அஷ்ட நாகன் – 20| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

பாம்புகளைப் பற்றி அதர்வண வேதத்தில் சில முக்கியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அதர்வண வேதம் பாம்புகளை ‘அழகிய கயிறு’ என்று வர்ணிக்கிறது.கிராமங்களில் இன்றளவும் நாக பாம்பினை காண நேர்ந்தால் “அதோ பெரிசு போறதாக்கும்” என்று பயபக்தியுடன் தான் கூறுவார்கள்.

பழங்காலத்தில் பாம்பின் தலையில் வளரும் மாணிக்கக்கல் நஞ்சை முறிக்கும் என்று மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தொல்காப்பியச் சொல்லதிகார உரையில்,சேனாவரையர் “பாம்புண்ணிக்கல்” எனும் ஒரு கல் அந்த காலத்தில் விற்கப்பட்டதாகக் கூறுகின்றார். அது பாம்பின் நஞ்சை முறிக்கும் வல்லமை கொண்டதாம்‌.அந்த காலத்தில் விற்பனைக்கு வந்த இந்தக் கல்,நஞ்சினை உறிஞ்சி உண்ணும் திறன் பெற்றது என்பதால் “பாம்புண்ணிக்கல்” என்று அழைக்கப்பட்டு புழக்கத்தில் இருந்ததாக அறிய முடிகிறது.

பாம்புகளை பிடிக்க பாம்பாட்டிகள் “சிறியாநங்கை” வேரை பயன்படுத்துவர்‌.சிறயா நங்கை செடியை வீட்டில் நட்டு வளர்த்து வந்தால் நாகங்கள் மட்டுமின்றி எந்த விஷ ஜந்துக்களும் வீட்டை அண்டாது.சிறயா நங்கை வாசம் பட்டதும் நாகங்கள் மூர்ச்சை அடைந்துவிடும்.

பாம்புப் புற்றை இடிப்பவர்கள் முதுமையில் மிகுந்த துன்பப்படுவர்.மேலும், ‘தொழுநோய்’ போன்ற கொடிய தோல் நோய்கள் தாக்கி மடிவர்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

பெளர்ணமி இரவு !

ஏலக்காய் சித்தர் விழிகளை மூடிய நிலையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

முருகேசன்,யோகினி மற்றும் அரவிந்தன் என மூவரும் ஏலக்காய் சித்தர் ஏற்படுத்திய மந்திர வளையத்தில் தனித்தனியாக அமர்ந்திருந்தனர்.

திடீரென திபுதிபுவென்று நல்ல பாம்புகள்,கரு நாகங்கள்,ராஜ நாகங்கள் என படமெடுத்து ஆடும் நாகங்கள் நான்கு திசைகளில் இருந்தும் வந்தன.

பயத்தின் காரணமாக முருகேசன் தன் கண்களை இறுக மூடியிருந்தான். ஆனால், அரவிந்தனும் யோகினியும் ‘ஆந்தை போல’ சிவலிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டம் கூட்டமாக வந்த ‘நாக படை’ சிவலிங்கத்தை நோக்கி சென்றன.

ஒவ்வொரு நாகத்தின் வாயிலும் வில்வ இலை இருந்தது‌.ஒவ்வொரு நாகமும் தன்வசமிருந்த வில்வ இலையை ஈசனுக்கு சமர்பித்து படமெடுத்த நிலையில் வணங்க ஆரம்பித்தன.

முதன் முறையாக இவ்வளவு நாகங்களை மிக அருகாமையில் பார்த்த அரவிந்தனுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.தப்பித்தவறி ஏதாவது ஒரு நாகம் தன்னை தீண்டிவிட்டால்,தன் கதி அதோ கதி தான் என்ற எண்ணங்கள் அவன் மனதில் உருண்டோடியது‌‌.

ஆனால் யோகினிக்கு, நாகங்கள் ‘நாகங்களாக’ காட்சியளிக்காமல் சித்தர்களாக காட்சியளித்தனர்.ஒவ்வொரு சித்தரும் தன் கைகளில் இருந்த வில்வ இலைகளைக் கொண்டு ஈசனை அர்ச்சித்து விட்டு மனமுருக வேண்ட ஆரம்பித்தனர்‌.

