Tags :ம சுவீட்லின்

முக்கிய செய்திகள்

பாரத் பந்த்:

தொடங்கியது வேலைநிறுத்தப் போராட்டம்; செவிசாய்க்குமா மத்திய அரசு?       பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று அழைப்பு விடுத்துள்ளன.     இந்த உலகம் உழைப்பால் உருவானது என்று கூறினால் அது மிகையல்ல. அத்தகைய உழைப்பை செலுத்திய தொழிலாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டிய சம்பந்தப்பட்ட அரசுகளின் கடமை.     அந்த வகையில் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக தொழிலாளர் நல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.     […]Read More

நகரில் இன்று

நடந்துசென்ற பெண் தீப்பற்றி பலி;

நடந்துசென்ற பெண் தீப்பற்றி பலி; ஆதரவிழந்த மனம்நலம் குன்றிய மகன்      சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், நடந்து சென்ற பெண் மீது தீப்பற்றி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை சூளைமேடு அவ்வை நகரைச் சோ்ந்தவா் லீமா ரோஸ் (35). இவா், சனிக்கிழமை இரவு புதுமேற்கு தெருவில் உள்ள மளிகை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.    அப்போது தெருவோரத்தில் […]Read More

நகரில் இன்று

ஆத்தூர் அருகே கார்-லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில், சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரியும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.    சேலம் ஆத்தூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது காரும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.    கார் ஓட்டுநர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த […]Read More

கைத்தடி குட்டு

ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை தேதி விரைவில் அறிவிப்பு…..

    இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்திய வருவதற்கு திட்டமிட்டிருந்தார். இருநாடுகளின் உறவு தொடர்பாக நடைபெறும் வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் குவாஹட்டியில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.    ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பான் பிரதமரின் பயணத் […]Read More

முக்கிய செய்திகள்

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி:

இஸ்ரோ தலைவர் சிவன்:     பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 600 கோடி ரூபாயில் சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.    பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 திட்டத்தின் போது பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாகக் கட்டிப்பிடித்ததால், அழுதுவிட்டேன்.    தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிவிட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். […]Read More

பாப்கார்ன்

நீட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

   எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது.    இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த […]Read More

நகரில் இன்று

புதுக்கோட்டை அருகே வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மரணம்

நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் வாக்குப்பதிவு நாளன்று மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக மோ.மல்லிகா (42) என்பவர் போட்டியிட்டார்.    இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு வேட்பாளர் மோ.மல்லிகா திடீரென மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.Read More

முக்கிய செய்திகள்

விமான உற்பத்தி ஆலையில் வெடிவிபத்து: 12 பேர் காயம்

  அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டா நகரில் அமைந்துள்ள ஒரு விமான உற்பத்தி ஆலையில் நைட்ரஜன் எரிவாயுக் குழாயில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக சுமார் 12 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   ஒற்றை மற்றும் இரட்டை இன்ஜின் விமானங்களை தயாரிக்கும் டெக்ஸ்ட்ரான் ஏவியேஷனுக்கு சொந்தமான பீச் கிராஃப்ட்ஸ் ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.   விடுமுறை காலம் என்பதால் ஆலை மூடப்பட்டதால் பெருமளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக […]Read More

முக்கிய செய்திகள்

வருமான வரி வரம்பை உயர்த்தினால், மற்ற சலுகைகள் கிடையாது!

   வீட்டுக்கடன், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு கிடைக்கும் வரி விலக்கு சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.  ஹைலைட்ஸ் பட்ஜெட் 2020-21-ல் வருமான வரி அடுக்குகளும் புதுப்பிக்கப்பட வாய்ப்பு. வாங்கும் சக்தியை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல். நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் 2வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 2020-21 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு  சலுகைகளை ரத்து செய்துவிட்டு வருமான வரி  வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி வரம்பு    சில மாதங்களுக்கு முன் […]Read More

அண்மை செய்திகள்

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்களே:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்:   ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள 130 கோடி 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே கருதுகிறோம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.     தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 நாளாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசுகையில், இந்தியா, பாரம்பரியமாகவே இந்துத்துவாவாதி நாடாகத்தான் இருந்து வருகிறது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது […]Read More