இந்தியாவின் மகள் லதா மங்கேஷ்கர்

 இந்தியாவின் மகள்                                           லதா மங்கேஷ்கர்

இந்திய இசையுலகின் ராணியாகவே 50 ஆண்டுகளுக்கும் மேல் ரசிகர்களை ஆட்சி செய்து வந்த லதா மங்கேஷ்கர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடும்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92ஆவது வயதில் (6-2-2022) இன்று காலை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு Breach Candy மருத்துவமனையில் 28 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முதலில் கொரோனா மற்றும் நிமோனியா தொற்று காரணமாக மருத்துவ மனையிலிருந்து உடல்நிலை தேறி வந்ததால் லதா மங்கேஷ்கருக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிகள் நீக்கப்பட்டு, ஆக்சிஜன் மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நேற்று மீண்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் ஐ.சி.யு.வில் வென்டிலேட்டர் கருவி களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை பற்றி Breach Candy மருத்துவனையின் Chief Executive officer ஆன சந்தானம் கூறுகையில், “கொரோனா நோயாளியாகத் தான் அவர் மருத்துவமனையில் வந்து சேர்ந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார். ஆனால் கொரோனா பிறகு பாதிப்பு களாலேயே அவரின் உடல்நிலை மோசமடைந்தது. வயது முதிர்வின் காரண மாக கொரோனா பாதிப்புகளால் அவரின் உடல் உறுப்புகள் பலவும் செய லிழந்தன. அதுதான் அவர் உயிரிழக்க காரணமாக அமைந்துவிட்டன.

இன்று (6-2-2022) காலை 8.12 மணிக்கு லதா மங்கேஷ்கரின் உயிர் பிரிந்தது. அவரது உடலைக் கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரு கின்றன. மருத்துவமனையிலிருந்து நேராக சிவாஜி பார்க்கிற்கு லதா மங்கேஷ் கரின் உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக் காக அவரின் உடல் வைக்கப்பட உள்ளது” என்றார்.

மங்கேஷ்கரின் இசை வாழ்க்கை

1940களில் தொடங்கி, 1970கள் வரை லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, சுரையா, ஷம்ஷத் பேகம், உஷா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகமது ரஃபிக், முகேஷ், தலத் முகம்மது, மன்னா தேய், ஹேமந்த் குமார், ஜி.எம். துர்ராணி, மகேந்திர கபூர் ஆகியோருடன் இணைந்து பட பாடல்களைப் பாடி உள்ளார். 1964ம் ஆண்டு மைன் பி லடுக்கி ஹுன் படத்தில் சந்தா சே ஹோகா பாடலை பி.பி.ஸ்ரீநிவாசுடன் இணைந்து பாடினார் லதா மங்கேஷ்கர்.

லதா மகேஷ்கருடன் இணைந்து பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடிய முகேஷ் (1976), முகம்மது ரஃபி மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் 1980 களிலும் உயிரிழந்தனர். அதன் பிறகு ஷபீர் குமார், சைலேந்திர சிங், முகேஷின் மகன் நிதின் முகேஷ் ஆகியோருடன் இணைந்து பாடினார் லதா. மன்கஹரி உதாஸ், கிஷோர் குமாரின் மகன் அமித் குமார், முகம்மது ஆசிஸ், வினோத் ரதோத், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருடன் இணைந்து பாடினார்.

1990களில் ரூப் குமார் ரதோத், ஹரிஹரன், பங்கஜ் உதாஸ், முகம்மது ஆசிஸ், அபிஜித் பட்டாச்சாரியா, உதித் நாராயண், குமார் சானு, சுரேஷ் வத்கர் போன்ற மூன்றாம் தலைமுறை பாடகர்களுடன் இணைந்து டூயட் பாடல்களைப் பாடினார் லதா மங்கஷ்கர்.

1990களில் தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே படத்தில் வரும் “Mere Khwabon Mein Jo Aaye”, “Ho Gaya Hai Tujhko To Pyaar Sajna”, “Tujhe Dekha To Yeh Jana Sanam”, மற்றும் “Mehndi Laga Ke Rakhna போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக குறிப்பிடப்பட வேண்டியவை.

2000களில் உதித் நாராயண், சோனு நிஜாம் ஆகியோருடன் இணைந்து பல டூயட் பாடல்களைப் பாடினார் லதா. 2005-06 ஆண்டுகளில் லதா மங்கேஷ்கர் பாடியதில் பலருக்கும் தெரியாத பாடல்கள் என்றால், Bewafa படத்தில் கெய்சி பியா சே, லக்கி : நோ டைம் டு லவ் படத்தில் அத்னன் சாமியுடன் இணைந்து ஷாயத் யேஹி து பியார் ஹேய், 2006 ல் ரங் தே பாசந்தி படத் தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லுக்கா சுப்பி பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார்.

புகர் படத்திற்காக ஏக் து ஹி பரோசா பாடலை பாடினார். நான்காம் தலை முறையாக வீர் ஜாரா படத்தில் உதித் நாராயணன், சோனு நிஜாம், ஜக்ஜித் சிங், ரூப் குமார் ரதோத், குர்தாஸ் மான் ஆகியோருடன் இணைந்து பாடினார். 2014ல் துன்னோ ஒய்2 படத்திற்காக ஜீனா ஹேய் கியா என்ற பாடல் சமீபத்தில் ஹிட்டான லதா மங்கேஷ்கரின் பாடல்களில் ஒன்று.

மதிப்புறு விருதுகள்

1959ம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்ஃபேர் விருது மதுமதி படத்திற்காக பெற்றார் லதா மங்கேஷ்கர். அதனை தொடர்ந்து, 1963ம் ஆண்டு பீஸ் சால் பேட் படத்திற்காக பிலிம்ஃபேர் விருது பெற்றார். 1966ம் ஆண்டு வெளியான கண்டன், அதே ஆண்டு வெளியான சாதி மனசா படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகி மற்றும் இசையமைப்பாளர் என இரு விருதுகளை அள்ளினார்.

பத்ம விருதுகள்

1969ம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்ற லதா மங்கேஷ்கர் 1989ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது பெற்றார். 1993ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பிலிம்ஃபேரின் ஏகப்பட்ட சிறப்பு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை போல, பல்வேறு மொழிகளிலும் சிறந்த பின்னணிப் பாடகி உள்ளிட்ட பல வகையான விருதுகளை வென்றுள்ளார்.

1972ம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை Parichay எனும் படத்திற்காகப் பெற்றார் லதா மங்கேஷ்கர். 1974ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் (அதிகமான பாடல்களை ரெக்கார்டு செய்தவர்). கோரா ககாஸ் படத்திற்காக 1974ம் ஆண்டு தேசிய விருது வென்றார். 1990ம் ஆண்டு லெகின் படத்தின் பாடலைப் பாடியதற்காக தேசிய விருது வென்றார். 1999ஆம் ஆண்டு என்.டி.ஆர். தேசிய விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப் பட்டது.

2000ம் ஆம் ஆண்டு IIFA சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. 2001ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு மகாராஷ்ட்ரா ரத்னா விருது பெற்ற முதல் நபர் இவர்தான். 2002ம் ஆண்டு ஆஷா போஸ்லே விருது பெற்ற முதல் நபரும் இவர்தான். 2007ம் ஆண்டு பிரான்ஸ் நாடு அந்த நாட்டின் உயரிய விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது. எல்லாவற்றை யும் விட கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவின் மகள் என்கிற விருது அவரது 90வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசாங்கம் வழங்கியது குறிப் பிடத்தக்கது.

உடலால் மறந்தார் மங்கேஷ்வர். ஆனால் குரலால் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...