‘சித்தர்கள் இருக்கிறார்களா?’ என்ற கேள்வியுடன் இருந்த யோகினிக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு நாக சித்தர்களை பார்க்கவும் ஆச்சரியம் மிகுந்து ஆனந்த கண்ணீராக வெளிப்பட்டது.அவள் தன்னையறியாமலே தன் தலைக்குமேல் இருகரம் கூப்பி ஈசனையும் நாக சித்தர்களையும் ஒரு சேர வணங்க ஆரம்பித்தாள்.

நாக சித்தர்களும் யோகினியை ஆசிர்வதித்துவிட்டு வந்த வழியே செல்ல ஆரம்பித்தனர்.ராஜ நாக வடிவில் இருந்த ஒரு சித்தரைத் தவிர !

அரவிந்தனுக்கு நாகங்கள் நாகங்களாகவே காட்சியளித்தன.அவன் கண்ணிற்கு நாகங்கள் சித்தர்களாக தெரியவில்லை. அரவிந்தன் அரவங்களைக் கண்டு அரண்டு போயிருந்தான்.

நடப்பது எதுவும் அறியாத நிலையில் முருகேசன் தன் கண்களை இறுக மூடியிருந்தான்.

ஏலக்காய் சித்தர் தவத்தில் மூழ்கியிருந்தார்.

ராஜ நாக வடிவில் இருந்த ஒரு நாக சித்தர் யோகினியை நோக்கி வந்து தன் கரங்களை யோகினியின் சிரசில் வைத்து “சீக்கிரமே திருமணம் கைக்கூடும். மங்களம் உண்டாகட்டும்” என்ற யோகினியை ஆசிர்வதித்தார்.பதிலுக்கு யோகினி தன் கண்கள் பனிக்க “ராஜ நாக சித்த”ருக்கு நன்றி கூறினாள்.

அந்த காட்சி ஒரு ராஜ நாகமானது படமெடுத்த நிலையில் யோகினியின் தலையை தொடுவது போல அரவிந்தனுக்கு தெரிந்தது.

அடுத்து அந்த ராஜ நாகமானது அரவிந்தனை நோக்கி வந்தது‌.

அந்த ராஜ நாகம் அரவிந்தனின் முகத்திற்கு நேரே சுமார் மூன்று அடி உயரத்தில் படமெடுத்த நிலையில் காட்சியளித்தது.

அரவிந்தன் தன்னையறியாமலே பயந்து நடுங்கி ஏலக்காய் சித்தர் வரைந்த மந்திர வளையத்தை தாண்டி கண்முன் தெரியாமல் கொல்லிமலை காட்டில் ஓடினான்.அந்த ராஜ நாகமும் வனத்தில் எங்கோ ஊர்ந்து மறைந்தது.

அந்த காட்சியைக் கண்ட யோகினி பேரதிர்ச்சி அடைந்து “அரவிந்த்……” என்று மிக சப்தமாக கத்தி… கதறி‌…ஓலமிட்டாள்.

அவிளின் குரலைக் கேட்டு ஏலக்காய் சித்தரும் முருகேசனும் கண் விழித்தனர்.

பெளர்ணமி இரவு !

ஏலக்காய் சித்தர் விழிகளை மூடிய நிலையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

முருகேசன்,யோகினி மற்றும் அரவிந்தன் என மூவரும் ஏலக்காய் சித்தர் ஏற்படுத்திய மந்திர வளையத்தில் தனித்தனியாக அமர்ந்திருந்தனர்.

திடீரென திபுதிபுவென்று நல்ல பாம்புகள், கரு நாகங்கள், ராஜ நாகங்கள் என படமெடுத்து ஆடும் நாகங்கள் நான்கு திசைகளில் இருந்தும் வந்தன.

பயத்தின் காரணமாக முருகேசன் தன் கண்களை இறுக மூடியிருந்தான். ஆனால், அரவிந்தனும் யோகினியும் ‘ஆந்தை போல’ சிவலிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டம் கூட்டமாக வந்த ‘நாக படை’ சிவலிங்கத்தை நோக்கி சென்றன.

ஒவ்வொரு நாகத்தின் வாயிலும் வில்வ இலை இருந்தது‌. ஒவ்வொரு நாகமும் தன்வசமிருந்த வில்வ இலையை ஈசனுக்கு சமர்பித்து படமெடுத்த நிலையில் வணங்க ஆரம்பித்தன.

