சொத்து சேர்க்காத இந்தியப் பிரதமர்
94 வயது முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். வாடகை செலுத்தாத தால் வீட்டிலிருந்து பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி, குவளைகளை வெளியே தூக்கி எறிந்தார் வீட்டு உரிமையாளர். வீடு, பூட்டு பூட்டித் தொங்கியது. வாடகை செலுத்த சிறிது அவகாசம் கொடுக்கு மாறு உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்தார் முதியவர். அக்கம்பக்கத்தினரும் முதியவரைக் கண்டு பரிதாபப்பட்டு, வாடகை செலுத்த சிறிது அவகாசம் கொடுக்குமாறு நில உரிமையாளரிடம் பரிந்துரைத்தனர். நில உரிமையாளர் சிறிது அவகாசம் கொடுத்தார். முதியவர் தனது உடைமைகளை உள்ளே எடுத்துச் சென்றார். 1994, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு நாளித ழின் முதல் பக்கத்தில் இந்தச் செய்தி புகைப்படத்துடன் “பரிதாபகரமான வாழ்க்கை நடத்து கிறார் குல்சாரிலால் நந்தா” என்று பிரசுரமாகி இருந்தது. அவர் வேறு யாருமல்ல, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர இந்தியாவில் இரண்டு முறை பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தாதான் அவர்.
(நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்தவர் இரண்டு முறை பிரதமராகவும் இருந்தவருக்கு ஒரு சொந்த வீடுகூட இல்லையா? என்று இந்தக் காலத்தில் கேட்கவேண்டிய கேள்விதான்.)
அடுத்த நாளே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வீடுகளுக்கு வாகனத் துடன் அனுப்பினார் அப்போதைய பிரதமர். இத்தனை வி.ஐ.பி. வாகனங்கள் பறந்துவந்ததைக் கண்டு நில உரிமையாளர் திகைத்துப் போனார். அப்போது தான் அவருக்குக் குடியிருப்பவர் குல்சாரிலால் நந்தா. இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்று தெரிய வந்தது. நிலக்கிழார் உடனடியாக குல்சாரிலால் நந்தாவின் பாதத்தில் விழுந்து வணங்கினார்.
தூய்மையான வாழ்க்கை
சுந்திரப்போராட்ட வீரர்களுக்கான சலுகை குல்சாரி லால் நந்தாவுக்கு மாதம் ரூ.500 சலுகை கிடைத்தது. ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சலுகை பெற போராடவில்லை என்று கூறி அந்தப் பணத்தை நிராகரித்தார். பின்னர் நண்பர்கள் அவரிடம் வேறு எந்த மூலமும் இல்லை என்று கூறி ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினார்கள். இந்தப் பணத்தை வைத்து அவர் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தார்.
குல்சாரி இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964இல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
குல்சாரிலால் நந்தா கடந்துவந்த பாதை
குல்சாரி லால் நந்தா 1898 ஜூலை4ம் தேதி பிறந்தார். அவர் லாகூர், ஆக்ரா, அலகாபாத் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். 1920 முதல் 1921 வரை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தார். 1921ல், பம்பாயின் தேசிய கல்லூரியில் பொருளாதார துறை பேராசிரிய ரானார். அதே ஆண்டு அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1922-ல் அகமதாபாத் ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் செயலர் ஆனார். 1946 வரை அவர் இங்கு பணிபுரிந்தார். 1932-ல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் சிறைபிடிக்கப்பட்டார். மீண்டும் 1942 முதல் 1944 வரை அதே காரணத்திற்காக அவர் சிறை வைக்கப்பட்டார்.
1937-ல் நந்தா பம்பாய் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 முதல் 1939 வரை பம்பாய் அரசின் நாடாளுமன்ற செயலராக (தொழிலாளர் மற்றும் கலால்) பணிபுரிந்தார். பின்னர் 1946 முதல் 1950 வரை பம்பாய் அரசின் தொழி லாளர் நல அமைச்சராகப் பணியாற்றிய அவர் தொழிலாளர் பிரச்சினை கள் மசோதாவை பம்பாய் சட்டமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றினார். கஸ்தூரிபாய் நினைவு அறக்கட்டளையின் செயலராகவும், ஹிந்துஸ்தான் மஸ்தூர் சேவக் சங்கத்தின் செயலராகவும், பம்பாய் வீட்டு வசதி வாரியத் தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். இந்திய தேசிய வர்த்தக யூனியன் காங்கிரஸை அமைக்கத் தூண்டுகோலாக இருந்த அவர் பிறகு அதன் தலைவரானார்.
1947-ல், ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச உழைப்பாளர் மாநாட்டிற்கு அரசின் பிரதிநிதியாகச் சென்றார். இந்த மாநாட்டுக் குழுவால் நியமிக்கப்பட்டு சங்கத்தின் குழுவில் அவர் பணிபுரிந்தார். உழைப்பாளர் நலன் மற்றும் வீட்டு வசதி சூழ்நிலை குறித்து பயில ஸ்வீடன், பிரான்ஸ், சுவிஸ்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார்.
மத்திய திட்ட குழுவின் துணை தலைவராக 1950 மார்ச் மாதம் பதவியேற் றார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசின் திட்ட அமைச்சராக நியமிக்கப் பட்டார். நீர்பாசனம், எரிசக்தி துறையின் கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 1952 பொது தேர்தலின் போது மக்களவைக்கு பம்பாய் தொகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடியும் அவர் திட்டம், நீர்பாசனம் மற்றும் எரிசக்தி துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1955-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற திட்ட ஆலோசனை குழுவிற்கும் 1959-ல் ஜெனிவா வில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டிற்கும் சென்ற இந்திய பிரதிநிதி குழுவிற்கு இவர் தலைவராக இருந்தார்.
திரு. நந்தா 1957-ல் நடைபெற்ற பொது தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பின ராகத் தேர்வு செய்யப்பட்டார். மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை மற்றும் திட்ட அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, திட்ட குழுவின் துணைத் தலைவராகப் பதவியேற்றார். 1959ம் ஆண்டு பெடரல் ரிப்பப்ளிக் ஆப் ஜெர்மனி, யூகோஸ்லோவியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
1962ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா தொகுதி யிலிருந்து அவர் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் ‘காங்கிரஸ் போரம் பார் ஸோஷியலிஸ்ட் ஆக்வின் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார். 1962, 1963-ல் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராகவும், 1963 முதல் 1966 வரை மத்திய உள்துறை அமைச்ச ராகவும் அவர் பணியாற்றினார்.
இத்தனை சிறப்புமிக்க செல்வாக்கு மிக்க இவர் கடைசி வரையில் சுதந்திரப் போரட்ட வீரர்களுக்கான பென்சன் தொகையான ரூபாய் ஐந்நூறிலேயே குடும்பம் நடத்தினார். அவர் இறந்த 23ம் ஆண்டு நினைவு அஞ்சலி.