Tags :ஆன்மீக மர்மத் தொடர்

தொடர்

அஷ்ட நாகன் – 25| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் பற்றிய பல அரிய செய்திகளை இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முகப்பிலும் பார்த்து வந்துள்ளோம். இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை விஷயங்களும் இந்து மதத்தின் ஆனி வேராக கருதப்படும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. உண்மையில் நாக சாஸ்திரம் என்ற ஒரு நூல் உள்ளதா என்று கேட்டால் உண்டு என்று தான் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். “நாக சாஸ்திர ஏடுகள்” கண்டிப்பாக தெய்வீக நாகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 24| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் அவ்வளவு விஷயங்கள் உள்ளன.நாகங்கள் மீதும், நாக வழிபாட்டின் மீதும் முழு நம்பிக்கை வைத்து நீங்கள் வழிபட்டு வந்தால் நாகர்களின் அருளும் ஆசிர்வாதமும் கிடைப்பது சத்தியம். நாக வழிபாடு உலகம் முழுவதும் உள்ளது.அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பாதாள லோகத்திற்கான பாதை உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள மர்மமான…யாராலும் திறக்க இயலாத ரகசிய அறையை மிக அபூர்வமான அதீத […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 23| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் கனவில் வந்தால் என்னன்ன பலன் என்பதை இதற்கு முந்தைய அத்தியாயங்களில் “நாக சாஸ்திர ஏடுகளின்” மூலம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை மேலும் விளக்கிக் கூறுகிறேன். அவை, 1. ஒரு நாகப்பாம்பு படமெடுத்த நிலையில் ஒருவரின் கழுத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். மிகப்பெரிய செல்வ செழிப்பு ஏற்படும். 2. ஒருவரின் உடலையோ அல்லது காலையோ நாகம் சுற்றுவது போல் கனவு […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 44 | காலச்சக்கரம் நரசிம்மா

44. தரையில் இறங்காத விமானம் தனது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், மயூரி..! குகன்மணியை எவ்வளவு நம்பினாள்..? இதயத்தையே பறிகொடுக்கும் அளவுக்கு அல்லவா அவனையே சார்ந்து நின்றாள்..! இப்படிக் கழுத்தை அறுத்து விட்டானே..! வேதனையுடன் நடந்தவளை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது. “தண்டனை நிறைவேற்றப்பட்டது..!” –தனக்குப் பரிச்சயமான குரலைக் கேட்டு, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மயூரி..! சஷ்டி சாமிதான் சிரித்தபடி […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 22| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்களை ஈசன் தன் அணிகலன்களாக அணிந்துக் கொள்வதால் சிவபெருமானை “நாகாபரணன்” என்ற சிறப்பு பெயர்க் கொண்டு இறை அன்பர்கள் அன்போடு அழைப்பார்கள்‌.தில்லை நடராஜ மூர்த்தியின் திருமேனி முழுவதும் பாம்பணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாகாபரணம் அணிந்த தில்லை நடராஜரின் அழகில் மயங்கிய குமரகுருபரர் ஈசனைப் பற்றி அழகான பாடல் ஒன்று இயற்றியுள்ளார். அது… “திருமுடியில் கண்ணியும் மலையும்,திருமார்பில் ஆரமும் பாம்பு பெருமான்,திருவரையில் கட்டிய சக்கையும் பாம்பு,பெரும்புயத்தில் கங்கணமும் பாம்பு…” நீல நாகம் என்ற ஒரு வகை அபூர்வமான […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 43 | காலச்சக்கரம் நரசிம்மா