முதன் முறையாக இவ்வளவு நாகங்களை மிக அருகாமையில் பார்த்த அரவிந்தனுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.தப்பித்தவறி ஏதாவது ஒரு நாகம் தன்னை தீண்டிவிட்டால்,தன் கதி அதோ கதி தான் என்ற எண்ணங்கள் அவன் மனதில் உருண்டோடியது‌‌.

ஆனால் யோகினிக்கு, நாகங்கள் ‘நாகங்களாக’ காட்சியளிக்காமல் சித்தர்களாக காட்சியளித்தனர்.ஒவ்வொரு சித்தரும் தன் கைகளில் இருந்த வில்வ இலைகளைக் கொண்டு ஈசனை அர்ச்சித்து விட்டு மனமுருக வேண்ட ஆரம்பித்தனர்‌.

‘சித்தர்கள் இருக்கிறார்களா?’ என்ற கேள்வியுடன் இருந்த யோகினிக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு நாக சித்தர்களை பார்க்கவும் ஆச்சரியம் மிகுந்து ஆனந்த கண்ணீராக வெளிப்பட்டது.அவள் தன்னையறியாமலே தன் தலைக்குமேல் இருகரம் கூப்பி ஈசனையும் நாக சித்தர்களையும் ஒரு சேர வணங்க ஆரம்பித்தாள்.

நாக சித்தர்களும் யோகினியை ஆசிர்வதித்துவிட்டு வந்த வழியே செல்ல ஆரம்பித்தனர்.ராஜ நாக வடிவில் இருந்த ஒரு சித்தரைத் தவிர !

அரவிந்தனுக்கு நாகங்கள் நாகங்களாகவே காட்சியளித்தன.அவன் கண்ணிற்கு நாகங்கள் சித்தர்களாக தெரியவில்லை. அரவிந்தன் அரவங்களைக் கண்டு அரண்டு போயிருந்தான்.

நடப்பது எதுவும் அறியாத நிலையில் முருகேசன் தன் கண்களை இறுக மூடியிருந்தான்.

ஏலக்காய் சித்தர் தவத்தில் மூழ்கியிருந்தார்.

ராஜ நாக வடிவில் இருந்த ஒரு நாக சித்தர் யோகினியை நோக்கி வந்து தன் கரங்களை யோகினியின் சிரசில் வைத்து “சீக்கிரமே திருமணம் கைக்கூடும்.மங்களம் உண்டாகட்டும்” என்ற யோகினியை ஆசிர்வதித்தார்.பதிலுக்கு யோகினி தன் கண்கள் பனிக்க “ராஜ நாக சித்த”ருக்கு நன்றி கூறினாள்.

அந்த காட்சி ஒரு ராஜ நாகமானது படமெடுத்த நிலையில் யோகினியின் தலையை தொடுவது போல அரவிந்தனுக்கு தெரிந்தது.

அடுத்து அந்த ராஜ நாகமானது அரவிந்தனை நோக்கி வந்தது‌.

அந்த ராஜ நாகம் அரவிந்தனின் முகத்திற்கு நேரே சுமார் மூன்று அடி உயரத்தில் படமெடுத்த நிலையில் காட்சியளித்தது.

அரவிந்தன் தன்னையறியாமலே பயந்து நடுங்கி ஏலக்காய் சித்தர் வரைந்த மந்திர வளையத்தை தாண்டி கண்முன் தெரியாமல் கொல்லிமலை காட்டில் ஓடினான். அந்த ராஜ நாகமும் வனத்தில் எங்கோ ஊர்ந்து மறைந்தது.

அந்த காட்சியைக் கண்ட யோகினி பேரதிர்ச்சி அடைந்து “அரவிந்த்……” என்று மிக சப்தமாக கத்தி… கதறி‌…ஓலமிட்டாள்.

அவிளின் குரலைக் கேட்டு ஏலக்காய் சித்தரும் முருகேசனும் கண் விழித்தனர்.

– தொடரும்…

< பத்தொன்பதாம் பாகம்

3 thoughts on “அஷ்ட நாகன் – 20| பெண்ணாகடம் பா. பிரதாப்

  1. மிக அருமை அய்யா ஒவ்வோரு வரியும் கண் படக்காட்சியாக அமைந்தது நன்றிகள் கோடி வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன் அய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!