நானும் தான்… இப்ப என் அழகான மனைவி குழந்தைன்னு ஹாப்பியா போகுது வாழ்க்கை” .. என தோளை குலுக்கினான்.

“என் பையனை வேண்டாம்னால்ல.. அவளுக்கு இந்த கதி தேவை தான் என்றாள் லலிதா ஆவேசமாக… அவளால எங்க அண்ணன் குடும்பத்தோட இன்னிய தேதிவரை சரியான பேச்சுவார்த்தை இல்லை.. தெரியுமா?”… என புலம்பினாள் லலிதா..

“ம்மா!… நீ வேற ஏன்மா… தேவையில்லாம பேசிகிட்டு… இன்ஸ்பெக்டர்இ நீங்க இதை சீரியஸா எடுத்துகாதீங்க.. அம்மா ஏதோ ஆதங்கத்தில் இப்படி சொல்றாங்க”…என சமாதானபடுத்தினான்..

அதற்குள் கவிதா காபியை புன்னகையுடன் நீட்ட… “தாங்ஸ்” என்றபடி காபியை உறிஞ்சினாள் அனாமிகா யோசனையுடன்.

“ஆராதனா இறந்த அன்னைக்கு நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்லமுடியுமா?”

“இன்பாக்ட், நாங்க நாலு நாளாக ஊரிலேயே இல்லை.. குடும்பத்தோட வயநாடு போயிருந்தோம். நேத்து தான் சென்னைக்கு வந்தோம். இன்னொன்று எங்களுக்கு எவ்வளவு கோபம் ஆராதனா மேல இருநதாலும் அதுக்காக அவளை நாங்க கொலை செய்யற அளவுக்கு எல்லாம் கிளம்ப போறதில்லை… அதுவும் இவ்வளவு வருஷத்திற்கு பிறகு”… என தோளை குலுக்கி சிரித்தான்.

“இது ஐஸ்ட் ஒரு பார்மாலிட்டி விசாரணை தான். எங்க டியூட்டியை தான் நாங்க செய்யறோம்…எனிவே ‘தாங்ஸ்’…காபிக்கு”… என சிரித்தபடி கிளம்பினாள் அனாமிகா.

” மை ஹம்பிள் ரிக்வெக்ஸ்ட்… நீங்க ஆராதனாக்கு என்ன நடந்ததுன்னு சீக்கிரமா கண்டுபிடிங்க… என்ன இருந்தாலும் எங்க மாமா மகள் அவ… எங்க மாமா அவளை சொந்த மகளை போல தான் வளர்த்தினாரு… அவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம். நானும் ஆராதனாவும் சின்ன வயசில் இதே வீட்டில் பலமுறை விளையாடிய ஞாபகம் அடிக்கடி வந்து போகுது… எனிவே சீக்கிரமே கண்டுபிடியுங்க மேடம்…ப்ளீஸ்” என வருத்தத்துடன் கூறினான்.

அந்த வருத்தமும் ஆதங்கமும் உண்மையாக தான் தோன்றியது அனாமிகாவிற்கு. ஆனால் போலீஸ் குணம் என்பது எப்போதும் சந்தேகத்துடன் அணுகுவதே வழக்கம் என மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

அனாமிகா வெளியே வந்ததும் விக்னேஷூம் லலிதாவும் காரசாரமாக விவாதித்து கொண்டது தெருமுனை வரை கேட்டது… இவர்கள் மேலும் ஒரு கண்ணை வைக்கவேண்டும் என மனதிற்குள் நினைத்தபடி ஜீப்பை கிளப்பினாள்.

இன்னமும் விசாரணை வளையத்திற்குள் வராதது ஒன்று இன்டீரியர் டெக்ரேட் செய்யும் பரணிதரன், மற்றொன்று அந்த ரித்தேஷ்…இருவரின் போன் நம்பரும் இருக்கிறதா என செக் செய்தாள். இதில் பரணிதரன் பாண்டிச்சேரியிலிருந்து வந்ததும் ஸ்டேஷனுக்கு வருவதாக சொல்லியிருக்கிறான். மீதமுள்ள அந்த ரித்தேஷையும் பார்த்து விசாரிச்சிடணும்.


அவர்கள் இருவரிடமும் ஏதாவது தகவல்கள் தேறினால் தான் கேஸை மேற்கொண்டு நகர்த்த முடியும் என்று தோன்றியது.

அம்ரிஷ் ஊருக்கு கிளம்பியிருப்பாரா? அவரிடமும் சில கேள்விகளுக்கு பதில் கேட்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டு பெரும் குழப்பத்தோடும் கேள்விகளோடும் யோசித்தபடியே ஜீப்பை ஸ்டேனுக்கு செலுத்தினாள்…

–அனாமிகா வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...