43. வசியமானான் வசீகரன்..! குகன் மணியின் பத்துமலை எஸ்டேட்..! “மயூரி..! தேஜஸை அமீர் ஆட்கள் கிட்டேருந்து மீட்டு, நம்மளைத் திருப்பி அழைச்சுக்கிட்டுப் போக தாத்தா வராரு..! நாம இனி ஒத்துமையா இருக்கணும்னு சொல்றாரு..! உன் அப்பா அம்மா கூட வராங்க..! அவங்க எல்லாரையும் தங்க வைக்க, ஏதாவது ஹோட்டல்ல ரூம் போடணும். நீ குகன்மணி கிட்டே சொல்லி, ஏற்பாடு செய்யறியா..?” –மிகவும் நல்ல பெண்ணாக, மெல்லிய குரலில் கனிஷ்கா பேச, மயூரி அவளை உற்சாகத்துடன் பார்த்தாள். “தாத்தா […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 21| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- சித்தர்களில் சிவபெருமானை ஆதி சித்தராக கருதி வழிபடுகின்றனர். அதைப்போலவே, சித்தர்களில் அகத்தியர் பெருமானை தலைமை சித்தராக “சித்தர் உலகம்” ஏற்றுக் கொண்டு போற்றி வருகிறது.அகத்தியரை ஆதி முனி,கும்ப முனி,அறிவன் மற்றும் குறு முனி என்று அழைக்கின்றனர். அகத்தியரை “குருமுனி” என முதன் முதலில் விளித்தவர் முருகப்பெருமான் ஆவார்.பின்னர், காலப்போக்கில் குருமுனி என்று பெயர் “குறுமுனி” என்று திரிந்து விட்டது. அகத்தியர் இராம பிரானுக்கு பல மந்திரங்களையும் தெய்வாம்சம் பொருந்திய வில்லையும், அம்பாரத் தூணியையும் கொடுத்து […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 42 | காலச்சக்கரம் நரசிம்மா

42. கடைசி வாய்ப்பு மூங்கில் மரத்தில் கனிஷ்கா ஊசலாடிக் கொண்டிருந்தாள்..! “மயூரி… என்னைக் காப்பாத்து..! ஐ பீல் கிட்டி..! விழுந்துடுவேன் போல இருக்கு..!” –கதறிக்கொண்டிருந்தாள் கனிஷ்கா. “கனிஷ்கா ஏன் மரத்து மேல ஏறினா..?” –திகைத்தாள் மயூரி.! “அவள் ஏறலை..! அவள் செய்த பாவங்கள் அப்படியே ஓங்கி வளர்ந்து அவளை அந்த நிலைக்குக் கொண்டு போயிடுச்சு..!” –புன்னகைத்தான் குகன்மணி. “என்ன சொல்றீங்க..? எனக்குப் புரியலை..” “அவள் தொங்கிகிட்டு இருக்கிறது, Bambusoideae- னு மலேசியா மலைகள்ல விளையற மூங்கில் மரம். […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 20| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- பாம்புகளைப் பற்றி அதர்வண வேதத்தில் சில முக்கியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அதர்வண வேதம் பாம்புகளை ‘அழகிய கயிறு’ என்று வர்ணிக்கிறது.கிராமங்களில் இன்றளவும் நாக பாம்பினை காண நேர்ந்தால் “அதோ பெரிசு போறதாக்கும்” என்று பயபக்தியுடன் தான் கூறுவார்கள். பழங்காலத்தில் பாம்பின் தலையில் வளரும் மாணிக்கக்கல் நஞ்சை முறிக்கும் என்று மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தொல்காப்பியச் சொல்லதிகார உரையில்,சேனாவரையர் “பாம்புண்ணிக்கல்” எனும் ஒரு கல் அந்த காலத்தில் விற்கப்பட்டதாகக் கூறுகின்றார். அது பாம்பின் நஞ்சை முறிக்கும் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 41 | காலச்சக்கரம் நரசிம்மா

41. திரிசங்கு சொர்க்கம் மலையுச்சியில் கனிஷ்கா அரங்கேற்றியிருந்த பயங்கரத்துக்குச் சாட்சியாக தலைகுனிந்து மூங்கில் மரங்கள் அமைதியுடன் நிற்க, அவற்றின் மலர்களில் இருந்து பனித்துளிகள் வழிய, அந்த மரங்கள் மௌனமாக மிதுனுக்குக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொண்டிருந்தன. விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரியைப் போன்று, மெதுவாக எட்டிப் பார்த்தான் சூரியன். சூரிய கிரணங்கள் போகர் பள்ளியின் வாயில் வழியாக குகைக்குள் எட்டிப்பார்த்து, இன்னமும் மூன்றாவது நவபாஷாணச் சிலையின் முன்பாக தியானத்தில் இருந்த மயூரியைத் தட்டி எழுப்பியது. ‘இப்படியும் ஒரு பக்தியா?’ […]Read More