இன்றைய ராசி பலன்கள் – 08.02.2022

 இன்றைய ராசி பலன்கள் – 08.02.2022

ராசி- பலன்கள்

தை : -26 | செவ்வாய் – கிழமை

மேஷம்

நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன், பொருள் சேர்க்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
—————————————

ரிஷபம்

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளுடன் காணப்படுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : நெருக்கடியான நாள்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
—————————————

மிதுனம்

பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதியவர்கள் நண்பர்களாவார்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தலையீடுகளை தவிர்க்கவும்.
—————————————

கடகம்

குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : தாமதங்கள் குறையும்.
ஆயில்யம் : வரவு உண்டாகும்.
—————————————

சிம்மம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆலய வழிபாடுகளால் மனதிற்கு திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய இலக்குகள் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : திருப்தியான நாள்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

கன்னி

வியாபார ரீதியான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். வாகன பயணங்களின் மூலம் அலைச்சலும், புதுவிதமான அனுபவமும் ஏற்படும். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : அனுபவம் பிறக்கும்.
சித்திரை : விருப்பம் நிறைவேறும்.
—————————————

துலாம்

செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் தேவையற்ற வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
—————————————

விருச்சிகம்

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். ஆதரவான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : போட்டிகள் குறையும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.
—————————————

தனுசு
பிப்ரவரி 08, 2022

புதிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : எதிர்ப்புகள் குறையும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
—————————————

மகரம்
பிப்ரவரி 08, 2022

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அவிட்டம் : லாபம் மேம்படும்.
—————————————

கும்பம்

தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : மரியாதை அதிகரிக்கும்.
—————————————

மீனம்

எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.
ரேவதி : ஆதரவு பெருகும்.
—————————————

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...