இன்றைய ராசி பலன்கள் – 07.02.2022

 இன்றைய ராசி பலன்கள் – 07.02.2022

ராசி- பலன்கள்

தை : -25 | திங்கள்- கிழமை

🔯 மேஷம் -ராசி: 🐐
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப பொறுப்புகள் அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️அஸ்வினி : இழுபறிகள் குறையும்.
⭐️பரணி : புதுமையான நாள்.
⭐️கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————–

🔯 ரிஷபம் -ராசி: 🐂
நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 8.
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும்.
⭐️ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
⭐️மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.
—————————–

🔯 மிதுனம் -ராசி: 👫
விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9.
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️திருவாதிரை : முயற்சிகள் அதிகரிக்கும்.
⭐️புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
——————————

🔯 கடகம் -ராசி: 🦀
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️புனர்பூசம் : சுறுசுறுப்பான நாள்.
⭐️பூசம் : தாமதங்கள் அகலும்.
⭐️ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.
——————————

🔯 சிம்மம் -ராசி: 🦁
ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

⭐️மகம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.
⭐️உத்திரம் : இழுபறிகள் குறையும்.
——————————

🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மதிப்பு உயரும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
⭐️சித்திரை : மந்தமான நாள்.
——————————

🔯 துலாம் -ராசி: ⚖
வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

⭐️சித்திரை : அனுபவம் மேம்படும்.
⭐️சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
⭐️விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
——————————

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
⭐️கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
——————————

🔯 தனுசு -ராசி: 🏹
பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மூலம் : அனுபவம் உண்டாகும்.
⭐️பூராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : ஆதரவான நாள்.
——————————

🔯 மகரம் -ராசி: 🐎
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திராடம் : கவலைகள் நீங்கும்.
⭐️திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : எதிர்ப்புகள் விலகும்.
——————————

🔯 கும்பம் -ராசி: ⚱
வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். ஆசைகள் நிறைவேறும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அவிட்டம் : திருப்தி உண்டாகும்.
⭐️சதயம் : லாபகரமான நாள்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
——————————-

🔯 மீனம் -ராசி: 🐠
நண்பர்களின் வருகை மன நிறைவை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தனவரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்வாக்கு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்.

⭐️பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
⭐️உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
⭐️ரேவதி : அனுசரித்து செல்லவும்.
┈┉┅━•• 🔔🔔 ••━┅┉┈

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...